கோட்சே கலந்து கொண்டான்
காந்தியும் குண்டு
துளைக்காத ஆடையுடன்...!
வெள்ளி காசுடன்
யூதாஸ் வந்தான்
இயேசு வரவில்லை..!
ஆபிரகாம் லிங்கன் வந்தார்
ஏனோ ஜார்ஜ் புஷ்
ஒளிந்து கொண்டார்..!
பாகவதர் வந்தார்
தங்க தட்டுகளை
திரும்பிக் கூட
பார்க்கவில்லை..!
நேதாஜி வந்தார்
தன் இறப்பு சான்றிதழை
சிரிப்புடன் சரிபார்த்தார்..!
கக்கன் வந்தார்
இன்னொரு
காமராஜருக்காக காத்திருந்தார்..!
இந்திரா காந்தி வந்தார் பொற்கோவிலில்
சேவை செய்தார்..!
தாமஸ் ஆல்வா எடிசன் வந்தார்
திடீர் மின் வெட்டு
ஏற்பட்டது..!
டி.என். சேஷன் வந்தார்
தேர்தல் ஆணையம்
சீல் வைக்கபடிருந்தது..!
இறுதியாக
கன்பூசியஸ் வந்தார்
இன்னமும் மனிதனை
தேடிக் கொண்டிருந்தார்...!