அக்டோபர் 1-ஆம் தேதி முதல் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.48.50 உயர்ந்துள்ளது.
இது குறித்து எண்ணெய் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் ரூ.1903க்கும், தில்லியில் ரூ.1,740க்கும், கொல்கத்தாவில் ரூ.1850.50க்கும், மும்பையில் ரூ.1692.50க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த 3 மாதங்களில் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.94 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 5 கிலோ இலவச வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களின் விலையும் ரூ.12 உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.