cinema

img

எதைக் குறித்தும் படமெடுக்கலாம்...

விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி, ஜெய்பீம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் மணிகண்டன். அவர் நாயகனாக நடிக்கும் நகைச்சுவைத் திரைப்படம் ஒன்று விரைவில்  வர இருக்கிறது. விநாயக் சந்திரசேகரன் இதை இயக்கியிருக்கிறார். இசை ஷான் ரோல்டன். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் நசரேத் பசிலியான், யுவராஜ் கணேசன், மகேஷ்ராஜ் பசிலியான் ஆகியோர் தயாரித்திருக்கின்றனர். படத்தில் மணிகண்டனுடன் மீதா ரகுநாத், ரமேஷ் திலக், இயக்குநர் பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள் (பக்ஸ்) போன்றோர் நடித்திருக்கிறார்கள். எல்லாம் சரி... படம் எதைக் குறித்துப் பேசப்போகிறதாம் தெரியுமா? தூங்குகிறபோது பலருக்கும் உள்ள குறட்டைவிடும் பிரச்சனையை மையமாக வைத்துத்தான் இந்தப் பெயரிடப்படாத படம் அலசப்போகிறதாம். ஆமாம், ஆமாம்... குறட்டையும் ஒரு முக்கியமான பிரச்சனைதானே. எதுகுறித்தும் நாம் படமெடுக்கலாம்தானே.