வியாழன், ஜனவரி 21, 2021

cinema

img

திரைப்பட கலை இயக்குநர் பி.கிருஷ்ணமூர்த்தி காலமானார்...

சென்னை:
மூன்று முறை தேசிய விருது பெற்றுள்ள தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குநர்களிடம் பணியாற்றியுள்ள கலை இயக்குநர் பி.கிருஷ்ணமூர்த்தி காலமானார். அவருக்கு வயது 77.

பி.கிருஷ்ணமூர்த்தி ஜி.வி.அய்யர், பாலுமகேந்திரா, பாரதிராஜா, பாலா போன்றபல முன்னணி இயக்குனர்களோடு பணியாற்றியுள்ளார். இவர் 1943ஆம் ஆண்டு பூம்புகாரில் பிறந்தார். சென்னை கவின் கலை கல்லூரியில் படித்த இவர் பன்முகத்திறமை கொண்டவர்.நடிகர், கலை இயக்குநர், ஆடை வடிவமைப்பாளர் உள்ளிட்ட பல திறமைகளை கொண்டவர் பி.கிருஷ்ணமூர்த்தி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பணியாற்றியுள்ளார்.வடிவேலு நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் கலை இயக்குநர் இவர்தான்.இவர் ஞாயிறு இரவு உயிரிழந்தார். இறுதி சடங்குகள் திங்களன்று மதியம் 12 மணிக்கு மடிப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.இவரது மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

;