“நான் ஒரு ஏழை விவசாயி. எனக்கு சில ஆடு களும் கொஞ்சம் நிலமும் இருக்கிறது.” என்று அண்ணாமலை சொன்ன போது அவரது ஆதரவு ஊடகங்கள் புல்லரித்துப் போய் எழுதின. ஆனால் அண்ணாமலை அவர்களே! உங்க ளது தேர்தல் பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் உங்களுக்கு 20.78 ஏக்கர் புன்செய் நிலமானது, இன்றைய சந்தை மதிப்பு படி 1 கோடி ரூபாய்க்கு இருப்பதாக அறிவித்து இருக்கிறீர்கள். அசையும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.1,21,13,849/- என்று அறிவித்து இருக்கிறீர்கள். 21 ஏக்கர் புன்செய் நிலம் கொண்டவரால் 7 லட்சம் ரூபாய் பெறுமானம் உள்ள கைக்கடிகாரத்தை கட்டு வது போல எல்லா விவசாயிகளும் ‘மேன்மை’ அடைந் தால் நல்லதுதான். ஆனால் அண்ணாமலை அவர்களே, நீங்கள் அணிந்திருக்கும் கைக்கடிகாரம் பற்றி பேசவேண்டு மானால் ரபேல் நிறுவனம் (RAFALE) பற்றியும் பேசி ஆக வேண்டி இருக்கிறது.
ரபேல் நிறுவனம்
ரபேல் (RAFALE) என்பது டஸ்ஸால்ட் ஏவியேசன் (DASSAULT AVIATION) எனும் பிரான்ஸ் நாட்டின் நிறுவனம் தயாரிக்கும் போர் விமானங்களின் பெயர். இந்த நிறுவனம் nEUROn, Falcon 6X, Falcon 8X எனும் பெயர்களிலும் இதன் போர்க் கருவிகளை தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்து வரு கிறது. இந்த அடிப்படையில் தான் மன்மோகன் சிங் அரசு இந்தியாவுக்கான ரபேல் (RAFALE) ரக போர் விமா னங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டது. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான பாஜக அரசு, 2015 ஆம் ஆண்டு பழைய ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு அதை விட அதிக விலைக்கு குறைவான போர் விமா னங்களை வாங்க ஒப்பந்தம் செய்தது.
ஊழல் குற்றச்சாட்டு
RAFALE போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது என்றும் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கோரிக்கையை பாஜக நிராகரித்ததன் தொ டர்ச்சியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகோய் தலை மையில் விசாரணைக்கு வந்தது. இந்த போர் விமா னங்கள் வாங்கியது தொடர்பான ஆவணங்களை இந்திய பாதுகாப்பு துறையில் காணவில்லை. திருடு போய் விட்டதாக நீதிமன்றத்தில் பாஜக அரசு தெரி வித்ததன் அடிப்படையில், சர்ச்சைக்குரிய நீதிபதி ரஞ்சன் கோகோய் ஊழல் நடக்கவில்லை என்று தீர்ப்பு வழங்கினார். அதன் பிறகு அவர் நாடாளுமன்ற உறுப்பி னராக பாஜகவினரால் பதவி வழங்கப்பட்டு அமர்த்தப் பட்டார். இந்தியாவில் இந்த வழக்கு ஒரு விதமாக ஊற்றி மூடப்பட்டு இருந்தாலும் பிரான்சில், இந்தியா வாங்கிய போர்விமானங்களில் ஊழல் நடைபெற்ற தாக முகாந்திரம் இருப்பதாக கூறி அங்கே வழக்கு நடை பெற்று வருகிறது.
ரபேல் கைக்கடிகாரம்
டஸ்ஸால்ட்ஏவியேசன் நிறுவனம் தனது 50 ஆண்டு நிறைவை முன்னிட்டு BR0394-RAFALE-CE எனும் பெயரில் பிரத்தியேகமாக வடிவமைத்து 500 கடிகாரங்களை மட்டும் சந்தைக்கு 2015 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. அதன் அன்றைய விலையாக 6,205 டாலர் (1டாலர் = ரூ.59 – 2015) ரூ.3.6௦ லட்சத்தி ற்கு விற்கப்பட்டது. 500 கைக்கடிகாரங்களும் 2017 ஆம் ஆண்டு விற்றுத் தீர்ந்து விட்டன.
அண்ணாமலையும் அனாவசிய பேச்சுக்களும்
தமிழக பாஜகவில் சமீப காலமாக உட்கட்சி பிரச்ச னையில் பல்வேறு நபர்கள் மீதான கேவலமான காணொலிகளும் உரையாடல்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அண்ணாமலை தான் இப்படியான ‘HONEY TRAP’ (இனிப்பாகப் பேசி வலையில் விழச் செய்து பகை தீர்த்துக் கொள்வது) செய்கிறார் என்று பாஜக வினர் கூறி வந்த நிலையில், அவர் கையில் இருக்கும் BR0394-RAFALE-CE விலை உயர்ந்த கடிகாரத்தின் மூலமாகவும் பதிவு செய்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த கைக்கடிகாரத்தை அவர் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார் என்ற தகவல்கள் சமூக ஊடகங்களில் கசிந்தது. அந்த அடிப்படையில் தான் இவ்வளவு விலை உயர்ந்த கடிகா ரத்தை அண்ணாமலை தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்யவில்லை என்ற செய்தி யும் சமூக ஊடகங்களில் கசியத் துவங்கியது. இந்த கைக்கடிகாரத்தின் ரசீது இருந்தால் அதை சமர்ப்பிக்க சொல்லி அமைச்சர் செந்தில் பாலாஜி பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார். அண்ணாமலை, தனது 18-03-2021 தேதியிட்ட தேர்தல் பிரமாண பத்திரத்தில் இந்த கைக்கடிகா ரத்தை பற்றிய தகவலை தாக்கல் செய்யவில்லை என்பது உறுதியானது. அதோடு இந்த கைக்கடி காரத்தை அவர் பணியில் இருந்த காலத்திலேயே அணிந்து வந்ததாக அவரது நெருங்கிய பெங்களூரு நண்பர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள். அந்த புகைப் படங்களும் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வந்தன.
இதற்கிடையில் பத்திரிகையாளர்களிடம் அண்ணா மலை பேசும்போது, ரபேல் எனும் நிறுவனம் தயாரித்த 500 கடிகாரங்களில் தனது 149 ஆவது கைக்கடிகாரம் என்றும் இது ரபேல் விமானத்தின் பாகங்களால் செய்யப்பட்டது என்றும் ‘‘தேசபக்திக்காக” வாங்கப் பட்டது என்றும், இது மே – 2021 லேயே வாங்கப் பட்டது என்றும் கூறினார். அத்தோடு நிற்காமல், தனது வங்கி பரிவர்த்தனைகளை சமர்ப்பிப்பதாகவும் தனது மனைவி தன்னை விட 7 மடங்கு வருமானம் ஈட்டுவதாக வும் அவரது வங்கிக் கணக்கையும் தான் பாத யாத்திரை புறப்படும்போது சமர்ப்பிப்பதாகவும் கூறினார். அதோடு இதே போல ஒவ்வொரு சட்ட மன்ற உறுப்பினரும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறினார். அண்ணாமலை, காவல்துறையில் பணியாற்றி யவர். அவரின் இந்த பேட்டியின் மூலம் நமக்கு எழும் கேள்விகள்:-
- ஒவ்வொரு அதிகாரியும் வருடா வருடம் தனது வரவு செலவு, தனது மற்றும் தனது குடும்பத்தார் பெய ரில் இருக்கும் அசையும், அசையா சொத்துக்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதி என்பது அண்ணாமலைக்கு தெரியாதா? ஏதோ இதுவரை இல்லாத ஒன்றை இவர் தான் புதிதாக கடைபிடிக்கப் போவதை போன்று பிதற்றுவது எதற்காக?
- ஒவ்வொரு ஆண்டும் வருமான வரித்துறை யில் தனது வருமான விபரங்களை வருமான வரி வரம்புக்கு உட்பட்ட அனைவருமே தாக்கல் செய்கிறார் கள். சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களும் தாக்கல் செய்கிறார்கள். இதுவும் அண்ணாமலைக்கு தெரியாதா? அப்படி தாக்கல் செய்யும் கணக்கு வழக்குகள் மீள் பரிசோதனைக்கு எட்டு வருட காலம் வரை உட்பட்டது என்பதும் அண்ணாமலைக்கு தெரியாதா?
- யாரும் அவரது மனைவியின் வருமானத் தைப் பற்றி பேசாதபோது, தன்னை விட ஏழு மடங்கு அதிகமாக ஈட்டுவதாக, தேர்தல் பத்திரத்தில் காட்டப் பட்டு இருக்கும் தரவுகளை மீறி, அவரது மனைவி யின் அனுமதியின்றி பொய்யான தரவுகளை தந்தி ருக்கிறார்.
தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ள விபரம் இதுதான்:
Assessment Mr. Mrs. Akila
Year Annamalai A nnamalai
ஆண்டு அண்ணாமலை அகிலா
அண்ணாமலை
AY 2016-17 6,11,832 14,62,875
AY 2017-18 9,51,958 14,64,780
AY 2018-19 9,17,888 15,53,581
AY 2019-20 9,34,706 16,97,719
AY 2020-21 7,67,020 15,09,430
கடிகாரம் எப்படி வந்தது?
மேலும், விலை உயர்ந்த ரபேல் கைக்கடிகாரத்தை அண்ணாமலை 2016 லிருந்தே பயன்படுத்தி வந்த தாக அவரது நெருங்கிய நண்பர்கள் காணொலி வாயி லாகவும் புகைப்படங்கள் வாயிலாகவும் ஆதாரங் களை பகிர்ந்து வருகிறார்கள். அப்படி அண்ணாமலை வாங்கி இருந்தால் கீழ்க்கண்ட சட்டப் பூர்வமான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்:
- பணியில் இருக்கும் காலத்தில் அன்பளிப் பாக வாங்கி இருந்தால், அதற்கான அனுமதியை பெற்று இருக்கவேண்டும். அதோடு அவரது ஆண்டு அறிக்கையில் இதற்கான மதிப்பை தாக்கல் செய்தி ருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.
- பணியில் இருக்கும் காலத்தில் விலைக்கு வாங்கி இருந்தால், அதற்கான இறக்குமதி வரியை கட்டி இருக்கவேண்டும். அந்த ரசீது அவரிடம் இருக்க வேண்டும். அவரிடம் இல்லை.
- மே மாதம் 2021 தேர்தலுக்கு பின்னர் தான் வாங்கியதாக சொல்லும் அண்ணாமலை, அவர் என்ன விலைக்கு இறக்குமதி செய்தார்; இறக்குமதி செய்யும்போது அவர் கட்டவேண்டிய இறக்குமதி வரி, சுங்க வரி அனைத்தும் கட்டி அதன் இன்றைய மதிப்பீட்டிற்கு அவரது வருமான வரி 31-03-2022 வரைக்குமான அறிக்கையில் குறிப்பிட்டு இருக்க வேண்டும். அதை அவர் குறிப்பிடவில்லை.
- இவர் வாங்கியதாக சொல்லும் 149 ஆவது கைக் கடிகாரம் விற்கப்பட்ட ஆண்டு 2016. 5 ஆண்டுகள் கழித்து அண்ணாமலை கைகளில் எப்படி வந்திருக் கும்? அவர் நேரடியாக வாங்கியதாக அறிக்கை விடு கிறார். இதுவும் சந்தேகத்திற்கு இடமளிக்கிறது.
- இந்த கைக் கடிகாரத்தை யார் வாங்கி இருந்தா லும் அவர்கள் அதற்குரிய பணத்தையும் வரியையும் கட்டிய ரசீதை சமர்ப்பித்தாக வேண்டும். அவை இரண்டும் அண்ணாமலையிடம் இல்லை.
தொடர்ந்து உண்மைக்குப் புறம்பாக, பொய்களால் மட்டுமே அரசியல் செய்ய முடியும் என்ற நம்பிக்கையு டன் அண்ணாமலை மலிவு அரசியல் செய்வதை தமிழக மக்கள் புரிந்துகொண்டார்கள். தமிழக மக்களை இன்னும் முட்டாள்கள் என்று நினைத்து இதே நடவடிக் கையை தொடர்ந்தால் அண்ணாமலை அரசியல் களத்தில் இருந்து தூக்கி எறியப்படுவார் என்பது உண்மை.