court

img

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!

புதுதில்லி,பிப்.07- ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி.
தமிழ்நாடு அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தொடர்ந்த வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம் ஆளுநருக்குச் சரமாரி கேள்விகளை எழுப்பியது. 
ஆளுநர் எதுவும் விளக்கமளிக்காமல் மசோதாவைத் திரும்ப அனுப்பினால், அவர் மனதில் என்ன இருக்கிறது என்பது எப்படித் தெரியும்?. சம்மந்தப்பட்ட மசோதாவில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை என்றால் அரசுக்கு எப்படித் தெரியும்?. சம்மந்தப்பட்ட மசோதா மீது தான் ஒப்புதல் கொடுக்க முடியாது என்பதை எப்படி ஆளுநர் உணர்ந்தார்? என ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
மாநில அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.