articles

img

பெரும் பணக்காரர்கள் கொழுக்க ஏழை, எளிய, நடுத்தர மக்களை கொல்வதா? - இரா.வேல்முருகன்

2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் இந்தி யாவை அரை நூற்றாண்டுக்கு மேலாக ஆட்சி செய்த காங்கிரஸ் நாட்டை 50 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்து சென்று விட்டது. இதிலிருந்து நாட்டை மீட்க வேண்டும் என்றால் எங்களுக்கு ஓட்டு போடுங்கள். அதை தவிர்த்து உங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தினந்தோறும் உயர்ந்து வரும் விலைவாசியை கட்டுக்குள் வைப்போம். வேலையின்மையை ஒழித்து ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம். கருப்புப் பணத்தை ஒழித்து அனைவ ருக்கும் 15 லட்சம் வங்கிக் கணக்கில் போடுவோம். தொழில் வளர்ச்சியை ஏற் படுத்தி அமைதியை நிலைநாட்டுவோம் என்றெல்லாம் வாய்ச்சவடால் விட்டார் பிரதமர் மோடி. அதனை ஆர்எஸ்எஸ், பாரதிய ஜனதா கட்சியும் வழிமொழிந்து பிரச்சாரம் மேற்கொண்டது. ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் இவர்கள் என்ன சாதித்தார்கள் என்பதுதான் தற்போது நம்முன் உள்ள கேள்வி? 

விலைவாசி குறைந்ததா? உயர்ந்ததா?

வரலாறு காணாத வகையில் விலை வாசி உயர்ந்து மக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆட்பட்டுள்ளனர் என் பதை யாரும் மறுக்கவும் முடியாது; மறைக்கவும் முடியாது. கடந்த 27 ஆண்டு களில் இல்லாத வகையில் விலைவாசி கடு மையாக உயர்ந்துள்ளது. பருப்பு, எண் ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியா வசியப் பொருட்களின் விலைகளும் தினந் தோறும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் 2014 ஆம் ஆண்டு சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 138 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல் விலை 60 ரூபாய்க்கும் கீழ் இருந்தது. இன்றைய சர்வதேசச் சந்தையில் ஒரு பீப்பாய் விலை 108.77 டாலர். ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல் விலை 100 சதவீத உயர்த்தப்பட்டு 118 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசலும் இதேபோன்று தான் விற்கப்படுகிறது.

பெட்ரோல் விலையை இந்த ஒரு ஆண்டில் மட்டும் 70 சதமானம் உயர்த்திய மோடி அரசு, இடதுசாரிகளின் போராட்ட அறைகூவலையடுத்து 8 ரூபாய் குறைப்ப தாக அறிவித்துள்ளது. சமையல் எரிவாயு உருளையின் விலை 420 ரூபாயிலிருந்து 1040 ரூபாயாக உயர்த்தி உள்ளது. பெட் ரோலியப் பொருட்களில் கலால் வரி, செஸ் வரி என 70 சதவீதத்திற்கும் மேலாக உயர்த்தி உள்ளது. பெட்ரோலியப் பொ ருட்களின் விலை உயர்வால் போக்கு வரத்து கட்டணம் உயர்ந்தது, போக்கு வரத்து கட்டண உயர்வால் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அனைத்து அத்தியா வசியப் பொருட்களின் விலைகளும் கடு மையான உயர்ந்துள்ளன. உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்துகளின் விலையும் இந்த காலத்தில் 15 சதவீதம் உயர்ந்துள் ளது. கடந்த 8 ஆண்டுகளில் விலைவாசி வரலாறு காணாத வகையில் உயர்ந்துள் ளது. அதற்கேற்ப மக்களின் வாங்கும் சக்தி (வருமானம்) சம்பளம் உயர்ந்ததா? இல்லை. உள்ளதும் போச்சுடா .....என்பது போல உயர் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா பெருந்தொற்று ஆகியவற்றால் இருந்து வேலையும் பறிபோய், சம்பளமும் குறைந்து விட்டது. பல கோடிக்கணக்கான மக்கள் வேலை இழந்து, வருமானத்தை இழந்து, வாழ்வை இழந்து நடுத்தெரு வுக்கு வந்துவிட்டனர். இருந்தாலும், இந்த பொருளாதார சுமைகள் மொத்தத்தை யும் ஏழை எளிய மக்களின் தலைமையி லேயே ஏற்றுகின்றனர்.

எப்பொழுதெல்லாம் விலை உயரும்? “ஒரு பொருளுக்கு தேவை அதிகரித்து தட்டுப்பாடு ஏற்பட்டால்தான் விலை உயரும். தேவை குறைந்து பொருள் கிடைப்பது எளிதானால் விலை சரியும்”. இந்த அடிப்படையில்தான் கார்ப்பரேட் நிறு வனங்கள் கோதுமை உள்ளிட்ட அத்தியா வசியப் பொருட்களை பதுக்கி செயற்கை யாக தேவையை அதிகரித்து பொருட்கள் விலையை உயர்த்துகின்றன. இதற்கு துணைபோகும் வகையில் அரசாங்கம் உணவுப் பொருட்களை கொள்முதல் செய்யாமல் பெரும் நிறுவனங்கள் வாங்கி பதுக்குவதற்கு ஏதுவான கொள்கையை உருவாக்கி வைத்துள்ளது. இப்படித்தான் வெங்காயம், தக்காளி, பருப்பு, எண் ணெய் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியா வசியப் பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து நிற்கிறது. மனித வாழ்க்கையோ அதலபாதாளத்தில் விழுந்து கிடக்கிறது.

மக்கள் தொகை அதிகரித்து வருவதால் உணவுத் தேவை அதிகரித்துள்ளது. அதே சமயம் விவசாயப் பணிகள் மீதான மக்க ளின் ஆர்வத்தை கூட்டுவதற்கு பதிலாக பெரும் நிறுவனங்களிடம் வேளாண் தொழிலை ஒப்படைப்பதற்கு ஏதுவாகவே ஆட்சியாளர்கள் திட்டம் தீட்டுகின்றனர். விவசாயப் பணிகள் குறைந்து விட்டன. வேறு பணிகளுக்கு செல்வதை அவர்கள் விரும்புகின்றனர். ஏன்? விவசாயிகளுக்கு குறைவான ஊதியம், உள்ளூர் சமூ கத்தால் சாதி ரீதியாக இழிவு என்பது உள் ளிட்ட பல்வேறு சமூக ஒடுக்கு முறையில் இருந்து விடுதலை பெற்று, சுயமரியாதை யோடு வாழ புலம்பெயர்ந்து நகரங்களை நோக்கி வருகின்றனர்.

தொழில் வளர்ச்சி எவ்வளவு முக்கிய மோ அதே அளவிற்கு விவசாயமும் முக்கியமானது. விவசாயம் நடத்துவ தற்கு லாயக்கான பகுதிகளில் எக்கார ணத்தை முன்னிட்டும் வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் விளை நிலங்களை எடுக்கக் கூடாது. வறட்சியான பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துங் கள். ஏனெனில் வறட்சியான பகுதிகளில் தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீரை கொண்டு செல்ல முடியும். ஆனால் விவசாயத் தேவைக்கு தண்ணீர் கூடுதலாக தேவைப்படும். அந்த அள விற்கு தண்ணீரைக் கொண்டு செல்ல முடியாது. எனவே, விவசாயத்தை வலுப் படுத்த வேண்டும். அதேநேரத்தில் தரிசு நிலங்களை விவசாயம் செய்வதற்கு ஏற்ற வகையில் சீர்திருத்தி விவசாய பரப்பை அதிகரிக்க வேண்டும். அதை விடுத்து தொழிற்சாலைகள், பொருளாதார மண்ட லங்கள் அமைக்க விவசாய நிலங்களை எடுக்கக்கூடாது. இதனால் உணவுப் பொ ருட்களின் உற்பத்தி கணிசமான அள விற்கு குறைந்து விலைவாசி உயர்வதற்கு வழிவகுக்கும். எவ்வளவு விலைவாசி உயர்ந்தாலும் அதனால் பலன் பெறுவது விவசாயிகள் இல்லையே ஏன்? விவ சாயிகள் எவ்வளவு உற்பத்தி செய்தாலும் முதலாளிகளும் இடைத்தரகர்களும் லாபம் அடையும் வகையில் அரசின் கொள்கை இருப்பதுதான் காரணம்.

2050-ஆம் ஆண்டில் உணவுப் பொருள் தேவை இந்தியாவில் பன்மடங்கு அதிகரிக்கும் என ஆய்வு கூறுகிறது. அப் போது இந்தியாவின் மக்கள் தொகை 160 கோடியாக உயரலாம் எனவும் கணிக் கப்பட்டிருக்கிறது. எனவே விவசாய நிலங் களை விரிவாக்கம் செய்வது, வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்கான உத்தி களை கண்டறிந்து செயல்படுத்துவது போன்ற பணிகளை ஒன்றிய, மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக கேரளாவில் இடதுசாரி அரசு தரிசு நிலங்க ளை மேம்படுத்தி அரசி உற்பத்தியை 1.5 லட்சம் டன் உயர்த்தியுள்ளனர். இதை மற்ற மாநிலங்களும் செய்ய முடியாதா? வறட்சி, வெள்ளம், தண்ணீர் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளாலும் வேளாண் தொழில் பாதிக்கப்படுகிறது. சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதனக் கிடங்குகள் போன்றவற்றை கையாளும் முறைகளும் சரிவர இல்லை. இந்த பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காண ஒன்றிய, மாநில அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். செம்மை நெல் சாகுபடியை கையாண்டு உற்பத்தியை அதிகரித்தால், உற்பத்தியா கும் உணவு தானியங்களை அரசாங்கம் கொள்முதல் செய்ய வேண்டும். இதை செய்வதன் மூலம் உணவுத் தட்டுப்பாடும், விலைவாசி உயர்வும் குறைய வழி யேற்படும்.

விலை நிலங்களாகும் விளை நிலங்கள்

விவசாய நிலங்களின் அளவு தற் போது வெகுவாக குறைந்து வருகிறது. விவ சாய நிலங்களை ரியல் எஸ்டேட் நிறு வனங்கள் மனைகளாகவும், கட்டிடங்களா கவும் மாற்றி வருகின்றன. கல்லூரிகள், தொழிற்சாலைகள், பொருளாதார மண்ட லங்கள் உள்ளிட்டவற்றை அமைப்பதற்கு வேளாண் நிலங்களே தேர்வு செய்யப் படுகின்றன. கேட்டால் தொழில் வளர்ச்சி என்கிறார்கள். தொழில் வளர்ச்சி எந்தள விற்கு முக்கியமோ அந்த அளவிற்கு விவ சாய வளர்ச்சியும் முக்கியம் என்பதை அறிய வேண்டும். விளைச்சல் மிகுந்த, பாசன வசதி கொண்ட நிலங்களை விவசா யத்திற்கு தவிர, பிற காரணங்களுக்கு பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். வறட்சிப் பகுதிகள், வறண்ட நிலங்களில் தொழிற்சாலைகள், கல்லூரிகள், பொரு ளாதார மண்டலங்கள் போன்றவற்றை அமைக்கலாம். அரசு நேரடியாக தலை யிட்டு வீணாகக் கிடக்கும் நிலங்களில் விவசாயம் செய்ய உதவ வேண்டும். மேலும், விவசாய நிலங்களை கையகப் படுத்துவதை தவிர்ப்பது, பிற காரணங்க ளுக்கு பயன்படுத்துவதை தடுப்பது போன்ற வற்றை உறுதியுடன் மேற்கொள்ள வேண்டும்.

சுதந்திரத்திற்கு முன்பு தமிழகத்தின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பல  லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வானம் பார்த்த பூமியாக (தரிசாக) இருந்தது. அதன் காரணமாகவே, பிரிட்டிஷ் அரசு தென் மாவட்டங்களில் குறைவாக தண்ணீர் தேவைப்படும் பருத்தி, எண்ணெய் வித்துக் களை பயிரிட வைத்தது. வானம் பார்த்த பூமியை விவசாய பூமியாக மாற்றியதுடன் பஞ்சாலை போன்ற தொழில்களையும் உருவாக்கி வாழ்வாதாரத்தை பெருக்கி யது. ஆனால் சுதந்திர இந்தியாவில் விவ சாய நிலத்தை விரிவாக்குவதற்கு மாறாக தொழில் வளர்ச்சி, எட்டுவழி சாலை, கெய்ல் திட்டம், உயர் மின்னழுத்த கோபுரம் என்ற பெயரில் விவசாய நிலங்க ளை அழித்தொழிக்கிறது. இதனால் வரும் காலங்களில் உணவு தானிய உற்பத்தி குறைந்து மிகப்பெரிய அளவில் பற்றாக் குறை ஏற்படும். சமூக பதற்றத்தை விளை விக்கும் என்பதை அரசாங்கம் உணர வேண்டும்.

கிடங்குகள் மற்றும் குளிர்பதனக் கிடங்குகள் பராமரிப்பு

ஒன்றிய அரசு விவசாயிகள் உற்பத்தி செய்த உணவு தானியங்களை கொள் முதல் செய்வதை படிப்படியாக குறைத்துக் கொண்டே வருகிறது. இந்த ஆண்டு புவி வெப்பமயமாதல் காரணமாக கோதுமை சாகுபடி குறைந்துள்ளது. அதை கொள் முதல் செய்து உணவு கிடங்கில் வைத்து, நியாயவிலை கடைகள் மூலம் மக்களுக்கு கொடுத்தால், தனியார் முதலாளிகள் பதுக்கி வைத்து செயற்கையாக விலை யேற்ற முடியாது.

தனியார் நிறுவனங்கள் பல லட்சக்க ணக்கான சதுர அடிகளில் குளிர்பதன உணவு தானிய கிடங்குகளை கட்டு கின்றனர். ஆனால் அரசு இதில் மெத்தனம் காட்டுகிறது. அரசாங்கம் விவசாயிகளி டம் உணவு தானியங்களை கொள்முதல் செய்வதற்கு பதிலாக, அலைக்கழித்து தானாகச் சென்று தனியார் வியாபாரி களிடம் விற்க வேண்டும் என்ற வகையி லேயே கொள்கையை வைத்துள்ளது. மக்க ளின் கோபத்தை தணிக்க கொஞ்ச நஞ்சம் கொள்முதல் செய்தாலும், அவற்றை முறையாக பாதுகாத்து வைக்க உணவுக் கிடங்கோ, குளிர்பதன கிடங்கோ கட்டா மல் மழை வெயிலில் போட்டு வைக்கிறது. இதனால் புழுப்பிடித்து, எலி தின்று, மக்கிய பிறகு அரசு கருணை உள்ளத்தோடு கோதுமை, அரிசி உள்ளிட்ட அத்தியாவ சியப் பொருட்களை மக்களுக்கு கொடுக் கிறது. உணவு தானியங்களை பெருமள வில் கொள்முதல் செய்து, முறையாக பரா மரித்து, குறைவான விலையில் தரமான உணவு தானியங்களை பொதுவிநியோக அடிப்படையில் கொடுத்தால், பொருட்க ளின் விலை குறையும். சந்தையிலும் தர மான பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கும்.

;