மும்பை:
அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளஅகமதாபாத், மங்களூரு, லக்னோ விமான நிலையங்களில் விதிமீறல் வர்த்தக விதிமுறைகள் மற்றும்விளம்பர ஒப்பந்தங்களை மீறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தை விதிமுறைகளை மீறியதாக அதானி குழுமத்தின் 6 நிறுவனங்களில் செபி மற்றும்வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இவ்விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்ததை அடுத்து அதானி குழுமத்தின் பங்குகள் கடந்த 2 நாட்களாக சரிந்தது.
இந்நிலையில் விமான நிலையங்களில் விதிமீறல் சர்ச்சையில் அதானி குழுமம் சிக்கியுள்ளது.
அகமதாபாத், மங்களூரு, லக்னோ விமான நிலையங்களை ஒப்பந்த அடிப்படையில் இயக்கிவரும் அதானி குழுமம் வர்த்தக மற்றும் விளம்பரஒப்பந்தங்களை மீறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தின் சார்பில் அமைக்கப்பட்ட 3 குழுக்கள் விதிமீறலை உறுதிப்படுத்தின. ஆர்டிஐ சட்டத்தின் மூலம் இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன.