articles

img

மலையகத் தமிழர் நலன் காக்க குரல் கொடுப்போம்

இ ஸ்ரேல் - பாலஸ்தீனம் தொடங்கி இலங்கை வரை மக்கள் ஒற்றுமை யாக இருக்கக் கூடாது என்பதில் ஆட்சி யாளர்கள் தெளிவாக இருக்கிறார்கள். இந்தியா வில் மக்கள் ஒற்றுமையாக இருந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் வர்ணாசிரம கோட்பாடு  உருவாக்கப்பட்டது. ஆனாலும் சுதந்திரத்திற் காக சாதி, மத பேதங்களைக் கடந்து  இந்திய  மக்கள் ஒற்றுமையுடன் போராடினார்கள். அப்படி ஓர் ஒற்றுமை இக்கட்டான சூழ்நிலை யில் கூட இலங்கையில் ஏற்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. படிப்படியாக இலங்கையில் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்பதற்காக மலையகத் தமிழர்கள் போராடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இலங்கையில் யாழ்ப்பாண தமிழர்கள், மலையகத் தமிழர்கள், சிங்களர்கள் ஆகிய மக்களின் பிரச்சனை வெவ்வேறாக இருந்தாலும் அவர்கள் சேர்ந்து விடக்கூடாது என்பதில் அங்கிருக்கும் அரசு கவனமுடன் இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் மதவாதமும், இனவாதமும் ஆதிக்கம் செலுத்தினால் அது எவ்வளவு மோசமான சூழலை உருவாக்கும் என்பதற்கு இலங்கை சம்பவங்களே எடுத்துக்காட்டு. மதவெறியர்கள் ஆட்சி செய்யும் நிலை ஏற்பட்டுவிட்டால் மதச்சார்பின்மை மட்டுமல்ல; மனிதர்களும் படுகொலை செய்யப்படும் நிலை ஏற்படும். 

இலங்கை சுதந்திரம் பெற்றது முதல் மலையகத் தமிழர்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன. மலையகத்தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக தொடர்ந்து  போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 

நீலகிரி மாவட்டத்தில் தாயகம் திரும்பிய மலையகத்தமிழர்கள் தங்கி தேயிலை தோட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் டான் டீ நிறுவனம் மூடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. டான் டீ நிறுவனத்துக்கு சொந்தமான நிலங்களை மலையகத் தமிழர்களுக்கு பிரித்து வழங்க முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். 

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் வந்தபோது பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வரும் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கும்போது, இலங்கையில் இருந்து வந்த இந்துக்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என தமிழக அரசியல்  கட்சியினர் வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் ஒன்றிய மோடி அரசாங்கம் மறுத்துவிட்டது. மோசமான குடியுரிமை சட்டத்தில் திருத்தங்களை கொடுத்தபோது அதனை முற்றிலும் நிராகரித்தது ஒன்றிய பாஜக அரசு. இலங்கையில் நிலவும் பொருளாதார சூழல் அங்கிருக்கும் அனைத்து சமூக மக்களையும் போராட வழிவகுக்கும். இலங்கையில் இருக்கும் மலையகத்தமிழர்கள் முழு உரிமைகளையும் பெறும் காலம் ஏற்படும்.