சென்னை,பிப்.21- ஆபரணத் தங்கத்தின் விலை நீண்ட நாட்களுக்கு பிறகுச் சற்று குறைந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் ரூ.8,025க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.64,200க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை சற்றே குறைந்தாலும் 64000 தாண்டியே இருப்பதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
வெள்ளியில் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.109க்கு விற்பனையாகிறது.