articles

img

காலத்தை வென்றவர்கள் : கவிஞர் இன்குலாப் நினைவு நாள்...

இன்குலாப் ஒரு தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். சமூகச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன. இன்குலாப் என்பதற்குப் புரட்சி என்று பொருள்படும்.

தொடக்கக் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளராக இருந்து, பிற்காலத்தில் மார்க்சியக் கொள்கையாளர் ஆனார்.கீழவெண்மணியில் 1968 இல் நிகழ்ந்த 44 தலித் மக்கள் பொசுக்கப்பட்ட நிகழ்விற்குப் பிறகு இன்குலாப் மார்க்சியத்தை நாடினார். இளவேனில் என்பவர் நடத்திய கார்க்கி இதழில் கவிஞர் இன்குலாப்பின் தொடக்கக் கால கவிதைகள் வெளிவந்தன. தராசு, நக்கீரன், இனி, நாற்காலி, உண்மை, உங்கள் விசிட்டர் எனப் பல இதழ்களில் ஏராளமான கட்டுரைகளையும் கவிதைகளையும் அவ்வப்போதுஎழுதினார். மனுசங்கடா நாங்க மனுசங்கடா என்னும் இவர் எழுதிய பாட்டு எண்ணற்ற மேடைகளில் தலித் மக்களால் பாடப்படுகிறது.“காந்தள் நாட்கள்” என்னும் கவிதைத்தொகுதிக்காக 2017ஆம் ஆண்டில் இவருக்கு சாகித்ய அகாதெமி விருது மரணத்திற்குப் பின்னர் வழங்கப்பட்டது. அதனை அவர் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர்.2006ஆம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதினைத் திருப்பி அளித்தார். இன்குலாப் டிசம்பர் 1, 2016 அன்று உயிரிழந்தார்.

===பெரணமல்லூர் சேகரன்===

;