business

img

6 ஆண்டுகளில் 300 சதவிகிதம் உயர்ந்த பெட்ரோல் - டீசல் மீதான வரி.... 2014-இல் 3 ரூபாயாக இருந்தது.. 2020-இல் 33 ரூபாய் ஆனது...

புதுதில்லி
2014-ஆம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்பதற்கு முன்பு 3 ரூபாய் 56 காசுகளாக இருந்த 1 லிட்டர் பெட்ரோல் மீதான உற்பத்தி வரி, கடந்த 6 ஆண்டுகளில் 32 ரூபாய் 90 காசுகளாக உயர்ந்துள்ளது.அதாவது பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரியை, கடந்த 6 ஆண்டுகளில் 300 சதவிகிதம் அளவிற்கு மோடி அரசு உயர்த்தியுள்ளது. இதன்மூலம், நாட்டு மக்களிடமிருந்து பல லட்சம் கோடி ரூபாயை மோடி அரசு சுரண்டியுள்ளது.

பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் வரி குறித்து, எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சா் அனுராக் சிங் தாக்குர் மக்களவையில் எழுத்துப்பூா்வமாக பதில் அளித்துள்ளார். அதில் “பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் உற்பத்தி வரியால் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருமானம் கடந்த 6 ஆண்டுகளில் 300 சதவிகிதம் அளவுக்கு உயா்ந்துள்ளது.பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு மீதான வரி வசூல் மூலமாக மத்திய அரசுக்கு கடந்த 2014-15 நிதியாண்டில் ரூ. 74 ஆயிரத்து 158 கோடி வருவாய் கிடைத்தது. இந்நிலையில், 2020 ஏப்ரல் முதல் 2021 ஜனவரி வரையிலான 10 மாத காலத்தில் மட்டும் இந்த வகையிலான வரி வசூல் ரூ. 2 லட்சத்து 95 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த 2014-15ஆம் நிதியாண்டின் மொத்த வருவாயில் பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு மீதான வரி வசூலின் பங்களிப்பு 5.4 சதவிகிதமாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் அது 12.2 சதவிகிதமாக உயா்ந்துஉள்ளது.2014-ஆம் ஆண்டில் ஒரு லிட்டா் பெட்ரோல் மீது 3 ரூபாய் 56 காசுகளாக இருந்த உற்பத்தி வரி, தற்போது 32 ரூபாய் 90 காசுகளாக அதிகரித்துஉள்ளது. அதேபோன்று டீசல் மீதான கலால் வரியும் 3 ரூபாய் 56 காசுகளிலிருந்து 31 ரூபாய் 80 காசுகளாக உயா்ந்துஉள்ளது.நரேந்திர மோடி அரசு மத்தியில் முதல் முறையாக பொறுப்பேற்ற போது 2014-15-இல் பெட்ரோல் மீதான கலால்வரி மூலமாக ரூ. 29 ஆயிரத்து 279 கோடியும், டீசல் மீதான கலால் வரி மூலமாக ரூ. 42 ஆயிரத்து 881 கோடியும் மத்திய அரசுக்கு வருவாயாக கிடைத்தது. இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளில் பலமுறை கலால் வரி உயா்த்தப்பட்டதன் விளைவாக தற்போது அந்த வருவாய் பன்மடங்கு அதிகரித்துள்ளது.இவ்வாறு அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.