articles

img

மக்களுக்கு அமிர்தம் அல்ல, நஞ்சை அளித்துள்ள பட்ஜெட்! - சிஐடியு விமர்சனம்

சிஐடியு விமர்சனம்
 

புதுதில்லி, பிப்.2- மக்களுக்கு அமிர்தம் அளிப்பதாகச் சொல்லி, நஞ்சை அளித்துள்ள பட்ஜெட் என்று சிஐடியு தாக்குதல் தொடுத்திருக்கிறது. இது தொடர்பாக சிஐடியு பொதுச் செயலாளர் தபன் சென் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட், வெறும் அரசியல் வாய்ப் பந்தலே தவிர வேறல்ல. இதில் நாடு எதிர்நோக்கி யுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை. பொருளாதார ஆய்வறிக்கையும்கூட இதை மூடி மறைத்திருக்கிறது. பொருளாதார ஆய்வறிக்கைகூட, 2022-23இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.5 விழுக்காடு வீழ்ச்சி ஏற்படும் என்று கணித்திருக்கிறது.  நாடு சுதந்திரம் அடைந்தபின்னர் தொடர்ந்து கடந்த நான்கு ஆண்டுகளாக இவ்வாறு வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதுபோல் இதற்கு முன்னெப்போதும் ஏற்பட்டது கிடையாது. உற் பத்தித் துறையிலும்,  கடும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. வேலையிழப்புகள் ஏற்பட்டிருப்பது குறித்தோ, வேலையின்மை குறித்தோ, பணவீக்கம் குறித்தோ, இவற்றால் தொழிலாளர்கள் மற்றும் சாமானிய மக்க ளின் வாழ்வாதாரங்கள் மற்றும் பணி நிலைமைகளில் மோசமான நிலைமைகள் குறித்தோ பட்ஜெட் கண்டு கொள்ளவே இல்லை. பொருளாதார ஆய்வறிக்கை யில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சீர்கேடுகளை எப்படிச் சரி செய்வது என்று கூட பட்ஜெட்டில் எதுவும் கூறப்பட வில்லை.

நிதி வெட்டுகள்...

பெட்ரோலியப் பொருட்கள் மீதான மானியத்தில் கடும் வெட்டினை ஏற்படுத்தியிருப்பது, அதாவது சென்ற ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் 75 விழுக் காடு வெட்டினை ஏற்படுத்தியிருப்பது, பொருளா தாரத்தின் அனைத்துத் துறைகளிலும் கடும் பாதிப்பு களை ஏற்படுத்தி, விலைவாசியை கடுமையாக உயர்த்துவதற்கு இட்டுச் செல்லும். கோவிட் பெருந்தொற்றின்போது நம் நாட்டின் பொது சுகாதாரத்துறை மிகவும் மோசமான நிலையில் இருந்ததிலிருந்து எவ்விதமான படிப்பினையையும் மோடியால் தலைமை தாங்கப்படும் பாஜக அரசாங் கம் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே பட்ஜெட் தெளிவாகக் காட்டுகிறது. பொது சுகாதாரத் துறைக்கு பட்ஜெட்டில் போதுமான அளவிற்கு ஒதுக்கீட்டை உயர்த்துவதற்குப் பதிலாக, 34 விழுக்காடு வெட்டினை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோன்றே பள்ளி செல்லும் குழந்தைகள் இடைநிற்றல் அதிகரித்திருப்பதையோ, கல்வியில் டிஜிட்டல் பிளவு ஏற்பட்டிருப்பதையோ கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், கல்விக்கான ஒதுக்கீட்டிலும் சென்ற ஆண்டைக்காட்டிலும்  33 விழுக்காடு வெட்டினை ஏற்படுத்தி இருக்கிறது.   அங்கன்வாடி ஊழியர்கள், ‘ஆஷா’ ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் போன்ற திட்டப் பணியாளர்க ளுக்கு எவ்விதமான ஊதிய உயர்வும் அளிக்கப்பட வில்லை. மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்திற்கான ஒதுக்கீடும் சென்ற ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 33 விழுக்காடு வெட்டினை ஏற்படுத்தி இருக்கிறது. வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக கொண்டு வரப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் ரோஜ்கர் திட்டத்திற்கான ஒதுக்கீட்டிலும் 65 விழுக்காடு வெட்டு ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.

கொடூரத் தாக்குதல்

மிகவும் கொடூரமான தாக்குதல் என்பது தொழி லாளர் மீதாகும். தொழிலாளர் தொடர்பான ஒன்றிய அர சாங்கத்தின் திட்டங்களுக்கு சென்ற நிதியாண்டில் 23,165 கோடி ரூபாய் செலவினம் ஆகியிருந்த அதே  சமயத்தில், இந்தப் பட்ஜெட்டில் அதில் பாதியளவாக, அதாவது 12,435 கோடி ரூபாயாக வெட்டப்பட்டி ருக்கிறது. ஓய்வூதியத்திற்கான ஒதுக்கீட்டுத்தொகை யும் 4.2 விழுக்காடு அளவிற்கு வெட்டப்பட்டிருக்கிறது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கு வோம் என்று தம்பட்டம் அடித்த மோடி அரசாங்கம், பிரதமர் கிசான் ஒதுக்கீடுகளிலும் 11.76 விழுக்காடு வெட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.  விவசாயிகள் சம் பந்தப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு கடுமையாக வெட்டப்பட்டிருக்கிறது. வீட்டுவசதித் திட்டங்களுக்கும் பட்ஜெட்டில் கடும்வெட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

மக்கள் விரோத,  தேச விரோத பட்ஜெட்

மோடி அரசாங்கத்தின் சிறுபான்மை மக்கள் விரோத, பெண்கள் விரோத, தலித் விரோத, பழங்குடி யினர் விரோத அணுகுமுறையை, பட்ஜெட்டிலும் தெளிவாகப் பார்க்க முடிகிறது. சிறுபான்மையினர் வளர்ச்சிக்கான பல திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு கள் 66 விழுக்காடு அளவிற்கு வெட்டப்பட்டிருக்கின்றன. மகப்பேறு மருத்துவத் திட்டத்திற்கான ஒதுக்கீடு 40.15 கோடி ரூபாய் வெட்டப்பட்டிருக்கிறது. மொத்த பட்ஜெட் செலவினத்தில் பாலின சமத்துவ பட்ஜெட் ஒதுக்கீடு என்பது வெறும் 9 விழுக்காடேயாகும். இதே போன்றே தலித்துகளுக்கு 3.5 விழுக்காடும், பழங்குடி யினருக்கு 2.7 விழுக்காடும் மட்டுமே ஒதுக்கப்பட்டி ருக்கிறது. வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக பட்ஜெட்டில் எவ்விதமான திட்டமும் அறிவிக்கப்பட வில்லை. இவ்வாறு ஒட்டுமொத்தத்தில் இது ஒரு மக்கள் விரோத, தேச விரோத பட்ஜெட்டாகும். மக்களுக்கு  அமிர்தத்தை அளிக்கிறோம் என்று கூறி உண்மையில் நஞ்சை அளித்திருக்கும் பட்ஜெட்டாகும். எனவே இவ்வாறு தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக, உழைக்கும் மக்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இதற்கெதிராக நாடு முழுதும் கிளர்ச்சிப் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று சிஐடியு அனைத்துக் கிளைகளையும் அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

 

;