articles

img

மதவாத-கார்ப்பரேட் கூட்டணியை முறியடிக்க அணி திரள்வோம்!

திருச்சிராப்பள்ளி, மே 31- 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ கத்தின் ஏழு முனைகளிலிருந்து மே 20 அன்று தொடங்கிய சிஐடியு நடைபயணம் மே 30 அன்று திருச்சிராப்பள்ளியில் சங்கமித்தது. அங்கு நடை பெற்ற நிறைவுப் பொதுக்கூட்டத்தில் சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் பேசியதாவது:- “ஒன்றுபடுவோம்; போராடுவோம்” என்ற முழக்கத்தோடு தொடங்கப்பட்ட இந்திய தொழிற் சங்க மையம் 53 ஆண்டுகளை நிறைவு செய்து 54-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்திய தொழிற் சங்க மையம் உருவாவதற்கு முன்பு பல தொழிற் சங்கங்கள் இருந்தன. பெரும்பாலான அமைப்புகள் ஆளும் வர்க்கத்திற்கும், சுரண்டும் வர்க்கத்திற்கும் துணைபோயின. ஆளும் வர்க்கத்திற்கு, சுரண்டும் வர்க்கத்திற்கு துணைபோவது என்ற “விஷநோய்” அவர்களைத் தாக்கியது. “விஷநோய்” தாக்குத லில் இருந்து தொழிலாளி வர்க்கத்தை மீட்டெடுப்ப தற்காக உருவானது தான் இந்திய தொழிற் சங்க மையம். அமைப்பை தொடங்கிய காலத்தில் பல சோதனைகளைச் சந்தித்தோம். பல தொழிற்சங் கங்கள் இந்திய தொழிற்சங்க மையத்தை பலவீனப் படுத்த முயன்றன, புறக்கணித்தன. சங்கம் பிறக்கும் போது எழுப்பப்பட்ட “ஒன்றுபடுவோம்; போராடுவோம்” என்ற முழக்கத்திற்கு அடுத்த சில ஆண்டுகளிலேயே வெற்றி கிட்டியது. 1974-ஆம் ஆண்டு ரயில்வே தொழி லாளர்களுக்கான போராட்டத்தை நடத்தினோம். நம்மோடு அனைத்துச் சங்கங்களும் இணைந்து போரா டின. நம்மை பலவீனப்படுத்த முயன்றவர்கள் கூட இந்திய தொழிற்சங்க மையத்தை அங்கீகரித்தனர்.

அதைத் தொடர்ந்து 1989-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் இந்திய தொழிற்சங்க மையம் பத்து தோழர்களை பலி கொடுத்தது. அதில் நான்கு பேர் தொழிலாளர்கள், ஆறு பேர் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள். பத்துப் பேரில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோரும் அடங்குவர். 1970-ஆம் ஆண்டு “ஒன்றுபடுவோம்; போராடு வோம்” என்ற முழக்கத்தோடு தொடங்கப்பட்ட சிஐடியு உழைக்கும் மக்களுக்காக நாடு முழுவதும் இயக்கங்க ளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் 14 அம்சக் கோ ரிக்கைகளை வலியுறுத்தி நடைபயணம் நடத்தி உள்ளோம். இந்த நடைபயணத்தை அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஆதரித்து நம்மை வரவேற்றுள் ளன. இன்றைக்கு சிஐடியு வலிமையான சங்கமாக வளர்ந்துள்ளது.

மதவாத -கார்ப்பரேட் கூட்டணியை வீழ்த்த...

நாட்டை பெரும் அழிவுக்கு இட்டுச் செல்லும் வகை யில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. மனுஸ்மிருதியையும், மத வாதத்தையும் தூக்கிப்பிடிக்கும் பாஜக இன்றைக்கு கார்ப்பரேட்டுகளுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ளது. கார்ப்பரேட்டுகளின் அடிமையாக மாறிவிட்டது. இந்த தீய சக்திகளுக்கு எதிராகப் போராடுவோம், வெற்றி பெறுவோம் என்று இந்நாளில் உறுதியேற்போம். அத னொருபகுதி தான் தமிழகத்தில் ஏழு முனைகளி லிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடைபயணம்.  தொழிலாளர் விரோதக் கொள்கைகள், பொதுத் துறைகளை விற்பது, தொழிலாளர் விரோத சட்ட திருத்தங்களை மேற்கொள்வது, மின்துறையை கார்ப்பரேட்டுகளிடம் கொடுப்பது போன்ற நடவடிக்கை களை தடுத்து நிறுத்த வேண்டுமென்றால் மதவாத- கார்ப்பரேட் கூட்டணியை நாம் வீழ்த்த வேண்டும் என்ற  முழக்கத்தை முன்வைக்கிறோம். இது தொழிற்சங்க முழக்கம் மட்டுமல்ல; அரசியல் சார்ந்த முழக்கமும்  கூட. இந்த முழக்கத்திற்கு அனைத்துத் தொழிற்சங் கங்களும் ஆதரவளித்துள்ளன. தொழிலாளர் விரோத அரசை வர்க்கமாகத் திரண்டு அரசியல் ரீதியாகத் தோற்கடிக்க வேண்டும் என்ற சிஐடியு-வின் முழக்கம் வெற்றியை நோக்கிப் பயணிக்கிறது. 

தொழிலாளர்களைப் பற்றி கவலைப்படாத ஒரே தொழிற்சங்கம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சங்கமான பிஎம்எஸ் மட்டும் தான். அவர்கள் எந்தப் போராட்டங் களிலும் பங்கேற்பதில்லை. தொழிலாளி வர்க்கம் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளப் போராடும் அதே நேரத்தில் அனைத்து மக்களையும் பாதுகாக்க வேண்டும். தேசத்தையும் பாதுகாக்க வேண்டும். இவை மூன்றும் இணைந்தால் தான் தொழிலாளி வர்க்கத்திற்கு வெற்றி கிட்டும். மின்சாரத்தை தனியாருக்குக் கொடுக்கும் மோடி யின் கொள்கைகளுக்கு எதிராக சிஐடியு போராடியது. மகாராஷ்டிரத்தில் மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு எதிராக 86 ஆயிரம் மின் ஊழி யர்கள் போராடினார்கள். போராட்டம் காரணமாக சில மாநில அரசுகள் பின் வாங்கியுள்ளன. கார்ப்பரேட்டுகள் தங்களின் தந்தையாக மோடி யைக் கூறுகின்றனர். அதானி-அம்பானி குழுமம்  பொதுச் சொத்துக்களை சூறையாட அனுமதித்துள் ளார் மோடி. தாங்கள் கொள்ளையடிக்க துணை நிற்ப வர்களை அவர்கள் தந்தையாகத் தான் பார்ப்பார்கள்.

பாஜகவின் கிரிமினல் திட்டங்கள்

கொரோனா தொற்று முதல் அலையின் போது 86 கோடி மக்கள் பட்ட துன்ப-துயரங்களுக்கு அள வில்லை. இவர்களைப் பற்றி மோடி கவலைப்பட வில்லை. அதே நேரத்தில் கார்ப்பரேட்டுகளின் சொத்து மதிப்பு 500 சதவீதம் அளவிற்கு உயர்ந்தது. நாட்டில் அனைத்துப் பொதுத்துறைகளையும் மோடி அரசு சீரழித்துவிட்டது. தமிழகத்தில் பிஎச்இஎல் (பெல்) நிறுவனத்தை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கிறார் மோடி. நாட்டின் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் பணி கூட தனியாருக்கு கொடுக்கப்படு கிறது. ஆனால், வளர்ந்து வரும் பொருளாதார நாடு களில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளதாக மோடி பொய் பேசுகிறார். 

தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக வீறு கொண்டு எழுந்து வீதியில் இறங்கிப் போராடு வோம். மனுவாத, மதவாத, கிரிமினல் பேர்வழிக ளுக்கு எதிராக நம் பலத்தோடு அனைத்து தொழிலா ளர்களின் பலத்தையும் இணைத்துப் போராடுவோம். அனைத்து அதனொரு பகுதியாக ஆகஸ்ட் 9 அன்று  நாடு தழுவிய தர்ணா நடைபெறும். ஆகஸ்ட் 14 அன்று நேச சக்திகளையும் இணைத்து அடுத்த கட்ட நட வடிக்கைக்கு திட்டமிடுவோம். விரைவில் மோடி அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக மதவாத-கார்ப்பரேட் கூட்ட ணிக்கு எதிராக நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத் திற்குத் திட்டமிடுவோம். தொழிலாளி வர்க்கம் தோற்ப தில்லை. இறுதி வெற்றி நமக்கே என்பதை உறுதிப் படுத்துவோம் என்றார்.
 

;