டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கரின் சாதியை ஒழித்தல்(Annihilation of Caste) என்ற நூலில் இந்து மதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் உள்ளன. அத்த கைய மதம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறுவதில் எவ்வித தயக்கமும் தனக்கில்லை. அதை ஒழிக்கப் பாடு படுவதில் மதத்திற்கு விரோதம் என்று எதுவும் இல்லை என்றும் கூறுகிறார். அது இந்து மதத்தை ஒழிப்ப தற்கான அழைப்பா?இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவால் கட்டுப்படுத்தப்பட்டு, சிந்தனை எதுவும் இன்றி நடைமுறைப்படுத்தப்படும், அடித்தளத்தில் இனவெறி யை கொண்ட அதன் தன்மையைத் தான் அவர் குறி வைத்தார்.இந்து மதத்தை சீர்திருத்துவதற்கான வழி களையும் அந்நூலில் அவர் பரிந்துரைக்கிறார்.
தங்கள் வசதிக்காக அம்பேத்கரையும் பயன்படுத்துகின்றனர்
பிராமண சாதிகளை சேர்ந்த பலர், சாதி என்பது தொழில் மற்றும் இந்து மதத்தின் உள்ளார்ந்த அம்சம் சார்ந்த இயற்கையான சமூக அமைப்பு என நம்புகி றார்கள். அதில் உள்ள முற்போக்காளர்கள் சாதியைச் சுற்றி நடத்தப்படும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், (சாதிக்கு அல்ல என்பதை நினை வில் நிறுத்துக!). வரலாற்றையும் எதார்த்தத்தையும் புறக்கணித்து வர்ணம்,சாதி ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை விளக்க முயல்கின்றனர். அம் பேத்கரின் வார்த்தைகள் இந்து மதத்தின் மீதான அவரது மற்ற பிரதான தாக்குதலுடன் சேர்த்து வாசிக்கப் படும் பொழுது அவர்களுக்கு அது அவமானகர மானதாக இருந்திருக்கும். ஒரு சிந்தனை அல்லது யோசனையின் எந்த ஒரு வலுவான விமர்சனமும் எவ்வாறு புரிந்து கொள்ளப் படுகிறது என்பது சூழல், இடம், சொல்லும் நேரம் மற்றும் அதன் விளக்கத்தைப் பொறுத்தது. அவர்களின் அந்த நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியதாக அவர் மீது குற்றம் சாட்டும் சிலர் தன்னை இந்து என சொல்லிக் கொள்ளும் ஒருவனாக நான் சாகமாட்டேன் என ஒரு காலத்தில் கூறிய அம்பேத்கரையும் தங்கள் வசதிக் காக பயன்படுத்திக் கொள்கின்றனர். அம்பேத்கர் எந்த காலத்திலும் தன்னை (விசுவாசி ) நம்பிக்கையாளர் என அர்த்தப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் “பிறப்பு”என்னும் விபத்தின் காரணமாக அவர் இந்து மதத்தின் அசிங்கமான சமூக அமைப்பில் உறுப்பின ராக இருந்தார்.அவர் இறப்பதற்கு முன் அந்த உறுப்பி னர் பதவியும் துறந்தார்.
சொல்லின் பயன்பாடு
சனாதன தர்மம் என்ற வெளிப்பாடு இன்று இந்து மதம் அதன் சடங்கு மற்றும் தத்துவ நடைமுறைகள், சில நேரங்களில் இஸ்லாமியத்திற்கு முந்தைய பண் டைய இந்தியாவில் நிலவிய அனைத்து மத மற்றும் ஆன்மீக மரபுகளை உள்ளடக்கிய ஒரு பரந்த சொல்லா கவும் பயன்படுத்தப்படுகிறது.இவை மேலோட்டமா னது மட்டுமல்ல பிராமணப் பிரிவினர்களால் பரப்பப் பட்டது என்பதும் மறுக்க முடியாதது. அர்த்தங்கள் நிலையானவை அல்ல, அவை சேர்க்கப்படுகின்றன, நீக்கப்படுகின்றன, கட்டமைக் கப்படுகின்றன, திணிக்கப்படுகின்றன, தவிர்க்கப்படு கின்றன. இடம், நேரம், சூழல், காரணத்தை பொறுத்தும் அர்த்தங்கள் மாறுகிறது.சனாதன தர்மத்தி லும் இதுதான் உண்மை. நான் ஒரு பிராமண வீட்டில் வளர்ந்தேன்.அங்கு பெரும்பாலான மத செயல்பாடுகள் நடந்தன. ஸ்லோ கங்களை கற்றுக் கொண்டேன். வேதம், புராணங்கள் மற்றும் இதிகாசங்களின் கதைகள் எனது வளர்ப்பின் ஒரு பகுதியாகும். இந்த நம்பிக்கை சனாதன தர்மம் என நான் சொல்லவில்லை. எனக்கு அது இந்து மதம். சிலர் அதை இந்து மதம் அல்ல பிராமணியம் என சொல்வார்கள். அதுவும் சரியாக இருக்கும்.
போலித்தனமானது
சனாதன தர்மம் என்ற சொல் முக்கியமாக பார்ப்ப னர்கள் மற்றும் அறிஞர்களால் இறையியல் அல்லது ஆன்மீக விரிவுரைகளில் அல்லது ஆழ்ந்த சடங்கு குறித்த விளக்கங்களில் பயன்படுத்தப்பட்டது. இந்த நபர்கள் பிராமணப் பிரிவுகளை சார்ந்தவர்களாகவோ அவர்களுக்கு அணுக்கமானவர்களாகவோ இருந்த னர். பக்தியுள்ள, பிராமணர் அல்லாத தமிழர்கள் தங்களை சனாதனிகள் என சொல்லிக் கொள்வ தில்லை. அவர்கள் மாரியம்மன், காமாட்சி,சிவன், முருகா என பிற தெய்வங்களை வழிபடுபவர்கள். இந்து மதத்தின் ஒரு பகுதியாகவும் தன்னை கருதுகின்றனர். இந்த சொல்லின் பொதுவான பயன்பாடு இந்து மதத்திற்கு ஒத்ததாக உள்ளது என்பது போலித்தன மானது. கடந்த நூற்றாண்டில் சமீபத்திய தசாப்தங்களில் இந்துத்துவா தீவிரவாதிகள் இந்த வார்த்தையை ஆயுதம் ஆக்கியுள்ளனர். இந்த சொற்றொடருக்கு அவர்கள் கொடுத்துள்ள அர்த்தங்கள் தான் தள்ளு முள்ளுக்கு வழி வகுக்கிறது. இரக்கமுள்ள, வரவேற்கும் மற்றும் உள்நோக்கமுடைய சொற்றொடராக பயன் படுத்தவில்லை மற்ற எல்லா நம்பிக்கைகளையும் விட இது சிறந்தது, பழமையானது, அதிநவீனமானது என நிரூபிப்பதற்காக மற்றவர்களை புண்படுத்திடவும் தங்களை புகழ்ந்து கொள்வதற்காகவும் இந்து வலதுசாரிகளால் இணைக்கப்பட்டது. இந்த வார்த்தை களை உச்சரிக்கும் பலர் முஸ்லிம்கள், கிறிஸ்துக்கள் மற்றும் தலித்துகள் மீது தாக்குதல்களை நடத்து கின்றனர். இந்த குறிப்பிட்ட செயல்களை செய்தவர்கள் மீது மட்டுமே குற்றம் சாட்ட முடியாது. அதோடு அரசியல், மதம், ஆன்மீகம் மற்றும் சமூக தளங்களில் அவர் களை தூண்டிவிடுபவர்கள் மீதும் குற்றம் சுமத்தப்பட வேண்டும். பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்.இந்த வகையிலான சனாதனச் செயல்பாடுகள் பாகுபாட்டுக் கும் வழி வகுக்கின்றன.
சாதி வெறியை அங்கீகரிப்பது
தங்கள் சொந்த சாதி இயல்பை அங்கீகரிக்க முடியா மல் இந்த வார்த்தையை பாதுகாப்பவர்களும் உள்ளனர். “நமது சமூகத்தில் சமத்துவமின்மைக்கு ஒரு வர லாறு உள்ளது. ஒரு சமூக அமைப்பின் அடிப்படையில் எங்கள் சொந்த மக்களை பின் தங்கிய நிலையில் வைத்திருந்தோம். அவர்தம் வாழ்க்கை விலங்குகளு க்கு ஒப்பானதாக மாறிய பொழுதும் நாம் கவலைப்பட வில்லை. இரண்டாயிரம் வருடம் இது நீடித்தது. எனவே இந்த பாகுபாடு இருக்கும் வரை இட ஒதுக்கீடு தொடர வேண்டும்” என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கூறுகிறார். இட ஒதுக்கீடு தொடர்பாக மட்டும் சாதிப்பாகுபாடு குறித்து பேசுகிறார். சாதி என்பது ஒழிக்கப்பட வேண்டிய ஒரு உயிருள்ள கொடியது என்பதை எப்பொழுது எங்கே அங்கீகரிப்பது? சாதிச் சலுகை பெறும் ஒவ்வொரு இந்துவும் தங்களுக்குள் விதைக்கப்பட்டுள்ள சாதியை அங்கீ கரித்து மாற்ற வேண்டும். வர்ணத்தை நியாயப்படுத்தும் இந்து மத மோகர்களும் ஆன்மீகத்தை நாடுபவர்களும் உள்ளனர்.உரை மற்றும் நடைமுறை செயல்பாடு களால் கெட்டிப்படுத்தப்பட்ட பரப்பப்படுகின்ற சாதியப் பாகுபாடுகளை அழித்து தொலைத்திட விமர்சன ரீதியான விசாரணைகளோ செயல்பாடுகளோ இல்லை. பல ஆன்மீக வர்ணனையாளர்கள் சாதிப் பெருமை கொள்ளும் தனி நபர்களை குறிப்பிடும் பொழுது அவர்களுக்குள் இருக்கும் மதவெறியை அங்கீகரிக்க அவர்களை ஒருபோதும் கட்டாயப்படுத்துவதில்லை. சனாதன தர்மம் அனைத்து இந்துக்களையும் உள்ள டக்கியது என இப்போது பேசுபவர்கள் வேறொரு சாதியைச் சார்ந்த ஒருவரிடம் இருந்து உருவாகும் சாதி வன்முறையிலிருந்து தங்களை வெகு தூரம் விலக்கிக் கொள்கின்றனர். சனாதன சகோதரர்களின் அத்தகைய செயல்களுக்கு அவர்கள் எந்தப் பொறுப் பையும் ஏற்க மாட்டார்கள்.
அம்பேத்கரின் கேள்வி
நிலையானது எதுவுமில்லை, நித்தியமானது எதுவும் இல்லை, சனாதனமானது எதுவும் இல்லை என்பதை இந்துக்கள் உணரும் காலம் இன்னும் வரவில்லையா என அம்பேத்கர் கேள்வி எழுப்புகிறார். எல்லாமே மாறிக்கொண்டே இருக்கிறது. தனி மனிதனுக்கு அது எப்படி பொருந்துகிறதோ சமூகத்திற்கும் அப்படித் தான் எனவும் அவர் குறிப்பிடுகிறார். ஒப்பனை ரீதியிலான மாற்றங்களை மட்டுமே அவர் குறிப்பிடவில்லை. தத்துவ ரீதியிலும் அது தேவைப்படுகிறது. நன்றி: தி இந்து நாளிதழ் 12/9/23. தமிழில்: கடலூர் சுகுமாரன்