மருத்துவரான நரேந்திர தபோல்கர், இயல்பிலேயே ஒரு பகுத்தறிவாளர் ஆவார். மகாராஷ்டிரா மூடநம்பிக்கை ஒழிப்புக் குழுவை நிறுவி, செயல்பட்டு வந்தார். போலிச் சாமியார்கள், மந்திரவாதிகள் எனக் கூறப்படும் தந்திரவாதிகளை அம்பலப்படுத்தினார். மகாராஷ்டிரத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தார். இந்தப் பின்னணியில் தபோல்கர் 2013 ஆகஸ்ட் 20 அன்று படுகொலை செய்யப்பட்டார். கோவிந்த் பன்சாரே, அடிப்படையில் வழக்கறிஞர். இடதுசாரி சிந்தனையாளர், எழுத்தாளர். இவரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்தான். மராத்தி மொழியில் இவர் எழுதிய சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறான ‘சிவாஜி கோன் ஹோட்டா? (‘சிவாஜி யார்?’) மிகப்பிரபலமான நூலா கும். 38 பதிப்புகளைக் கண்ட இந்த நூல் இந்தி, ஆங்கிலம், கன்னடம், உருது, குஜ ராத்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிடப் பட்டது. சிவாஜியை இந்துத்துவா அடை யாளமாக சங்-பரிவாரங்கள் சித்தரித்து வரும் நிலையில், சிவாஜி ஒரு சமயச்சார் பற்ற அரசர் என்பதை வரலாற்றுப்பூர்வ மாக நிறுவினார். கோட்சேவை தேசிய வாதியாக கட்டமைக்கும் ஆர்எஸ்எஸ் பரிவாரங்களையும் அம்பலப்படுத்தி னார். இதுதொடர்பாக கோலாப்பூர் பல் கலைக்கழகத்தில் இவர் ஆற்றிய உரை பிரபலமானது. இவர் 2015 பிப்ரவரி 15 அன்று படுகொலை செய்யப்பட்டார்.
எம்.எம். கல்புர்கி, மூடநம்பிக்கை களுக்கு எதிராகவும், இந்துத்வா அடிப் படை வாதிகளுக்கு எதிராகவும், சாதிய கட்டமைப்புக்கு எதிராகவும் தொடர்ச்சி யாக ஓங்கி குரலெழுப்பி வந்தவர். கர்நாடகத்தின் லிங்காயத் சமயம் குறித்து விரிவான ஆய்வை நடத்திய இவர், லிங்காயத் சமயமும், இந்து சமய மும் ஒன்றல்ல என்றார். லிங்காயத் சமயத்தில் நுழைந்துவிட்ட விக்கிரக வழி பாடுகளையும், சடங்கு சம்பிரதாயங் களையும் கடுமையாக எதிர்த்து வந்தார். இதனால் விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம், ஸ்ரீராம் சேனை போன்ற மதவெறி அமைப்புக்களின் கடும் எதிர்ப்பை சந்தித்து வந்த இவர், 2015 ஆகஸ்ட் 30 அன்று படுகொலை செய்யப்பட்டார். கவுரி லங்கேஷ், ‘லங்கேஷ் பத்ரிகே’ என்ற கன்னட பத்திரிகையின் முதன்மை ஆசிரியர். முற்போக்காளரான இவர், இந்துத்துவா அரசியல், சாதியக் கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வந்தார். மோடி ஆட்சியில் குஜராத்தில் அரங்கேற்றப்பட்ட கல வரம் குறித்து, ராணா அய்யூப் எழுதிய ‘குஜ ராத் பைல்ஸ்’ என்ற நூலை கன்ன டத்தில் மொழி பெயர்த்தார். இவர் 2017 செப்டம்பர் 5-ஆம் தேதி வீட்டு வாச லிலேயே படுகொலை செய்யப்பட்டார்.இந்த நான்கு படுகொலைகளும் நாட்டை யே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியவை. எனினும், தபோல்கர், பன்சாரே, கல்புர்கி ஆகியோர் படுகொலைகள் தொடர்பான வழக்குகளில், சுமார் இரண்டு, மூன்று ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லை. 2017-இல் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப் பட்டதையொட்டி, அன்றைய கர்நாடக முதல்வர் சித்தராமையா சிறப்பு புல னாய்வுக்குழுவை ஏற்படுத்தி, அதன் மூலம் விசாரணையைத் தீவிரப்படுத்திய பிறகே, முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழத் துவங்கின.
அவற்றில் முக்கியமாக, தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகிய நான்கு படுகொலைகளும் ஒரே முறையிலேயே நடத்தப்பட்டு உள்ளன; ஒரே தரப்பினரே அல்லது ஒரே அமைப் பினரே இந்த படுகொலைகளை நடத்தி யுள்ளனர்; ஒரே ரகத்திலான துப்பாக்கியே (7.65 எம்.எம். நாட்டு துப்பாக்கி) பயன் படுத்தப்பட்டு உள்ளது என்று கண்டு பிடிக்கப்பட்டது. அவர்கள் ‘சனாதன் சன்ஸ்தா’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் கண்டறியப்பட்டது. 2008-ஆம் ஆண்டு, மாலேகானில் மசூதிக்கு அருகே இந்துத்துவா பயங்கர வாதிகள் குண்டுவெடிப்பை நடத்தினர். இந்த வழக்கில், போபால் மக்களவைத் தொகுதியின் தற்போதைய பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்குர் உள்ளிட்ட 13 பேர் ‘குற்றவாளிகள்’ என பிரகடனப்படுத்தப் பட்டு இருந்தனர். அந்த 13 பேர்களில் காணாமல் போனதாக கூறப்பட்ட, ராம்ஜி கல்பாங்ரா, சந்தீப் டாங்கே ஆகியோர் கவுரி லங்கேஷ் வழக்கிலும் சம்பந்தப் பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இவர்களுக்கு ‘சனாதன் சன்ஸ்தா’ அமைப்பு, குண்டு தயாரிப்பு மற்றும் குண்டுவெடிப்பிற்கு பயிற்சி அளித்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.
2011 முதல் 2017-க்குள் ‘சனாதன் சன்ஸ்தா’ அமைப்பு, துப்பாக்கிச் சூடு, குண்டுவெடிப்பை திறம்பட நிகழ்த்து வதற்கான 19 பயிற்சி வகுப்புகளை நடத்தியது; இதில் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கர்நாடகாவில் சிறப்பு வெடிகுண்டு நிபுணர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர் என்பதும் கைது செய்யப்பட்ட வர்களின் வாக்குமூலங்கள் வழியாக வெளியே வந்தது.
தலையில் சுட்டுக்கொல்ல உத்தரவு
இதனிடையே, மகாராஷ்டிர போலீ சார், சரத் கலாஸ்கர் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசார ணையில் மேலும் பல உண்மைகள் வெளியே வந்தன. தபோல்கர் மட்டுமன்றி, பன்சாரே, கல்புர்கி, லங்கேஷ் படுகொலை களிலும் சரத் கலாஸ்கருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. “இந்துத்துவா வலதுசாரி குழுவைச் சேர்ந்த சிலர் என்னைத் தொடர்புகொண்டு, இந்துத்துவ சித்தாந்தம், துப்பாக்கிப் பயன்பாடு, வெடிகுண்டுகள் தயாரிப்பது; அவற்றை வெடிக்கச் செய்வது குறித்து பயிற்சி அளித்தனர்; நாட்டிற்கு எதிரான சில தீய சக்திகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று வீரேந்திர தாவ்டே என்னிடம் கூறினார்; குறிப்பாக நரேந்திர தபோல்கரை தலை யில் சுட்டுக் கொல்லுமாறும் எனக்கு உத்தரவிட்டார். அதன்படியே நானும், சச்சின் அந்துரே என்ற கூட்டாளியும் தபோல்கரை சுட்டுக் கொன்றோம். இதை யடுத்து, 2016 ஆகஸ்டில், கர்நாடகத்தின் பெல்காமில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், இந்துத்துவா சித்தாந்தத்திற்கு எதிராகச் செயல்படுபவர்களின் பட்டியல் தயாரிக் கப்பட்டது. அந்தப் பட்டியலில் கவுரி லங்கேஷின் பெயரும் இருந்ததால் அவரையும் கொலை செய்தோம். முன்ன தாக, பரத் குர்னே-வின் (லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்) வீட்டில்தான் கொலைக்கான சதித்திட்டம் தீட்டப்பட்டது; இந்த திட்டத்திற்கு `நிகழ்வு (EVENT)’ எனவும் பெயரிடப்பட்டது. பின்னர், பரத் குர்னேவின் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு மலைக்குன்றுக்குச் சென்று துப்பாக்கியால் சுட்டுப் பயிற்சி மேற்கொண்டோம்” என்று சரத் கலாஸ்கர் அந்த வாக்குமூலத்தில் கூறியிருந்தார். இவையனைத்தும் தபோல்கர் வழக்கில் சிபிஐ-யிடம் அளிக்கப்பட்ட வாக்கு மூலங்கள்.
கவுரி லங்கேஷ் படுகொலையைப் பொறுத்தவரை, ‘சனாதன் சன்ஸ்தா’-வின் துணை அமைப்பான ‘ஜனாஜக்ருதி சமிதி’ என்ற அமைப்பின் புனே பிரதிநிதி யாக இருந்த அமோல் காலே, முக்கிய சதி காரராக அறிவிக்கப்பட்டார். தபோல்கர் மற்றும் பன்சாரே கொலை வழக்குகளைப் பொறுத்தவரை சச்சின் அந்துரே, சரத் கலாஸ்கர் ஆகிய இருவரும் கொலை செய்தவர்கள். ‘சனாதன் சன்ஸ்தா’ அமைப்பைச் சேர்ந்த டாக்டர் விரேந்திர சிங் தாவ்டேதான் சதித்திட்டத்தின் மூளை யாக செயல்பட்டுள்ளார்; ராஜேஷ் பங்கரே, அமோல் காலே, அமித் திக்வேகர் ஆகியோர் சதியில் பங்கேற்றுள்ளனர் என்றும் சிபிஐ குற்றம் சாட்டியது. மேலும் இவர்களே லங்கேஷ் படுகொலைக்கும் சதித்திட்டம் வகுத்துள்ளனர். தபோல்கர் வழக்கில் தாவ்டே, சச்சின் அந்துரே, சரத் கலாஸ்கர், சஞ்சீவ் புனலேகர், விக்ரம் பவே உள்ளிட்ட 6 பேரை சிபிஐ கைது செய்தது. இவர்களில் புன லேகர், கைதுக்கு முன்புவரை, இதே வழக்கில், ஏனைய தனது கூட்டாளி களுக்கு வழக்கறிஞராக நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார். பின்னர்தான் அவரும் குற்றவாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டு, சாட்சியங்களை அழித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். விக்ரம் பவே என்பவரும் ஏற்கெனவே குற்றப்பின் னணி கொண்டவர் ஆவார். குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்தவர்.
இவ்வாறு, இந்துத்துவா சித்தாந்தத் திற்கு எதிராக பேசிய, எழுதிய, பரப்புரை யில் ஈடுபட்டு வந்த சமூகசெயற்பாட்டா ளர்களை, ‘சனாதன் சன்ஸ்தா’ என்ற இந்துத்துவா அமைப்பானது திட்டமிட்டு, ஒருவர் ஒருவராக படுகொலை செய்தது விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டது. 2023 ஆகஸ்ட் 20 ஆம் தேதியுடன் (இன்றுடன்) டாக்டர் நரேந்திர தபோல்கர் படுகொலை செய்யப்பட்டு பத்தாண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், இப்போதுவரை தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் என நான்குபேர் கொலை வழக்கிலும் ஒருவர்கூட தண்டிக்கப்பட வில்லை. தண்டனை பெற்றுத்தருவதை நோக்கி வழக்கு நகரவில்லை. தபோல்கர் படுகொலை பத்தாண்டு களை நிறைவுசெய்வதற்கு முதல்நாள் தான், தபோல்கரின் மகள் முக்தா தபோல்கர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தபோல்கர் கொலை தொடர்பான வழக்கை, இனியும் கண்காணிக்க முடி யாது என்று மும்பை உயர் நீதிமன்றம் மறுத்து விட்ட நிலையில், அதனை எதிர்த்து முக்தா தபோல்கர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதன்ஷூ துலியா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தபோது, முக்தா தபோல்கர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் ஆஜராகி வாதாடினார்.
அவர், “டாக்டர் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, பேராசிரியர் எம்.எம். கல்புர்கி மற்றும் கவுரி லங்கேஷ் ஆகி யோரின் கொலைகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை ஆதா ரங்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றன; தொடர்ந்து விசாரணை நடைபெற வேண்டியுள்ளது. மேலும் பல சாட்சிகளை விசாரிக்க வேண்டியுள்ளது. ஆனால், முன்பு இவ்வழக்கை கண்காணித்து வந்த மும்பை உயர்நீதிமன்றம், தற்போது இந்த வழக்கை கண்காணிக்க முடியாது என்று கூறிவிட்டது; இந்த விவகாரத்தில் தபோல்கர் வழக்கு விசாரணையை மும்பை உயர்நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். இதுவரை 20 சாட்சிகள் விசாரிக்கப் பட்டு உள்ளனர்; சாட்சிகள் அனைவரும் விசாரிக்கப்பட்டு விட்டதாலேயே, வழக்கைக் கண்காணிக்க உயர் நீதி மன்றம் மறுத்துவிட்டது என்று ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பதி லளிக்க, அதனடிப்படையில் “இதில் என்ன தவறு இருக்கிறது?” என குரோவரிடம் நீதிபதி துலியா கேள்வி எழுப்பினார். ஆனால், “வழக்கில் விசாரணை இன்னும் பாக்கியிருக்கிறது; தலைமறைவான வர்கள் இன்றுவரை கைது செய்யப்பட வில்லை” என்பதை குரோவர் சுட்டிக்காட்டி யுள்ளார்.
பூனைக்குட்டி வெளியே வந்தது
அப்போது, தபோல்கர் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் விசா ரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அவர்களில் மூவருக்கு எதிராக போது மான ஆதாரங்கள் இல்லை என்றும், மற்ற இருவருக்கும் தொடர்பே இல்லை என்றும் ஒருவழியாக பூனைக்குட்டியை வெளியே விட்டுள்ளார். அதற்கு, “விசாரணையை எதிர் கொண்டுள்ள குற்றம் சாட்டப்பட்டவர்கள், உங்கள் (சிபிஐ) கருத்துப்படி, நான்கு கொலைகளிலும் சம்பந்தப் பட்டுள்ளவர்கள் என்று கூறுவதற்கு பொருத்தமான ஆதாரங்கள் இல்லை என்கிறீர்கள்.. அப்படித்தானே?” என்று நீதிபதி சுதான்ஷூ துலியா கேள்வி எழுப்ப, இந்த விஷயத்தைத்தான் உச்ச நீதிமன்றமும் அறிய விரும்புகிறது என்று நீதிபதி எஸ்.கே. கவுல் தெரிவித்துள்ளார். அத்துடன், தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகிய நான்கு பேரின் கொலையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று முக்தா தபோல்கர் முன்வைக்கும் வாதம் குறித்தும், இந்த நான்கு கொலை களுக்கும் பொதுவான காரணம் எதுவும் உள்ளதா? என்பது குறித்து இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு சிபிஐ-க்கு நீதிபதிகள் தற்போது உத்தரவிட்டுள்ளனர்.
- தொகுப்பு : அ.மாரிமுத்து