அடுத்த நிதியாண்டில் ஐடி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு 20% குறையும் என்று லைவ்மின்ட் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் ஐடி நிறுவனங்கள் பெரும் தொய்வை சந்தித்து வருகின்றன. மேற்கத்திய நாடுகளில் உள்ள பொருளாதார பாதிப்பு காரணமாக இந்நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 2023-2024 நிதியாண்டில் ஐ.டி. நிறுவனங்களில் வேலைவாய்ப்பு 20 சதவிகிதம் சரியும் என்று லைவ்மின்ட் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேபோல், சமீபத்தில் வெளியான பிசினஸ்லைன் அறிக்கையில், இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா உள்ளிட்ட ஐ.டி நிறுவனங்கள் நேர்காணல்களில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான ஆன்போர்டிங் செயல்முறையை பல மாதங்களாக தாமதப்படுத்தியதோடு, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வேலைக்கான ஆஃபர் கடிதங்களைத் திரும்பப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.