சென்னை:
2021, ஜனவரி மாதம் முதல் வீட்டு உபயோகப் பொருட்களின் விலை 10 சதவீதம் வரை உயர்கிறது என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். முக்கிய மூலப் பொருட்களான காப்பர், அலுமினியம், ஸ்டீல் போன்றவற்றின் விலை அதிகரிப்பாலும், விமானத்தில் இருந்து கொண்டுவரும் போக்குவரத்துக் கட்டண அதிகரிப்பாலும் இந்த விலை உயர்வு இருக்கும் என்று தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பானாசோனிக் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மணிஷ் சர்மா கூறுகையில், உள்ளீட்டுப் பொருட்களின் விலை உயர்வு எங்கள் பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கும். ஜனவரி முதல் 6 முதல் 7 சதவீதம் விலை உயர்த்தப்படலாம், மார்ச் மாதத்துக்குள் 10 சதவீதம் வரை உயரக்கூடும் என்றார்.