articles

img

மதவெறிப் பாதையில் முன்னிலும் மூர்க்கமாகச் செல்லும் மோடியின் ஆட்சி!

இப்போது அமைந்துள்ள மோடி தலை மையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம், முந்தைய அரசு மேற்கொண்டதைப்போல ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் எதேச்சதிகார-மதவெறி-கார்ப்பரேட் நிகழ்ச்சிநிரலைப் பின்பற்றாது என்றும், அவ்வாறு அது சென்றால் கொஞ்சம் எதிர்ப்பை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்றும் சில வட்டாரங்களில் எதிர்பார்ப்புகள் இருந்தன. இந்த எதிர்பார்ப்புகளில் சில மிகைப் படுத்தப்பட்டவைகளாகும். மக்களவையில் பாஜக தன்னுடைய பெரும்பான்மையை இழந்து, 240 இடங்களுக்கு தன்னைச் சுருக்கிக்கொண்டுள்ளதால், அது ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் மதவெறி நிகழ்ச்சி நிரலின் சில அம்சங்களில் மெதுவாகச் செல்லும் என்று கருதினார்கள்.

நாடாளுமன்றத்தில்  மோதல் போக்கு

அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தைப்போல தேர்தலுக்குப் பின்னர் அமையும் ஆட்சியில் அரசமைப்புச்சட்டத் தைத் தங்கள் விருப்பத்திற்கு மாற்றியமைத் திடலாம் என்பதும், அதன்மூலம் மதச் சார்பற்ற கொள்கையை அரித்து வீழ்த்தி விடலாம் என்பதும் வேண்டுமானால் அவர்க ளுக்கு மிகவும் சிரமமான ஒன்றாக மாறியி ருக்கலாம். ஆனால், சென்ற ஆட்சியின் போது அமல்படுத்திய அதே பொருளா தாரக் கொள்கைகளைத் தொடர்வதிலும், அரசமைப்புச்சட்ட நிறுவனங்களை தங்கள் கைப்பாவையாக சீர்குலைத்துக் கொண்டி ருப்பதிலும், எதேச்சதிகார நடவடிக்கைக ளைப் பின்பற்றுவதிலும் குணாம்சரீதியாக எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. நாடாளுமன்றம் துவங்கிய நாளன்றே மோடி அரசாங்கம் எதிர்க்கட்சிகளிடம் மோதல் போக்கைக் கடைப்பிடித்ததையும், நாடாளுமன்றத்தைக் கூட்டுவதில் கடந்த காலங்களில் கடைப்பிடித்துவந்த நாடாளு மன்ற நெறிமுறைகளைக் கிஞ்சிற்றும் பின் பற்றாது அவற்றைக் காலில் போட்டு மிதித்தி ருப்பதையும் காண முடிந்தது. புதிய சபாநாய கரைத் தேர்ந்தெடுக்கும் பிரச்சனையில், துணை சபாநாயகர் பதவியை எதிர்க் கட்சிக்குக் கொடுக்க அரசாங்கம் மறுத்த தால், இந்த விஷயத்தில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கருத் தொற்றுமை ஏற்படாமல் போயிற்று. கொஞ்சமும் மாறாத நடைமுறை புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு சில நாட்களிலேயே, தன்னுடைய எதேச் சதிகார-அடக்குமுறை ஆட்சிமுறையைக் கிஞ்சிற்றும் மாற்றிடவில்லை என்பதை அது நினைவூட்டியுள்ளது. கீழமை நீதி மன்றத்தால் பிணை ஆணை பெற்றிருந்த தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பிணையானது உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளதைக் கண்டோம். கெஜ்ரிவால் எக்காரணம் கொண்டும் சிறையிலிருந்து வெளிவந்துவிடக்கூடாது என்பதற்காக, மத்தியக் குற்றப் புல னாய்வுக் கழகம், அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது, அதே வழக்கில் மற்றொரு கைதைத் துணிச்சலாகச் செய்தி ருக்கிறது. எழுத்தாளர் அருந்ததி ராய் மீது,  வழக்குப் பதிவு செய்யப்பட்டு பதினான்கு ஆண்டுகளுக்குப்பின்னர், இப்போது சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குத் தொடர தில்லி துணை ஆளுநர் அனுமதி அளித்திருக்கிறார்.

கொடூரமான அதிகாரங்களுடன் புதிய குற்றவியல் சட்டங்கள்

தற்போது இருந்துவரும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Criminal Procedure Code) மற்றும் தண்டனைச் சட்டங்கள் புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று புதிய கிரிமினல் தொகுப்புகளால் (crimi nal codes) மாற்றியமைக்கப்பட்டு, ஜூலை 1  முதல் அமலாகிறது. இப்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய கிரிமினல் தொகுப்புக ளில் பல ஷரத்துகள் நாட்டின் குடிமக்களின் ஜனநாயக உரிமைகள் மீது அதிகக் கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடியவை களாகும். மக்களுக்கு எதிராக நடவடிக்கை கள் எடுக்கும்விதத்தில்  காவல்துறையின ரின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டி ருக்கின்றன. தேசத் துரோகக் குற்றப்பிரிவு களில் கடும் தண்டனை விதிக்கும் விதத் தில் அதிலிருந்த அதிகாரங்கள் கொடூரமான வைகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. அமித் ஷா மீண்டும் உள்துறை அமைச்ச ராகியிருக்கும் நிலையில், அமலாக்கத் துறையினரும், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தினரும், இதர புலனாய்வு முகமை அதிகாரிகளும் முன்பு செயல்பட்டதைப் போலவே எதிர்க்கட்சியினரைக் குறி வைத்துத் தங்கள் வேலைகளைத் தொடர்ந்தி டும் என்பதையும், பாஜக-விற்கு எதிராக உள்ளவர்களை மிரட்டிப் பணிய வைப்ப தற்கான வேலைகளையும் தொடர்ந்திடும் என்பதையும் எதிர்பார்க்க முடியும்.

தொலைத் தொடர்பு தகவல்களை இடைமறிக்கும் அதிகாரம்

தொலைத் தொடர்புச் சட்டம் (Telecom Act), தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகள் (IT Act Rules) என முந்தைய அரசின் கடை சிக் கட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல சட்டங் கள் இப்போது அமலுக்கு வரப்போகின்றன. 2023ஆம் ஆண்டு தொலைத் தொட ர்புச் சட்டத்தின் ஒரு பகுதி ஜூன் 26 அன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது, பொது அவசரக்காலத்தின்போது பொது மக்களின் பாதுகாப்புக்காக என்று கூறி இணையம் வழி யாக அனுப்பப்படும் எந்த செய்தியையும் தடுத்திட அரசாங்கத்தை  அனுமதிக்கிறது. இதற்காக, தொலைத் தொடர்பு தகவல் களை இடைமறித்திட, பத்து ஒன்றிய முகமை களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த முகமைகள் இவ்வாறு செய்வ தற்கு உள்துறை செயலாளரின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்.

மும்முரமான நிதியமைச்சர்

தேர்தல் நெருங்கிய சமயத்தில் பெரும் வர்த்தக நிறுவனங்கள் பாஜக-விற்கும் நரேந்திர மோடிக்கும் ஆதரவாக இருந்தன. தேர்தலில் பாஜக பெரும்பான்மையை இழந்தது என்று முடிவுகள் வரத்தொடங்கிய போது பங்குச் சந்தை வேகமாகச் சரிந்தது. எனினும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு குறித்த அறி விப்பு வெளியானதும் சரிந்திருந்த பங்குச் சந்தை மீண்டும் எகிறியது. நிர்மலா சீதா ராமன் நிதியமைச்சராக மீண்டும் பதவி யேற்றபிறகு, தனது முதல் அறிக்கையில், அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் உடன டியாக எடுத்துக்கொள்ளப்படும் என்றார். இதனைத் தொடர்ந்து பெரும் வர்த்தக நிறு வனங்கள் நிதியமைச்சரிடம் பட்ஜெட்டில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்துவதில் மும்முரமாக உள்ளன. மூன்றாவது மோடி அரசாங்கத்தின் துவக்கமே, கார்ப்பரேட் ஆதரவு மற்றும் நவீன தாராளமயக் கொள்கைகள் முழு வீரியத்துடன் தொடரும் என்பதற்கான சமிக்ஞையை வெளிப்படுத்தி இருக்கிறது. தேசியப் பணமாக்கும் திட்டம் (NMP-National Monetisation Pipeline) போன்ற பொதுத்துறை நிறுவனங்களை, தனியா ருக்குத் தாரை வார்க்கும் நடவடிக்கை கள் மேலும் விரிவடையும் என எதிர்பார்க்க லாம். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் இவ்வாறு அமல்படுத் தப்படவிருக்கும் பொருளாதாரக் கொள்கை களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காது என்றே தெரிகிறது.

முஸ்லிம்களை  குறி வைத்து தாக்குதல்

மோடி அரசாங்கம், இந்துத்துவா அரசிய லைத் தொடர்வதில் எந்தக் குறைவும் இருக்கப் போவதில்லை. ஆட்சி அமைக் கப்பட்ட ஒருசில நாட்களிலேயே முஸ்லிம் சிறுபான்மையினரைக் குறிவைத்துத் தாக்குவது தொடங்கிவிட்டது.  குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்க ளை குறிவைத்து பல சம்பவங்கள் நடந்துள் ளன. சத்தீஸ்கரில், ராய்ப்பூர் அருகே உள்ள அரங் என்ற இடத்தில், மூன்று கால்நடைக ளைக் கொண்டு சென்றவர்கள் ஒரு கும்ப லால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த ஒரே குற்றம், அவர்கள் மாடுகள் விற்கும் வியாபாரிகளாக இருந்ததேயாகும். பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில், மாண்ட்லா மாவட்டத்தில், தங்கள் வீடுகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் மாட்டி றைச்சி பதுக்கி வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, பதினொரு பேர் கைது செய்யப்பட்டார்கள். இதையடுத்து, குற்றஞ் சாட்டப்பட்ட நபர்களின் பதினொரு வீடு களை சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் எனக் கூறி உள்ளூர் நிர்வாகம் இடித்துத் தரை மட்டமாக்கியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வகுப்புவாத மோதல் ஏற்பட்டு 51 பேர் கைது செய்யப்பட்டனர். மதச் சிறு பான்மையினரைக் குறிவைத்து, மதவெறித் தீயை விசிறிவிட்டு, கலவரங்களில் ஈடு படுவது மோடி அரசாங்கம் பதவியேற்ற ஒருசில நாட்களிலேயே தொடங்கிவிட்டன.  இவ்வாறு ஈடுபடுபவர்களுக்கு எதிராக எவ்வி தக் கட்டுப்பாட்டையும் ஒன்றிய அரசாங்கம் மேற்கொள்ளாது.

ஆந்திரா, பீகாருக்கு அப்பால் மற்றதை சிந்திக்காதவர்கள்

இப்போது அமைந்துள்ள தேசிய ஜன நாயகக் கூட்டணி அரசாங்கத்தில் பாஜக ஒரு வலுவான சக்தியாக இருப்பதையும், இதனு டன் கூட்டு சேர்ந்துள்ள தெலுங்கு தேசம் கட்சிக்கோ, ஐக்கிய ஜனதா தளத்திற்கோ பாஜக மேற்கொண்டிடும் அரசியல் நடவ டிக்கைகளில் தலையிடும் விதத்தில் ஆர்வ மோ அல்லது அரசியல் நிலைப்பாடோ அல்லது கொள்கை நிலைப்பாடோ கிடை யாது என்பதை அங்கீகரித்திட வேண்டும்.  தெலுங்கு தேசத்தைப் பொறுத்த வரை, அதன் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் தன் நிலையினை ஒருமுகப் படுத்துவதில் கவனம் செலுத்திக்கொண்டி ருக்கிறார். ஒன்றிய அரசாங்கத்துடன் அவ ருடைய அணுகுமுறை என்பது ஆந்திரா வில் அவர் கொண்டுவந்துள்ள முன்னுரி மைத் திட்டங்களுக்கு அதிகபட்சமாக நிதி யினையும் இதர உதவிகளையும் பெறுவது என்பது மட்டுமேயாகும். அதேபோன்றே ஐக்கிய ஜனதா தளத்தைப் பொறுத்தவரை, பீகாரில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் மீது ஒரு கண்ணை வைத்துக்கொண்டு அதில் எப்படி தன் நிலையை ஒருமுகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதைத் தவிர, பீகாருக்கு அப்பால் எதைப்பற்றியும் அது கவலைப் படவில்லை. இவ்வாறு இந்த இரு கட்சிக ளின் எதார்த்த நிலைப்பாட்டை நாம் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் எதிர்க் கட்சிகளின் ஐக்கிய முன்னணி தந்திரத்தை நாம் வகுத்திட வேண்டும்.

வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுப்பது முக்கியம்

மோடி அரசின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டமும், அதன் தவறான செயல்களை அம்பலப்படுத்துவதும், எதிர்க்கட்சிகளின் பலம் அதிகரித்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் சிறப்பான முறையில் நடத்தப்படும் என்பதில் சந்தே கமில்லை. ஆனால், ஜனநாயகத்தின் மீதான மோடி ஆட்சியின் எதேச்சதிகாரத் தாக்குதல்களுக்கும், மக்களின் வாழ்வாதா ரத்தின் மீதான நவீன தாராளமயக் கொள்கை கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதல்க ளுக்கும் எதிராக வெகுஜனப் போராட்டங்க ளை முன்னெடுத்துச் செல்வது மிகவும் முக்கியமாகும். இங்கு, இடதுசாரிகளின் பங்கு முக்கிய மானது. ஏனெனில் அது நவீன தாராள மயக் கொள்கைகள் மற்றும் இந்துத்துவா சித்தாந்தத்திற்கு எதிராக மிக உறுதி யாகப் போராட்டங்களை நடத்திக் கொண்டி ருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தைப் பாது காப்பது, ஜனநாயகத்தைப் பாதுகாப்பது மற்றும் கூட்டாட்சி அமைப்புமுறையைப் பாதுகாப்பது போன்ற பரந்துபட்ட பிரச்ச னைகளில் ‘இந்தியா’ கூட்டணி மற்றும் விரிவான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் கட்டுவது போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்க வேண்டியிருக்கும். அதே சமயத்தில், இடதுசாரிக் கட்சிகள் நாள்தோறும் நடக்கும் போராட்டங்களில் மக்களை அணிதிரட்டுவதில் தன் முக்கிய பங்கினை ஆற்றிட வேண்டும். இந்தப் போராட்டங்களை நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான ஒட்டுமொத்த எதிர்ப்போடு இணைத்து மாற்றுக்கொள்கை களுக்கான ஒரு நம்பகமான தளமாக மாற்றிட வேண்டும். இடதுசாரிகளுடன் இணைந்துள்ள வெகுஜன அமைப்புகளும், ஜனநாயக அமைப்புகளும் விரிவான அளவில் ஒன்றுபட்ட நடவடிக்கைகளை உருவாக்கிட வேண்டும். மக்களவைத் தேர்தல் முடிவிலிருந்து பெறப்படவேண்டிய முக்கிய படிப்பினை என்னவெனில், இந்துத்துவா-கார்ப்ப ரேட் கள்ளக்கூட்டிற்கு எதிராக போராட்டங்க ளைத் தீவிரப்படுத்துவதற்காக சில அரசி யல் வாய்ப்புகள் திறந்துவிடப்பட்டிருக் கின்றன என்பதேயாகும். ஜூன் 26, 2024, தமிழில்: ச.வீரமணி
 

;