cinema

img

டி.இமான் செய்த அரிய செயல்...

தனுஷ் நடிப்பில் 2009இல் வெளிவந்த படிக்காதவன் படத்தின் மூலம் பிரபலமான துணைநடிகர் பிரபு நூற்றுக்கணக்கான படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் காலமானார். உறவினர்கள் எவருமில்லாத நிலையில் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்து, தகனம் செய்திருக்கிறார் பிரபல இசையமைப்பாளர் டி.இமான். அவரது மருத்துவ சிகிச்சைக்கும் இமான் உதவிகள் செய்துவந்தார். இறந்த அவருக்கு மரியாதை செய்து, கொள்ளி வைத்த இமானின் மனிதாபிமானச் செயலைப் பலரும் பாராட்டிவருகிறார்கள்.