லாபம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஷ்ருதி ஹாசன் நடிக்கும் லாபம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று சில தினங்களுக்கு முன் செய்தி வெளியானது.
இந்நிலையில், லாபம் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகாது. திரையரங்கில் பெரிய அளவில் வெளியிடப்படும் என்று நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.