business

img

ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு!

வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா அறிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் 53ஆவது நிதிக் கொள்கை குழுக் கூட்டம் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முடிவில், வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா அறிவித்துள்ளார்.
அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவிகிதத்தில் இருந்து 6.25 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்,தனிநபர் மற்றும் வாகனக் கடனுக்கான வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.