business

img

ட்விட்டரை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தினார் எலாம் மஸ்க்

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரை வாங்குவதற்கு உலக பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை அதிகாரியான எலான் மஸ்க் அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தில் 9.2% பங்குகளை வாங்கியுள்ளதாக அறிவித்தார்.

இதன்படி,  ட்விட்டரில் மிகப்பெரிய பங்குதாரராக எலான் மஸ்க் இருந்து வந்தார். இதையடுத்து அவரை ட்விட்டர் நிர்வாக குழுவில் இணைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், திடீரென ட்விட்டர் நிர்வாகக் குழுவில் இடம் வேண்டாம் என எலான் மஸ்க் நிராகரித்துவிட்டார். 

இதனையடுத்து, ட்விட்டர் நிறுவனத்தையே விலைக்கு வாங்க விரும்புவதாக எலான் மஸ்க் அதிடியாக தெரிவித்திருந்தார். ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்குவதற்கு எலான் மஸ்க்குடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. கிட்டதட்ட இந்த பேச்சுவாரத்தை இறுதிக்கட்டத்தை எட்டியதாக கூறப்பட்டு வந்தது. 

இதனையடுத்து, ட்விட்டர் நிறுவனத்தை ரூ. 4,200 ஆயிரம் கோடிக்கு (44 பில்லியன் டாலருக்கு)  வாங்க எலான் மஸ்க் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது. மேலும், டிவிட்டரை வாங்கிய பிறகு வணிக ரீதியாக பயன்படுத்தும் டிவிட்டர் பயனாளிகளுக்கு கட்டணம் விதிக்கப்படும் என்றெல்லாம் தெரிவித்திருந்தார் எலான் மஸ்க்.

இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக எலான் மஸ்க் இன்று கூறியுள்ளார்.

ட்விட்டரில் மொத்தமுள்ள கணக்குகளில் 5% போலி கணக்குகள் இருப்பதால் எலான் மஸ்க் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எலான் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்ட செய்தியால் ட்விட்டரின் பங்கு விலை 19 சதவிகிதம் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

;