cinema

img

சீனத்தில் தமிழ்க் கனா...

நடிகரும், பாடலாசிரியருமான அருண்ராஜ் காமராஜ் முதன்முதலில் இயக்குநராக அறிமுகமான படம் கனா. இதனைத் தயாரித்த சிவகார்த்திகேயனுக்கும் இதுதான் முதல் படம். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவந்த இந்தக் கனா இப்போது மார்ச் 18 அன்று சீனாவில் வெளியாகப்போகிறது. கிரிக்கெட் வீராங்கனையாக ஆசைப்படும் கிராமத்துப் பெண்ணை மையமாகக் கொண்ட இந்தப் படம் நாட் அவுட் என்ற பெயரில் இந்தியில் டப் செய்யப்பட்டு ஓடிடியில் வெளியானது. தெலுங்கிலும் மறுஆக்கம் செய்யப்பட்டது.