business

img

அமெரிக்க பங்குச் சந்தை பட்டியலில் அதானி துறைமுகங்கள் நீக்கம்..... மனித உரிமைகளை மீறும் மியான்மர் ராணுவத்துடன் வர்த்தக தொடர்பு....

புதுதில்லி:
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்து, மக்கள் மீது ஒடுக்குமுறையை திணித்துவரும் மியான்மர் ராணுவத்துடன், அதானி துறைமுகங்கள் நிறுவனம் வர்த்தகத் தொடர்பு வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதற்காக, அதானி துறைமுகங் கள் நிறுவனத்தை, ‘எஸ் அண்ட் பிநிறுவனம்’ (S&P Dow Jones Indices)தனது பங்குச் சந்தைக் குறியீட்டு வரையறைக்கான பட்டியலிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.இந்தியாவின் முன்னணி தனியார் துறைமுக வர்த்தக நிறுவனமான ‘அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனம்’ (Adani Ports and SpecialEconomic Zone Ltd) தொடர்ந்து தனதுவர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது மட்டும் அல்லாமல் புதிது புதிதாக துறைமுகங்களைக் கட்டும் பணியில் இறங்கியுள்ளது. இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளிலும் கால் பதித்து வருகிறது. 

அந்த வகையில், கடந்த மார்ச் மாதத்தில் மியான்மர் நாட்டின் யாங்கோன் பகுதியிலுள்ள மியான் மர் எக்னாமிக் கார்பொரேஷன் நிறுவனத்திடம் நிலத்தைக் குத்தகைக்கு வாங்கிச் சுமார் 290 மில்லியன் டாலர் மதிப்பிலான துறைமுகத்தைக் கட்ட ஆரம்பித்துள்ளது. மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி நடக்கிறது. ஆங் சான் சூகி தலைமையிலான கட்சியை மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த 3 மாதங் களுக்குள், அந்த ஆட்சியைக் கவிழ்த்து ராணுவ தளபதிகள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். தலைவர்களை அவர்கள் சிறையில் அடைத்துள்ளனர். இதற்கெதிராக போராட்டம் நடத்தும் மக்களும் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

மியான்மர் ராணுவத்தின் இந்த மனித உரிமை மீறல்களுக்காக, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள்மியான்மர் நாட்டின் மீது, பொருளாதார ரீதியாக பல்வேறு தடைகளைவிதித்து, அந்நாட்டை தனிமைப்படுத் தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.குறிப்பாக, மியான்மர் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் மியான்மர் எக்னாமிக் கார்ப்பொரேஷன் மற்றும்மியான்மர் எக்னாமிக் ஹோல்டிங்க்ஸ் பப்ளிக் கம்பெனி லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மீது தடை விதித்தது. அமெரிக்கா, பிரிட்டன் மட்டும் அல்லாமல் ஜப்பான், தென்கொரியா நாடுகளும் மியான்மர் அரசு அமைப்புகள் உடனான வர்த்தகங்களை நிறுத்தியுள்ளது. குறிப்பாகத் தென் கொரியாவின் ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான போஸ்கோ (POSCO) மியான்மர் எக்னாமிக் ஹோல்டிங்க்ஸ் பப்ளிக் கம்பெனி லிமிடெட் நிறுவனத்துடன் வைத்துள்ள கூட்டிலிருந்து எப்படி வெளியேறுவது என ஆலோசனை செய்து வருகிறது.இந்நிலையில் கவுதம் அதானி தலைமையிலான அதானி துறைமுகங்கள் நிறுவனம், சுமார் 290 மில்லியன் டாலர் பணத்தைக் கொட்டி, யாங்கோன் பகுதியில் மியான்மர் எக்னாமிக் கார்ப்பொரேஷன் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தைக்குத்தகைக்கு வாங்கி, துறைமுகத்தைக் கட்டி வருவது உலக நாடுகளின் கவனத்தையும், கண்டனத்தை பெற்றுள்ளது.இதற்காகவே, அமெரிக்காவைச் சேர்ந்த உலகளாவிய பங்குச் சந்தைக்குறியீட்டு வரையறை நிறுவனமான ‘எஸ் அண்ட் பி’ டாவ் ஜோன்ஸ் நிறுவனம், தனது சந்தை மதிப்பீட்டுப் பட்டியலிலிருந்து ஏப்ரல் 15 முதல் அதானி துறைமுகங்கள் நிறுவனத்தை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.