வங்கி கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைக்கப்பட்டு 6%-இல் இருந்து 5.5% ஆக குறையும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக வங்கிகளின் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படாமல் 6.5% என்ற அளவில் இருந்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரியில் 0.25% குறைந்தது 6.25% ஆக இருந்தது. இதை தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு 6.25% இருந்த ரெப்போ வட்டி விகிதம் 6%-ஆக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், வங்கி கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைக்கப்பட்டு 6%-இல் இருந்து 5.5% ஆக குறையும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.