articles

img

அதிமுகவின் வேடிக்கையும்-விநோதமும்....

தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் ஞாயிற்றுக் கிழமையுடன் ஓய்ந்தது.இந்த தேர்தலிலும் எப்போதும் போன்றுஆளும் கட்சி தனது அதிகார பலத்தை பயன்படுத்திக் கொண்டது. கூடவே மத்திய பாஜகவும் துணைக்கு இருப்பதால் அவர்கள் அரங்கேற்றிய நாடகத்தை நாடே

பார்த்து சிரித்து வருகிறது. ஆனாலும் ஆளும் கட்சிக்கு இந்த தேர்தலில் மரணடி கிடைப்பதை அனைத்து கருத்து கணிப்புகளும் உறுதி செய்துவிட்டன.பறக்கும் படை மற்றும் கண்காணிப்புக்குழுக்கள் நடத்திய சோதனையில் சென்னை சைதாப்பேட்டையில் துவங்கி குமரி முனை வரைக்கும் பல கோடி ரொக்கப்பணமும், பரிசுப் பொருட்களும் ஆளும் கட்சி வேட்பாளர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. இது ஒரு கண் துடைப்பு நாடகம் என்றாலும் தோல்வி பயத்தில் உள்ள ஆளும் கட்சியினர் அனைத்து தொகுதியிலும் ஓட்டுக்கு 500 ரூபாயில் துவங்கி 3 ஆயிரம் வரைக்கும் பணத்தை வாரி இறைத்து வாக்குகளை விலைபேசினர்.

அதிலும் குறிப்பாக, சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ஆளும் கட்சியை சேர்ந்த ஆதிராஜராம் கடந்த மூன்று நாட்களாக (சனி,ஞாயிறு,திங்கள்) ஓட்டுக்கு 1000 ரூபாய் என்று வாரிவாரி வழங்கினார். அப்போது ஆளும் கட்சியினரை ஒரு சில இடங்களில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சியினர் துரத்தி அடித்த சம்பவங்களும் நடைபெற்றன. இது இங்கு மட்டுமல்ல, அமைச்சர் டி.ஜெயகுமார் போட்டியிடும் தொகுதிக்கு பக்கத்து தொகுதியான திருவொற்றியூரில் முன்னாள் எம்எல்ஏ தற்போதைய ஆளும் கட்சி வேட்பாளர் குப்பனுக்கு வாக்குகள் கோரி பணம் பட்டுவாடா செய்தவர்களை மடக்கிப் பிடித்த மதச்சார்பற்ற கூட்டணி தொண்டர்கள் மீது கொலைவெறி தாக்குதல் (தனியார் மருத்துவமனையில் புகுந்தும்) நடத்தினார்கள்.இந்த நிலையில், திமுக தலைவர்ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி, உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம், முன்னாள் அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனின் காட்பாடி, எ.வ.வேலு போட்டியிடும் திருவண்ணாமலை, முன்னாள் அமைச்சர் கே.என். நேரு போட்டியிடும் திருச்சி மேற்கு ஆகிய தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர் தேர்தல் ஆணையத்தில் திங்களன்று(ஏப்.5) புகார் அளித்திருப்பது விநோதமான வேடிக்கையாகும்.

;