articles

img

‘விவசாயத் தொழிலாளர்க்கு தனித்துறை அறிவித்திடுக!’

சென்னை, மார்ச் 23- தமிழ்நாடு அரசின் நிதிநிலை மற்றும் வேளாண்நிதிநிலை அறிக்கைகளில்   மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட அறிவிப்புகளைஅகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள்  சங்கம் வரவேற்கிறது.விவசாய தொழிலாளர்களுக்கு தனித் துறை, ஊரக வேலை திட்டத்தில் வேலை நாட்கள் கூலி உயர்வு நகர்ப்புற வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு ஆகிய கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் எம். சின்னதுரை எம்எல்ஏ, மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் முன்னுரிமை சார்ந்த ( NPHH) ) அட்டை தாரர்களுக்கு மட்டும் வழங்கப்பட இருப்ப தாக தெரிகிறது. உரிமை சார்ந்த அட்டை பிரிவினரை தொகுக்கும் போது கடந்த காலங்களில் ஏராளமான குளறு படிகள் ஏற்பட்டுள்ளது.தகுதியானவர்கள் பலரும் விடுபட்டுள்ளனர். இதை சரி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. திட்டம் செயல்படுத்துவதற்கு முன்பு அது குறித்த உரிய ஆய்வுகள் செய்தும்,தேவை யான வழிகாட்டி நெறிமுறைகளை வெளி யிட்டும் தகுதியானவர்கள் விடுபடாமலும் செயல்படுத்திட வேண்டும்” என்று கோரி யுள்ளார். 

ஊரக வேலைத்திட்டம் 

மேலும் அவர்கள் கூறியிருப்பதாவது: தற்போதைய நிதிநிலை மற்றும் வேளாண் அறிக்கைகளில்  ஏற்கனவே தேர்தல் அறிக் கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாதது வருத்தம் அளிக்கிறது. ஒன்றிய பாஜக அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் சிதைத்து வரு கிறது. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப் பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் வேலை நாட்களை 150 ஆகவும், நாட்களாகவும்,  தினக் கூலியை ரூ.300 ஆகவும் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு கடந்த இரண்டு நிதிநிலை அறிக்கைகளாக நிறைவேற்றப்படாத நிலையில், நடப்பு நிதிநிலை அறிக்கையில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு வேலை அட்டை பெற்றுள்ள 90 லட்சத்திற்கும் மேற்பட்ட  கிராமப்புற ஊரக வேலை திட்டப் பயனாளிகளுக்கு  இருந்தது. அது குறித்த அறிவிப்பு தற்போதும் வெளியிடாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. 

ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீட்டுடன் மாநில அரசின் பங்குத் தொகையாக 22,560 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளதும்- 35 கோடி மனித சக்தி நாட்கள் வேலை வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத் தக்கது. ஆனால் 35 கோடி மனித சக்தி நாள்களைக் கொண்டு தமிழ்நாட்டில்  ஊரக வேலை திட்டத்தில் பதிவு செய்துள்ள மொத்த பயனாளிகளுக்கும் வெறும் 38 நாட்கள் மட்டுமே வேலை வழங்க முடியும்  என்பதை  அரசின் கவனத்திற்கு தெரியப் படுத்துகிறோம்.  ஆகவே கடந்த கால வாக்கு றுதிகளை  நிறைவேற்றிட மாநில அரசின் பங்காக  கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்கிடவும், தினக்கூலியை ரூ. 300 ஆக  உயர்த்தி வழங்கிடவும் போதிய நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்திட வேண் டும். ஏற்கனவே  ஊரக வேலை திட்டத்தில் நிதி ஒதுக்கீடு குறைவாக இருக்கும் நிலை யில், கட்டுமான பணிகளுக்கும், இதர பணி களுக்கும் மடைமாற்றம்  செய்யும் வகை யில்   வெளியிட்டுள்ள அறிவிப்புகளை திரும்ப பெற்று, அதிகமான  பயனாளிக ளுக்கு வேலை அளிக்கும் வகையில் பணிகளைத் தேர்வு செய்து செயல்படுத்த வேண்டும்.

தனித்துறை அவசியம்

தமிழ்நாட்டில் வாழும்  ஒரு கோடிக்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாத்திட தனித்துறையை யும், கலைஞர் அரசு நிறைவேற்றியது போல சட்ட அந்தஸ்துடன் கூடிய விவசாய தொழி லாளர்களுக்கான நல வாரிய சட்டம் இயற்றி டவும் வேண்டும். அரசின் வீடு கட்டும் திட்டம் குறித்த அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கை யில் இல்லை. ஒன்றிய  அரசின் பங்கு தொகை + மாநில அரசின்  பங்குத் தொகை யையும் சேர்த்து தலா ரூ.10 லட்சம் செலவில் வீடு கட்டும் திட்டத்தை செயல் படுத்திட வேண்டும்.   கிராமப்புற ஏழை குடும்பங்களுக்கு பெரிதும் பயன்பட்டு வந்த  தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை தொடர்ந்திட நிதி ஒதுக்கீடு செய்திட  வேண்டும்.  முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட  சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை கூடுதல் ஆக்கிட வேண்டும்.

நகர்ப்புற வேலை உறுதித்திட்டம்

வீட்டுமனைக்காக பல லட்சம் மக்கள் காத்திருக்கும் நிலையில் வீட்டுமனை- மனைப்பட்டா வழங்குவது  குறித்து  அறி விப்பு வெளியிட வில்லை. மனையும் மனை பட்டாவும் இல்லாத அனைவருக்கும்   வீட்டு மனை - மனை பட்டா வழங்கிட தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டத்தை செயல்படுத்திட வேண்டும்.  தமிழ்நாடு அரசு நகர்ப்புற வேலை  ஊதிய  வேலைவாய்ப்புத் திட்டம் கடந்த 2021-22 ஆம் ஆண்டில் ரூ.100 கோடி நிதி ஒதுக்கி  செயல்படுத்தப்பட்டது. இதனால் பேரூ ராட்சி நகராட்சி பகுதிகளில் வாழும் விவசா யத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பிரிவின ருக்கு குறிப்பாக பெண்களுக்கு  சிறிது வேலையும்- வருமானமும் கிடைத்து வந்தது. ஆனால் கடந்த ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.  ஆகவே கேரளா, ராஜஸ்தான்  மாநிலங்களில் அதிக நிதி ஒதுக்கி நகர்ப்புற வேலைத்திட்டம் செயல் படுத்துவது போல,  நடப்பு பட்ஜெட்டில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அனை த்து பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் வேலை இழுந்துள்ள தொழிலாளர்களுக்கு வேலை வழங்கிடும் வகையில் திட்டத்தை விரிவு படுத்தி செயல்படுத்திட  வேண்டும். கிராமப்புற வேலையின்மை அதிகரித்து நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் வேலை வருமானம் இழந்து வாழ்க்கை நடத்திட. கடன் வலையில் தள்ளப்பட்டுள்ளனர்.அத்தியாவசிய பண்டங்களின் விலை ஏற்றம்  மேலும் அவர்களுக்கு வாழ்க்கை சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே கிராமப்புறங்களில்  விவசாயம் விவசாயம் சார்ந்த பணிகளில் ஈடுபடும் விவசாய தொழி லாளர்களுக்கு, 1948 ஆம் ஆண்டு குறைந்த பட்ச கூலி சட்டத்தின்படி இரண்டு ஆண்டு களுக்கு ஒருமுறை கூலியை உயர்த்தியும், கேரளா அரசைப் போல குறைந்தபட்ச சட்டக் கூலியாக ரூ.600 நிர்ணயம் செய்து அரசு அறிவித்திட வேண்டும்.  இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


 

;