business

img

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!

இந்தியாவில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்துள்ளது. 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்துள்ளது. 
சென்னையில், ரூ.23.50 உயர்த்தப்பட்டு வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ.1,960.50க்கு விற்பனை. தில்லியில் ரூ.1,795க்கும், கொல்கத்தாவில் ரூ.1,911க்கும், மும்பையில் ரூ.1,749க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலாகிறது.
அதேபோல், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி, சென்னையில் ரூ.918.50க்கும், தில்லியில் ரூ.903க்கும், கொல்கத்தாவில் ரூ.929க்கும், மும்பையில் ரூ.902.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

;