சென்னை:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தலைமையிலான அணி படுதோல்வியை சந்தித்தது. தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் போட்டியிட்ட முரளி தலைமையிலான அணி அமோக வெற்றி பெற்றது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தேர்தல் சென்னையில் பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது.இந்த தேர்தலில் டி.ராஜேந்தர் அணிக்கும், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அணிக்கும் இடையே நேரடி போட்டி இருந் தது. வாக்கு எண்ணிக்கை திங்களன்று நடைபெற்றது. துவக்கத் தில் இருந்தே முரளி அணியின் கை ஓங்கியது. தலைவர் பதவிக்கான தேர்தலில் முரளி 557 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டி.ராஜேந்தர் 337 வாக்குகள் பெற்று 220 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி யடைந்தார்.இதேபோல் துணைத் தலைவர் தேர்தலிலும் டி.ராஜேந்தர் அணி தோல்வி அடைந்தது. அவரது அணியைச் சேர்ந்த யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. முரளி அணியைச் சேர்ந்த ஆர்.கே.சுரேஷ் 475 வாக்குகளும், சுயேட்சையாக போட்டியிட்ட கதிரேசன் 425 வாக்குகளும் பெற்று துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.