செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்துள்ள ‘லியோ’ படத்தில் இடம்பெற்றி ருக்கும் ‘ஆர்டினரி பெர்சன்’ எனும் பாடல் ஒரு ஆங்கில வெப் தொடரில் வரும் பாடலின் தழுவல் என்று சர்ச்சை ஒன்று தற்போது கிளம்பியுள்ளது. ‘லியோ’ படம் இந்த அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளி யாகி உலக அளவில் 4 நாட்களில் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூ லித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் வரும் ‘ஆர்டினரி பெர்சன்’ பாடலை படக்குழு அண்மையில் வெளி யிட்டது. இந்தப் பாடல் ‘பீக்கி பிளைண்டர்ஸ்’ எனும் பிரபல வெப் தொடரில் வரும் ‘ஐ ஆம் நாட் அவுட் சைடர்’ என்ற பாடலின் தழுவல் என்று பலரும் சொல்லிவந்தார்கள். இந்த நிலையில் “இந்த விவகாரம் குறித்து எங்களுக்கு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதுகுறித்து விசாரித்து வருகிறோம். ஆனால், நான் யார் மீதும் குற்றம் சுமத்தவில்லை” என்று ‘பீக்கி பிளைண்டர்ஸ்’ இசையமைப்பாளர் ஓட்னிக்கா தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த இரு பாடல்களும் வேறு வேறு மெட்டுக்களில் அமைந்துள்ளதாகவும் சிலர் தெரிவிக்கிறார்கள்.