ஆர்எஸ்எஸ்-இன் அரசியல் கருவியான இந்துத்துவ அடையாளத்தை அனைவருக்கும் பொருத்தும் விதமாக இந்து- முஸ்லிம் என்ற பிரிவினைவாதத்தை முன்வைத்து, ஏதோ இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாறும் ஒரு மதத்தை காப்பதற்காகவே இன்னொரு மதத்தோடு போரிட்டது போல் ஒரு சித்திரத்தை முன்வைக்க முயல்கிறார்.
சமீபத்தில் ஆர்எஸ்எஸ் இன் சர் சங் சாலக் மோகன் பகவத் இந்தி மற்றும் ஆங்கில நாளிதழ்களுக்கு கொடுத்த நேர்காணலில் நம் இந்தியாவின் தற்போதைய அரசியல் பொரு ளாதார சூழ்நிலைகளை பற்றியும் எதிர்காலத்தில் நிகழக்கூடிய மாற்றங்கள் குறித்தும் பல குறியீடு களை கொடுத்துள்ளார்.
அரசியலமைப்புக்கு எதிரான சக்தி
முதல் அறிகுறி என்பது ஆர் எஸ்எஸ் அமைப்பு நமது அரசியலமைப்பிற்கு எதிரான சக்தியாகும். அந்த நேர்காணலில் மோகன் பகவத் சங் பிரச்சாரகர்கள் அரசியலமைப்பில் எந்த ஒரு பதவியிலும் இல்லை. என்றாலும் அவர்கள் செய்யக்கூடிய செயல்களுக்கு ஆர்எஸ்எஸ்-ஐ பொறுப்பாக்குவார்கள். சில நேரங்க ளில் நேரடியாக கூறாமல் மறைமுகமாகவே கூறினா லும், அதற்கும் ஆர்எஸ்எஸ் தான் பொறுப்பாகும் என்கிறார். ஏனெனில் சங் பிரச்சாரகர்களை பயிற்று விப்பது ஆர்எஸ்எஸ் அமைப்பு தான். ஆகவே நாம் அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. அதனால் நம்முடைய சங் பிரச்சார கர்கள் செய்யக்கூடிய செயல்களை ஒரு முறைக்கு இருமுறை பரிசீலனை செய்ய வேண்டும் என்கிறார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் செயல்பாடு களுக்கு அந்த கட்சிகளையே பொறுப்பாக்குவார்கள். ஆனால் பாஜகவின் பிரதிநிதிகள் செயல்பாடுகளுக்கு அந்த கட்சியின் தலைவருக்கு இருக்கும் பொறுப்பை விட ஆர் எஸ் எஸ் தலைவருக்கு தான் அதிகமான பொறுப்பு இருப்பதாக கூறுகிறார். ஏனெனில் தற்போ தைய அமைச்சரவையில் 70 சதவீத அமைச்சர்கள் சுயம்சேவகர்களாக இருந்தவர்கள் தான். நம் முடைய பிரதமரே ஒரு சுயம் சேவகர் தான். ஆகவே ஆர்எஸ்எஸ் அமைப்பு அதன் அரசியல் பிரிவான பாஜகவின் பிரதிநிதிகள் செயல்பாட்டை மேற்பார்வை செய்கிறதா? அப்படி இல்லை எனில் மோகன் பகவத் குறிப்பிடும் பொறுப்புணர்வு என்பது என்ன? அதேபோல என்னென்ன விஷயங்களை பரிசீலனை செய்ய வேண்டும் என்று விளக்கிட வேண்டும்!
இந்தியாவில் பல கலாச்சார அமைப்புகள் பல்வேறு அரசியல் நம்பிக்கைகளுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதன் அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்யக்கூடிய செயல்பாடுகளுக்கு அந்த அமைப்புகள் பொறுப்பேற்றுக் கொள்ள முடியுமா? இங்கே ஆர் எஸ் எஸ் என்பது அரசியல மைப்பிற்கு விரோதமான அமைப்பாகும். அதை தற்போது அவருடைய நேர்காணலில் உறுதிப்படுத்தி யுள்ளார்.
ஒற்றைக் கலாச்சார சமூகம், எங்கே, எப்போதிருந்தது?
அதேபோல இரண்டாவது அறிகுறியாக அரசிய லமைப்பு சட்டத்திற்கும், ஆர்எஸ்எஸ் சொல்லக் கூடிய கலாச்சார தேசியத்திற்கும் இடைவெளி அதிக மாக உள்ளது என்றும், இந்திய வரலாற்றில் மதங்க ளின் அடிப்படையில் பிரச்சனைகள் இருந்தது என்றும், இந்து சமூகம் கடந்த ஆயிரம் வருடங்க ளாக போரிட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவர் குறிப்பிட்ட அந்த ஒற்றை கலாச்சார சமூகம் எங்கே, எப்போது இருந்தது என்பதை விளக் கிடுவாரா! அதேபோல அன்றைக்கு ஆட்சியில் இருந்த மன்னர்கள் வேறு மன்னர்களுடன் சேர்ந்து வெற்றி கொண்டதையும், சில நேரங்களில் வெளியில் இருந்து வந்த ஊடுருவலை ஆதரித்ததையும் குறிப்பிடு வாரா! அதேபோல ஒரு மன்னர் இன்னொரு மன்ன ரையும், அவரது படையினரையும் கொலை செய்ததை அவர் குறிப்பிடும் சமூகத்தில் வருமா? சாதிய படிமானங்களையும் கட்டுமானங்களையும் காப்ப தற்காக தங்களை விட கீழ் நிலையில் உள்ள சாதியினர் மீது செய்த அட்டூழியங்களை பற்றி குறிப்பிடு வாரா! ஆர்எஸ்எஸ் இன் அரசியல் கருவியான இந்துத்துவ அடையாளத்தை அனைவருக்கும் பொருத்தும் விதமாக இந்து- முஸ்லிம் என்ற பிரிவினைவாதத்தை முன்வைத்து, ஏதோ இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாறும் ஒரு மதத்தை காப்பதற்காகவே இன்னொரு மதத்தோடு போரிட்டது போல் ஒரு சித்திரத்தை முன்வைக்க முயல்கிறார். போரில் ஆக்ரோஷமாக சண்டை இடுவது இயற்கையானதே! இந்த போர் என்பது நம்மோடு இருக்கும் எதிரியை எதிர்த்து தான். இந்த போர் இந்து சமூகத்தையும், இந்து தர்மத்தையும், இந்து கலாச்சாரத்தையும் காப்ப தற்காகவே நடத்தப்படுகிறது என்கிறார். ஆர்எஸ்எஸ் உடன் விவாதிப்பதன் மூலமாக அதனுடைய கண்ணோட்டத்தை நவீனப்படுத்தலாம் என்று நம்பு பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். ஏனெனில் ஆர்எஸ்எஸ் என்பது விஷமத்தனமான ஆயுதங்களை மட்டுமே நம்பும் அமைப்பாகும்.
இஸ்லாமியர்கள் அஞ்ச தேவை இல்லை. அதே நேரத்தில் அவர்கள் மற்றவர்களோடு அதாவது இந்துக்களுக்கு சரிசமமாக இருந்திட வேண்டும் என்பதை விட்டுக் கொடுக்க கேட்கிறார். அதாவது அவர்களின் முன்னோர்களான கே.பி. ஹெட்கேவர் மற்றும் எம்.எஸ். கோல்வாக்கர் கூறியது போல, இஸ்லா மியர்கள் இந்து தேசியத்திற்கு இரண்டாம் தர குடிமக்களாக தான் இருக்க வேண்டும் என்றும், ஆர்எஸ்எஸ்-ஐ பொறுத்தவரை இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது கம்யூனிஸ்டுகளும், கிறிஸ்தவர்களும் உள்ளூர் எதிரிகள் ஆவார்கள். மேலே கூறப்பட்ட விதிமுறை இவர்களுக்கும் பொருந்தும் என்றும் அதே போல மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற சித்தாந் தத்தை எதிர்ப்பதையும் விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ்-இன் முன்னோர்கள் கூறி யுள்ளனர். நமது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கூறானது மதச்சார்பின்மையே! மதச்சார்பின்மை தாக்குதலுக்கு உள்ளாகும் போது ஜனநாயகம் உயிர் பிழைத்திருக்க முடியாது. சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பாதுகாப்பதும், அரசியலில் இருந்து மதத்தை விலக்கி வைப்பதும் ஜனநாயக பாது காப்பு நடவடிக்கையே ஆகும்! மதவாதம் எந்த மதத்தில் இருந்து வந்தாலும் அது இன்னொரு மதவா தத்தை தான் வளர்த்து விடுமே தவிர தீர்வை தந்து விடாது.
இந்துத்துவம் மதவெறி கருவி
மூன்றாவது குறியீடாக ஒட்டுமொத்த இந்து சமு தாயத்தின் சார்பாகத்தான் ஆர்எஸ்எஸ் பேசுவதாக சொல்கிறது. ஆனால் ஆர்எஸ்எஸ்இன் அரசியல் கரு வியான இந்துத்துவத்திற்கும், கோடான கோடி இந்து மத நம்பிக்கையாளர்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஏனெனில் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பாதிக்கப்படும் சாதாரண இந்து விவ சாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் ஆதரவாக ஆர்எஸ்எஸ் அமைப்பு பேசியதே இல்லை. பகவத் அவர்கள் இந்து சமூகம் என்பது வளமையானதும், வலிமையானதும் என்று கூறுகிறார். அது மேல் தட்டில் உள்ள ஒரு சில இந்துக்களுக்கு மட்டுமே. வறுமையில் வாடும் எளிய மக்களுக்கு எந்த விதத்திலும் பயன்படாது. அதேபோல சாதிய ரீதியாக ஒடுக்கப்படும் தலித் மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை கண்டித்து ஒரு முறை கூட ஆர்எஸ்எஸ் அமைப்பு பேசிய தில்லை. அது ஒரே ஒரு இடத்தில் மட்டும் சாதிய சமூக அமைப்பை குறிப்பிடுகிறது. அது எங்கே எனில் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தை எல்லா சமூக மக்க ளையும் ஒன்றிணைக்க ஒரு விசமமான அரசியல் கருவியாக சாதி அடிப்படையில் ஆன வேறுபாடு களை பயன்படுத்திக் கொள்கிறது. அதேபோல ஆர்எஸ்எஸ் அமைப்பில் பெண்கள் குறித்த அணுகு முறையை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏனெனில் இந்த நேர்காணலில் பெண் களை நேரடியாக ஆர்எஸ்எஸ் நடத்தும் சாகாக்களில் பங்குபெற செய்வதற்கு முயற்சி செய்வதாக கூறியுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பு என்பது ஒரு ஆணாதிக்க சிந்தனையின் உச்ச வடிவமாகும். பெண்க ளுக்கு எதிரான வரதட்சணை கொடுமை, பாலியல் தாக்குதல்கள், குடும்ப வன்முறைகள் குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பு இதுவரை தன்னுடைய கருத்தை தெளிவுபடுத்தியது இல்லை.
நாம் சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் கொடுத்துள்ள இந்த நேர்காணல் என்பது, இந்தியா என்னென்ன இழக்க வேண்டும் என்பது குறித்தான இந்திய மக்க ளுக்கு ஒரு விழிப்புணர்வு எச்சரிக்கையே ஆகும்.
நன்றி: ஆங்கில இந்து நாளிதழ் (13-02-23),
தமிழாக்கம் : கே.சரவணன்,ஈரோடு