articles

img

மருந்து நிறுவனங்கள்- மோடி அரசு கூட்டு மக்கள் நல்வாழ்வில் தொடரும் அவலங்கள் - ஆர்.ரமேஷ் சுந்தர்

- போன மாசம் இருந்ததை விட இந்த மாசம் மருந்து விலை ஏறிடுச்சே?
- மருந்துகளின் விலைகள் கட்டுப்பாட்டில் வைக்க ஏதேனும் சட்டங்கள் உள்ளதா?
- மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களை முறையற்ற வழிகளில் கவனித்து லாபத்தை கொழிக்கின்றதா?

இது போல பல கேள்விகள் சாதாரண  மக்களாலும், தன்னார்வ, அறிவியல், தொழிற்சங்க அமைப்புகளா லும்  பல ஆண்டு காலமாக எழுப்பப்படுகிறது. இதற் கான காரணங்கள் என்ன, இதன் உண்மையான பின்னணி என்ன என்பதை நாம் புரிந்து கொள்வது மிக அவசியம்.

தேர்தல் பத்திர ஊழல்- மருந்து கம்பெனிகள் பாஜக கூட்டுக் களவாணித்தனம்  

அண்மையில் வெளிவந்துள்ள தேர்தல் பத்திர விவ காரத்தில், 30 பெரும் மருந்து நிறுவனங்கள் 900 கோடிக்கு மேல் நன்கொடை கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. இதில் பெருவாரியான தொகை பாஜக வுக்கும், பிஆர்எஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு சென்றுள்ளன. இதில் சம்பந்தப்பட்டுள்ள பல நிறுவனங்கள் தரக்குறைவான மருந்துகள் தயாரித் ததாக குற்றம் சாட்டப்பட்டவை. இவர்கள் தேர்தல் பத்தி ரங்களை நன்கொடையாக அளித்தபின் அவர்கள் மேல் எந்த ஒரு நடவடிக்கையும் பாயவில்லை. இதற்கு பல உதாரணங்களை நாம் காணலாம். அரவிந்தோ பார்மா- நிறுவனத்தின் இயக்குநர்க ளில் ஒருவரான சரத்குமார் ரெட்டி என்பவர் அம லாக்கத் துறையால் 11 நவம்பர் 2022 அன்று தில்லி மது கலால் வரிக் கொள்கை தொடர்பான வழக்கில் கைது செய்யப்படுகிறார். சில தினங்கள் கடந்து 5 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கி ஆளும் பாஜ கவுக்கு கொடுக்கிறது.  அவர் வழக்கில் அப்ரூவர் ஆனவுடன் அவரது நிறுவனம் மேலும் 25 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கி அதை பாஜகவுக்கு கொடுக்கிறது. மொத்தமாக அந்த கட்சி 52.5 கோடி க்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது .  அதில் பெரும்பான்மையாக 34.5 கோடிக்கு ஆளும் ஒன்றிய அரசின் பாஜகவுக்கு கொடுத்துள்ளது. தில்லி மது கலால் வரி கொள்கை தொடர்பான வழக்கில் தான் தில்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணி சிசோடியா கைது செய்யப் பட்டுள்ளனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு அப்ருவராக மாறிய ராகவ மகுந்த ரெட்டி என்ப வரின் தந்தை  மகுந்த  சீனிவாசலு  ரெட்டிக்கு பாஜக  அணி யில்  சீட் கொடுத்துள்ளது என்பது மிக முக்கியமானது.

மும்பையை தலைமையிடமாகக் கொண்ட யுஎஸ்வி (USV) நிறுவனத்தின் தலைவரான லீனா காந்தி திவாரி இந்தியாவின் இரண்டாவது பணக்காரப் பெண், ஆவார். இவருக்கு சொந்தமான 20 இடங்களில் வருமானவரித் துறை 2017 ஆம் ஆண்டு சோதனை செய்தது. ஒரு மாதத்திற்குப் பிறகு ரூ.9 கோடி தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடையாக வழங்கியது. அதே போல 15 நவம்பர் 2022 அன்று ரூ. 10. கோடி தேர்தல் பத்திரம் மூலம் மீண்டும் பாஜகவுக்கு  நன்கொடை வழங்கியது.  கொரோனா தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள கோவிஷீல்ட், கோவாக்சின்  என இரண்டு தடுப்பூசி மருந்துகளை போட்டுக் கொண்டோம், இரண்டுமே இரண்டு தனியார் நிறுவனங்களான சீரம் இன்ஸ்டிட்யூட்,  பாரத் பயோடெக் ஆகியவற்றால் தயா ரிக்கப்பட்டு, விநியோகிக்கப்பட்டது. சீரம் இன்ஸ்டி ட்யூட் ரூ.52 கோடியும், பாரத் பையோடெக் ரூ.26 கோடி யும் நன்கொடையாக கொடுத்துள்ளன. இந்தியாவில் 4 அரசு தடுப்பூசி நிறுவனங்கள் உள்ளன. ஆனால் இந்த  நிறுவனங்களுக்கெல்லாம் கொரோனா தடுப்பூசி தயாரிக்க ஏன் அரசாங்கம் ஆதரவு அளிக்கவில்லை என்பது தெளிவாகிறது. மேலும், தரமற்ற, போலி மருந்து தயாரித்த குற்றச் சாட்டுக்குள்ளான மருந்து நிறுவனங்களிடம் பாஜக பணம் வாங்கியதும் தற்போது அம்பலமாகியுள்ளது.

 மருந்துகள் விலை நிர்ணயம் - அரசின் செயல்பாடு 

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் ஆதிக்கம் மற்றும் மருந்துக ளின் மீதான கட்டுப்பாடற்ற விலை ஆகிய காரணங்க ளால்  நமது நாட்டிற்கு என ஒரு சுயமாக மருந்து விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் கொண்ட அமைப்பு உரு வாக்கிட  வேண்டும் என்ற முடிவின் அடிப்படையில் மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் தோற்றுவிக்கப் பட்டது. அனைத்து அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளும் இந்த ஆணையத்தின் விலை நிர்ணயத்தின் கீழ் இடம் பெற்றன.  புதிய பொருளாதாரக் கொள்கை அமலுக்கு வந்த பின் படிப்படியாக மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணை யத்தின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, தேசிய மருந்து விலை ஆணையம் என மாற்றி அமைக் கப்பட்டது. மருந்துகளின் விலையினை உற்பத்திச் செலவில் இருந்து நிர்ணயம் செய்யும் முறை மாற்றப் பட்டு சந்தை விலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக மத்தியில் ஆளும் பாஜக அரசு மேலும் ஒரு படி கூடுதலாக மூலக்கூறு மருந்தின் மொத்த விலையின் தன்மை க்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து கொள்ள அனுமதி அளித்துள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை 10 சதவீதம் வரை மருந்துகளின் விலையினை உயர்த்திக் கொள்ள லாம் எனவும் ஆணையிட்டது. இதன் காரணமாக, இந்த ஆண்டு 12 சதவீதமாக மருந்து விலை உயர்ந்தது. 

நெறிமுறையற்ற விற்பனை மேம்பாட்டு நடைமுறைகள்

நமது நாட்டில் நீண்ட நெடும் காலமாக மருந்துத் துறையில் நெறிமுறையற்ற விற்பனை மேம்பாட்டு நடைமுறைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதை ஒழிக்க  அரசாங்கம் சில உறுதியான நடவடிக்கைக ளை முன்வைக்கும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்த் தனர். ஒன்றிய அரசு 2014ஆம் ஆண்டு   மருந்து விற்பனை மேம்பாட்டு நடைமுறைகளின் சீரான குறியீடு (UCP MP 2014) என்ற ஓர் அறிக்கையை வெளியிட்டது. இதில் மருந்து நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை (Brands) மருத்துவர்கள் பரிந்துரைக்க அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விற்பனை மேம்பாட்டு முறைகளை பற்றி விளக்கப்பட்டிருந்தது. மேம்பாட்டு முறைகளில் சட்ட விரோதமாக  மருத்துவர்களுக்கு பணம், பரிசுகள் வழங்குவது, அவர்கள் பயணச் செலவுகளை ஏற்பது, அவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கு நன்கொடை வழங்குவது, இன்னும் பல்வேறு  சலுகைகள் அளிப்பது என்பது குற்றச் செயல்களாக வரையறுக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்பு குறியீடு வெளியிடப்பட்ட பிறகும், ‘பரிந்துரைக்கும் மருந்துக்கு பணம் (Pay for prescription)’ என்பது மருந்துத்துறையில் தொடர்ந்து செழித்து வளர்ந்து வருவதும், குற்றங்களை கையாள்வ தில் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என் பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. சலுகைகளை பெற்ற ஒரு சில மருத்துவர்கள் மேல் மருத்துவக் கவுன்சில் நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், பல விதி மீறல்களை செய்த எந்தவொரு மருந்து நிறுவனமும் யுசிபிஎம்பி-ன் கீழ் தண்டிக்கப்பட வில்லை. இச்செலவுகளை ஈடுகட்ட, அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகளின் விலைகளை உயர்த்தி மருந்து நிறுவனங்கள் மக்களை பெரும் அளவிற்கு பாதிப்புக்கு உள்ளாக்கியது.

அகில இந்திய மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதி கள் சம்மேளனம் (எஃப்எம்ஆர்ஏஐ) 2021இல் குறி யீட்டை அரசு சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. உச்சநீதி மன்றம் ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டதை அடுத்து,  கண்துடைப்பு நடவடிக்கையாக நிதி ஆயோக் உறுப்பி னர் டாக்டர் வினோத் கே.பால் தலைமையில் உயர் மட்டக் குழு ஒன்றிய அரசால் அமைக்கப்பட்டது. இந்தக் குழு என்ன செய்தது என்று இன்று வரை யாருக்கும் தெரியவில்லை. ஆனால் திடீரென்று, மார்ச் 12, 2024 அன்று UCPMP வெளியிடப்பட்டது. இக்குறியீடு சட்டப் பூர்வமாக்குவதற்குப் பதிலாக,  ஏற்கனவே உள்ள பல கட்டுப்பாடுகளை வெகுவாகத் தளர்த்தியுள்ளது.  மோடி அரசின் கார்ப்பரேட் நல கொள்கைகளுக்கு இது மேலும் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்றால் அது  மிகையாகாது. பிரதமமந்திரி ஜன் ஔஷாதி யோஜனா (PMJAY), ஆயுஷ்மான் பாரத்  என்ற பல பெயர்களில் உள்ள திட்டங்கள் அனைத்தும் வெறும் கண்துடைப்பு என்பது மோடி தலைமையிலான அரசு கடைப்பிடிக்கும் கொள் கைகள் மூலம் தெரிகிறது. இந்தியா போன்ற ஒரு மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் மருத்து வம், கல்வி ஆகியவை மக்கள் நலன் சார்ந்ததாக இருத்தல் அவசியம். ஆனால் கார்ப்பரேட் நலனே தங்கள் கொள்கை என்று கொண்டிருக்கும் இந்த மக்கள் விரோத அரசை ஆட்சியை விட்டு அகற்றி னால் தான் மக்கள் நல்வாழ்வு மேம்படும்.

கட்டுரையாளர் : தலைவர், அகில இந்திய மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கங்களின் சம்மேளனம்.

;