articles

கேரள இடது ஜனநாயக முன்னணி அரசும் விவசாயத் தொழிலாளர்களும்! - கே.பக்கிரிசாமி

கேரள மாநிலத்தில் சுமார் 26 லட்சம் விவசாயத் தொழிலா ளர்கள் வாழ்கின்றனர். கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு விவசாய தொழிலாளர்களுக்காக சிறப்பான பல திட்டங்களையும் நாட்டிற்கே முன் மாதிரியாக செயல்படுத்தி வருகிறது. விவசாயத் தொழிலாளர் களுக்கு என அரசு தனித்துறையை உருவாக்கி உள்ளது.  அதனால் விவசாயத் தொழிலா ளர்களின் எண்ணிக்கை அரசின் கையில் உள்ளது. அரசின் கணக் கெடுப்பின் படி ஆறு லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் சொந்த குடிமனை இல்லாமல் உள்ளனர். வரும் 2024க்குள் விவசாயத் தொழிலா ளர்கள் அனைவருக்கும் குடிமனை யுடன் கூடிய வீடு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அரசே இடம் வாங்கி அதில் வரவேற்பு அறை,  நடுக்கூடம், படுக்கை அறை, சமைய லறை, கழிவறையுடன் 10 லட்சம் ரூபாய்க்கு  கான்கிரீட்டில் தரமான  வீட்டை  கட்டிக் கொடுக்கிறது. 

பொது விநியோக முறை சிறப்பாக செயல்படுகிறது. பட்டியல் இனத்தவர், மலைவாழ் மக்கள், வறுமைக்கோடு பட்டியலில் உள்ளவர்கள் அனை வருக்கும் மாதத்திற்கு 15 கிலோ  தரமான இலவச அரிசி  வழங்கப் படுகிறது. மற்றவர்களுக்கு 12 ரூபாய் 15 ரூபாய் என்ற விலையில் மாதம் 15 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய மோடி அரசு கொரோனா பெருந் தொற்று காலத்தில் மத்திய தொகுப்பிலிருந்து கேரளாவுக்கு கொடுத்த அரிசிக்கு பணம் கேட்டு கேரள அரசை வற்புறுத்துவதும் நடந்து வருகிறது.  கல்வியை பொருத்தவரை கேரள அரசு இந்திய தேசத்திற்கே வழி காட்டியாக உள்ளது. பட்டியலினத்து மாணவர்கள் பழங்குடியின மீனவர் கள் பெண்கள் ஆகியோர் மீது கேரள இடது முன்னணி அரசு தனி கவனம் செலுத்துகிறது.  பட்டியல் இன மலை வாழ் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு  வரை ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாயும் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருபதாயிரம் ரூபாயும் அரசால் வழங்கப்படுகிறது. 

அதேபோல் மாணவர்கள் டியூஷன் படிக்க உதவியாக குறிப்பிட்ட தொகை  வழங்கப்படுகிறது. மாணவர் கள் வீட்டில் தனியாக படிக்க வசதியாக தனி படிப்பறை கட்டிக் கொள்ள ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படுகிறது. கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் இலவசமாக கொடுக்கப்படுகிறது. மீனவப் பகுதியைச் சேர்ந்த மாணவர்க ளுக்கு தனி பள்ளிக்கூடம் உருவாக்கித் தந்துள்ளது. பள்ளி வகுப்பறைகள் உலகத் தரத்தில் உருவாக்கித் தரப் பட்டுள்ளன. குடிநீர், கழிவறை என தனிக் கவனம் செலுத்தப்படுகிறது. பட்டியல் இன மாணவர்கள் மலைவாழ் மாணவர்கள், பெண்கள் இவர்களுக்கு ஹாஸ்டல் வசதி செய்து தரப்படுகிறது. 

இதுவரை இல்லாத அளவில் விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி ரூபாய் 600 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. (தமிழ் நாட்டில் சட்டக்கூலி 190 ரூபாய் என்ற அளவில் உள்ளது). விவசாயிக்கு தன் வயலில் வேலை செய்ய தொழிலா ளர்கள் தேவைப்பட்டால் கிராம நிர்வாகத்திடம் கேட்டு நூறு நாள் வேலை பணியாளர்களை பெற்றுக் கொள்ளலாம். விவசாயிகள் கொடுக் கும்  600 ரூபாயுடன் நூறு நாள் வேலை கூலி 350 ரூபாய் ஆக மொத்தம் 950 ரூபாய் விவசாய தொழிலாளர்களுக்கு கிடைக்கிறது என்பது உண்மை.  கேரள மாநிலத்தில் பினராயி விஜய னின் இடது ஜனநாயக முன்னணி அரசு விவசாயத் தொழிலாளர்களுக்கு சட்டரீதியாக பல நல்ல விஷயங்களை நாட்டிற்கே முன்மாதிரியாக வழங்கி உள்ளது. அவர்களுக்கென தனித் துறை, சட்டக்கூலி, குடிமனை வீடு,  குடிசைத் தொழில், கல்வி, இன் சூரன்ஸ், சமூக பாதுகாப்பு என அனைத்தையும் வழங்கும் அரசாக உள்ளது. தமிழ்நாட்டிலும் கேரளாவை போல சட்டச்சலுகைகள் பெற தொடர்ந்து போராடுவோம். அதற்காக விவசாயத் தொழிலாளர் மாநில மாநாட்டில் விவாதிப்போம்.  

;