articles

img

அரை நூற்றாண்டு ஏமாற்றம்! தீர்வு தர வேண்டும் புதிய சட்டம் - க.சுவாமிநாதன்

தமிழ்நாடு அரசு பட்டியல் சாதி மற்றும் பழங்குடி மக்களின் துணைத் திட்டத்தின் அமலாக்கத்திற்கான சிறப்புச்சட்டம் ஒன்றை அடுத்த சட்டமன்றத் தொடரில் கொண்டு வரப் போவதாக அறி வித்திருப்பது வரவேற்கத்தக்கது. 1970 களில் துவங்கிய துணைத் திட்டங்கள் தமிழ் நாட்டில் சட்ட வடிவம் பெற கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தி ருக்கிறது.  ஒதுக்கீடு உரிய விகிதத்தில் இல்லாமை, ஒதுக்கினாலும் செலவிடப்படாமை, செல விடப்பட்டாலும் உரியவர்களைச் சென்ற டையாமை, சென்றடைந்ததாக சொல்லப் படும் கணக்குக்கும் உரிய தரவுகள் இல் லாமை... இப்படி துணைத் திட்ட அமலாக்கம் தொடர்ந்து இழுத்தடிக்கப் பட்டு வந்துள்ளது என்பதே தேசத்தின் அனுபவம். 

பிறந்த கதை

காலகாலமாக சாதிய ரீதியாக ஒடுக்கப் பட்டும், புறக்கணிக்கப்பட்டும், மறுக்கப் பட்டும் வந்துள்ள பட்டியல் சாதி, பழங்குடி சமூகங்கள்  பல்வேறு பொருளாதார அளவு கோல்களில் பின்னுக்குத் தள்ளப்பட் டுள்ளன. இந்த இடைவெளிகளை சமன் செய்யும் பொருட்டு பட்டியல் சாதி மற்றும் பழங்குடி மக்களுக்கான சிறப்பு உட்கூறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.  ஐந்தாவது திட்ட கால 1974 - 75 ஆம் நிதியாண்டில் பழங்குடி மக்களின் துணைத் திட்டம் (Tribal Sub Plan - TSP) கொண்டு வரப்பட்டது. ஆறாவது திட்ட கால 1979 - 80 இல் பட்டியல் சாதியினருக்கான சிறப்பு உட்கூறு திட்டம் (Special Component Plan - SCP) கொண்டு வரப்பட்டது. சிறப்பு  உட்கூறு திட்டம், 2006 இல் பட்டியல் சாதித் துணைத் திட்டம் (Scheduled Caste Sub Plan - SCSP) என்று பெயர் மாற்றம் பெற்றது. 2017 இல் இருந்து பட்டியல் சாதி யினர் மேம்பாட்டிற்கான ஒதுக்கீடு (All ocations for the Welfare of SC - AWSC)  என்று அழைக்கப்படுகிறது. இவை வெறும் பெயர் மாற்றங்கள் அல்ல. “உரிமை சார்ந்த தாக” முதலில் அறிவிக்கப்பட்ட திட்டம் “சலுகை சார்ந்ததாக” நீர்த்துப் போகிற  நோக்கங்களும் இப் பெயர் மாற்றத்திற் குள் அடங்கியுள்ளன. ஆகவேதான் அரை நூற்றாண்டுக்கு பின்னரும் இத்திட்டங்கள் எதிர்பார்த்த முன்னேற்றங்களை உரு வாக்கவில்லை. 

இலக்குகள் என்ன? 

பட்டியல் சாதி, பழங்குடி மக்கள் தொகை சதவீதத்திற்கு குறைவில்லாமல் துணைத் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்வதன் மூலம் பொருளா தார, மனித வளக் குறியீடுகளில் பட்டியல் சாதி, பழங்குடி மக்களுக்குள்ள  இடை வெளிகளை சரி செய்தல் என்பதே. இது  மூன்று முக்கிய வழிமுறைகளைக் கொண்ட தாக அமலாக்கப்பட்டது.  ஒன்று, பட்டியல் சாதி, பழங்குடி தனி நபர் மேம்பாடு. இரண்டாவது, பட்டியல் சாதி, பழங்குடி இல்லங்கள் மேம்பாடு. மூன்றாவது, பட்டியல் சாதி, பழங்குடி வாழிட, குடியிருப்பு பகுதிகள் மேம்பாடு இந்த மூன்று வழி முறைகளும் என் னென்ன தளங்களை இலக்குகளாக கொண்டு இயங்கின எனில், தரமான கல்வி, இடை நிற்றலை குறைத்தல், உண்டு உறை விடப் பள்ளிகள், மாணவர் விடுதிகள் மேம் பாடு,  உயர்கல்விக்கான உதவித் தொகை மற்றும் பயிற்சிகள்,  வேலை வாய்ப்பு, திறன் வளர்ப்பு - ஊக்குவிப்பு,  சுகாதாரம், உடல்நலம், வீட்டு வசதி, நிலம், நீர்ப்பாச னம், தொழில் முனைவோர் ஊக்குவிப்பு, அத்தியாவசியத் தேவைகள், இணைய தள பரவல், வறுமை ஒழிப்பு, சமூக மரி யாதை, பட்டியல் சாதிகளுக்குள் இடை வெளிகள், பாலின இடைவெளிகள், மாற்றுத் திறனாளிகள், பின்தங்கிய பகுதிகளின் பிரச்சனைகள் உள்ளிட்டவை ஆகும்.  இவற்றுக்கான வருமான ஈட்டல் திட்டங்கள் (Revenue Plans), முதலீட்டுத் திட்டங்கள் (Capital plans) ஆகியவற்றை உருவாக்குதல் நிறைவேற்றுதல் இத் துணைத் திட்டங்களில் அடங்கும்.

கசப்பான அனுபவங்கள்

சப்பானது. 1990 க்கு பிறகான உலகமயக் கொள்கைகள் “சேம நல அரசு” என்ற கருத்தாக்கத்தை கை கழுவியதும் பட்டி யல் சாதி, பழங்குடி மக்களுக்கான துணைத் திட்டங்களின் நீர்ப்புக்கு வழி வகுத்தது. பாஜக அரசு திட்டக் கமிஷனையே ஒழித்த தும், பட்ஜெட்டில் திட்டச் செலவு, திட்டம் அற்ற செலவு என்ற பகுப்பைக் கைவிட்ட தும் இந்த துணைத் திட்டங்களின் மீதான அரசின் அக்கறையை, கவனத்தை, உறு திப்பாட்டை கடுமையாகப் பாதித்துள்ளது. ஏற்கெனவே திட்டக் கமிஷன் 2013 இல் செய்த ஆய்வு இந்த அவலங்களை ஆவணப்படுத்தி இருந்தது. பார்வை: (11012/03/2013/SJ/ SW)

  1.  பல மாநில அரசுகள் மக்கள் தொகை யில் பட்டியல் சாதி, பழங்குடியினர் விகிதத் திற்கேற்ப பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வில்லை. (Inadequate allocation)
  2. ஒதுக்கிய நிதி பயன்படுத்தப்பட வில்லை. ( Poor Utilisation)  H ஒதுக்கிய நிதி திசை திருப்பி விடப் பட்டுள்ளது. (Diversion of funds)
  3.  குறிப்பான தேவைகளுக்கு ஏற்ப திட்டங்கள் வகுக்கப்படாமை. (Schemes not addressing specific needs)
  4.  தொழில் முனைவோர், வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றின் மீது கூர்ந்த கவனம் இல்லாமை. (No Focus on Entrepreneurship, Employ ment and Skill Development) இவை தவிர அறுதியற்ற ஒதுக்கீடுகள் (Notional Allocations), பயன்கள் சென்றடைவது பற்றி முறையான தகவல் இல்லாமை, வருமான உயர்வுக்கு வழி வகுக்காமை போன்ற பிரச்சனைகளையும் அது பட்டியல் இட்டிருந்தது. எனினும் தீர்வு கள் இல்லை. பொதுத் திட்டங்களுக்கு பட்டியல் சாதி,  பழங்குடி மக்கள் பணம் திருப்பி விடப்பட்ட தற்கு பரபரப்பாக பேசப்பட்ட சில உதார ணங்கள்,
  5.  காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான கட்டமைப்புச் செலவு களுக்கு இத்திட்டத்தின் நிதி ரூ. 678 கோடி 2010 - 11 இல்  பயன்படுத்தப்பட்டது. கடும் எதிர்ப்பிற்கு பின்னர் அந்த தொகை திரும்ப வும் பட்டியலினத்தவர் நலனுக்காக பயன் படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. (என்.டி.டி.வி 09.09.2010)
  6.  குஜராத்தில் இதுவரை எந்த பட் ஜெட்டிலும் இதுவரை பட்டியல் சாதி, பழங்குடியினர் மக்கள் தொகை விகிதத்தி ற்கு ஏற்ப ஒதுக்கீடு செய்யப்பட்டதே கிடை யாது. அந்த மாநிலத்தில் பட்டியல் சாதி மக்கள் தொகை 7.09 %, பழங்குடி மக்கள் தொகை 14.75%. ஆனால் இது வரையிலான பட்ஜெட்டுகளில் அதிகபட்ச சதவீத ஒதுக் கீடு பட்டியல் சாதி திட்டங்களுக்கு 4.98 %, பழங்குடியினர் திட்டங்களுக்கு 13.7 % தான். அப்படியெனில் மற்ற ஆண்டுகளில் இதை விடக் குறைவு என்ற அர்த்தம். (Counter view.net 18.11.2018) H பீகாரில் 2018 -19 இல் பட்டியல் சாதி மாணவர் கல்வி உதவித் தொகை நிதி ரூ.8800 கோடி முந்தைய 6 ஆண்டுகளில் மடை மாற்றத்திற்கு ஆளாகியுள்ளது. (the logical indian 03.11.2021).
  7.  தமிழ்நாட்டில் 2017 - 2022 க்கு இடையே யான 6 நிதியாண்டு காலத்தில் பட்டியல் சாதி துணைத் திட்ட நிதி ரூ.5318 கோடி பயன்படுத்தப்படவில்லை என்பது ஒரு ஆர்.டி.ஐ மூலம் வெளி வந்த தகவல். (எகானாமிக் டைம்ஸ் 28.02.2023)
  8.  ஒன்றிய அளவிலும் 2017 இல் “பட்டியல் சாதி மக்கள் மேம்பாடு” என்ற புதிய பெயர் வந்த பிறகு ஒதுக்கீடு சில அமைச்சகங்க ளுக்கு இரட்டிப்பு ஆனது போல கணக்கு இருந்தாலும் மொத்த திட்டச் செலவுகளில் பட்டியல் சாதி திட்டங்களின் விகிதம் 2021 - 22 இல் குறைவாகவே இருந்துள்ளது. மேலும் நேரடித் திட்டங்களுக்கான ஒதுக்கீடு சதவீதம் குறைந்து அனுமான ஒதுக்கீடு (Notional Allocations) அதி கரித்துள்ளது. 2019 இல் நேரடி திட்ட ஒதுக் கீடுகள் 50 சதவீதம் எனில் 2023 இல் 37  சதவீதம்தான். 2021 இல் 19 சதவீதம் அள வுக்கு கூட வீழ்ந்து இருந்தது.  நெறி மீறல்களுக்கு இவை சில உதாரணங்கள் மட்டுமே.

சிறப்புச் சட்டத்தின் தேவை


பட்டியல் சாதி, பழங்குடி துணைத் திட்டங்களின் அலங்கோலமான அம லாக்கம் எந்த இலக்குகளை நோக்கிய முன்னேற்றம் திட்டமிடப்பட்டதோ அதை ஈடேற்றவில்லை. பொருளாதார, சமூக இடைவெளிகள் நீடித்த வண்ணம் உள்ளன. ஆகவே உறுதியான அமலாக்கத் திற்கு வலுவான சட்ட வடிவம் தேவைப் படுகிறது.  ஏற்கெனவே ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் சிறப்புச் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஒன்றிய அளவில் இப்படி ஒரு சட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டும், வரைவு கூட தயாரிக்கப்பட்டும் இன்னும் சட்டம் கொண்டு வரப்படவில்லை.  ஒன்றிய அரசின் நிதி வரத்து தாமதம் ஆவதால் அது குறித்து தெலுங்கானா சட்டத்தில் இருந்த பிரிவுகளை திருத்த வேண்டிய கட்டா யம் ஏற்பட்டது. இது ஒன்றிய அளவிலான சட்டம் உருவாக வேண்டிய தேவையை உணர்த்துகிறது. ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் சட்டங்கள் இருப்பதால் அங்கெல்லாம் மீறல்கள் இல்லாமல் இல்லை. ஆனால் சட்டப் பூர்வமாக போராட முடிகிறது. உரிமை சார்ந்ததாக மாற்றப் பட்டுள்ளது. சட்டம் குறித்த விழிப்பை கொண்டு மக்கள் கருத்தாகவும் மாற்ற முடிகிறது. 

 ஆந்திராவில் பிளெஸ்ஸிங்ஸ் ஐஏஎஸ் அகாடெமி (Blessings IAS acade my) தொடர்ந்த வழக்கில் விஜயவாடா நீதிமன்றம் சட்ட மீறல்களை கணக்கில் கொண்டு துணைத் திட்ட நிதியை “நவ இரத்னலு” பொதுத் திட்டங்களுக்கு மடை மாற்றம் செய்துள்ளது பற்றி மாநில அர சுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. (டைம்ஸ்  ஆப் இந்தியா (07.01.2023) H கர்நாடகாவில் பகுபடா செலவினத் தில் (Non Divisible expenditure) “கருதத் தக்க செலவினமாக” (Deemed Expenditure) எடுத்துக் கொள்ளப்படுவது குறித்த சட்ட விதி 7 டி தவறான பொருள் தரப்பட்டு, மீறப்பட்டு குடிநீர், நீர்ப் பாச னம், சாலை பழுது உள்ளிட்ட பொதுச் செல வினங்களுக்கு ரூ. 7888 கோடி மடை மாற்றம் செய்யப்பட்டு இருப்பது சர்ச்சை ஆகியது. (டெக்கான் ஹெரால்டு 21.04.2022).  மேற்கண்ட 3 மாநிலங்களின் சட்ட அமலாக்க அனுபவம், அவற்றில் உள்ள பிரச்சனைகள் ஆகியனவும் தமிழ்நாடு நிறைவேற்றப் போகும் சிறப்புச் சட்டம் இன்னும் மேம்பட்டதாக அமைய உதவக் கூடும். தமிழ்நாட்டு சட்ட உருவாக்கத்திற்கு இந்த அனுபவங்களும் பயன்படும்.

சட்ட உருவாக்கத்தில் கவனம்

புதிய சட்டம் கீழ்க் காணும் அம்சங் களை உறுதி செய்வதாக அமைய வேண்டும்.  

1) நிதி ஒதுக்கீடு எனும் போது பட்டியல் சாதி, பழங்குடி மக்களின் மக்கள் தொகை விகிதத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும்.

 2) பகுபடு திட்டங்களுக்கான (Divisible schemes) முன்னுரிமை உறுதி செய்யப்பட வேண்டும். பயன்கள் தனி நபர், இல்லங் கள், வாழிடங்களுக்கு சென்றடைவது கணக்கிடத்தக்கதாக (Quantifiable) இருக்க வேண்டும். அரசாங்கத்திற்கு, அதி கார இயந்திரத்திற்கு பகுபடா திட்டங்கள், திட்டங்களின் பால் தரக் கூடிய “சுய முடிவெடுத்தல் அதிகாரம்” (Discretion ary powers) தவறாகப் பயன்படுத்தப்படா மல் இருப்பதை உறுதி செய்யவேண்டும். அனுமான ஒதுக்கீடுகள் விகிதம் அதிகமாதல் தடுக்கப்பட வேண்டும்.

3) “கருதத்தக்க செலவுகள்” (Deemed Expenditure) என்ற வகைப்படுத்தல் மடை மாற்றத்திற்கு வழிவகுப்பதை தடுக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட பணம் முழுமையாக செலவிடப்படுவதும், செல விடப்படா தொகையை எதிர்காலத்திற்கு எடுத்துச் செல்வது ஓராண்டுக்குள் செல விடப்பட வேண்டும் என்ற காலக் கெடுவை உறுதி செய்வதும் முக்கியம். மறு ஒதுக்கீடுகள் உரிய முறையில் செய்யப்பட வேண்டும். பட்ஜெட் தொகை கள் தரப்படுவதற்கான ஆணைகள் (Budget release orders) உரிய காலத்தில் அமைய வேண்டும்.  

4) துணைத் திட்டங்களின் அமலில் “12ஆவது ஐந்தாண்டு திட்டம் நோக்கிய கேந்திர அணுகுமுறை” ஆவணத்தில் சொல்லப்பட்ட “பின் நிலை கணக்கியல் முறைமை” (Post facto accounting) க்கு மாறாக “செயலூக்கத் திட்டமிடல்” (Pro Active Planning) ஆக அமைய வேண்டு மென்ற வழி காட்டல் சட்ட உருவாக்கத்தி லும் பிரதிபலிக்க வேண்டும். 

5) அமலாக்க முறைமை பலப் படுத்தப்பட வேண்டும். அமலாக்க முகமை, குழுக்கள், ஆய்வுக் குழுக்கள் அதிகாரம் படைத்தவையாக இருக்க வேண்டும். அவற்றின் முடிவு இதர துறைகளை கட்டுப் படுத்துபவையாக இருக்க வேண்டும்.

 6) முதல்வர் தலைமையிலான மாநில அளவிலான குழு காலாண்டு இடைவெளி யில் கூட வேண்டும்.  

7) மாவட்ட, வட்ட, கிராம ஊராட்சி வரை குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அவற்றில் பட்டியல் சாதி, பழங்குடியி னர் பிரதிநிதித்துவம் பெரும்பான்மையா னதாக இருக்க வேண்டும்.  

8) துல்லியமான ஆய்வுகள், இலக்குகள் நோக்கிய முன்னேற்றம், இடைவெளிகள் சுருங்குதல் ஆகியனவற்றுக்கான மாநில அளவிலான ஆய்வுக் குழு (Research unit), தரவு தளம் (Mapping) ஆகியன வற்றை சட்டம் உறுதி செய்ய வேண்டும்.  

9) பட்டியல் சாதிகள் இடையே சமத்துவ பகிர்வு (Equity) அணுகுமுறையை உறுதி செய்ய வேண்டும். அருந்ததியர், புதர வண்ணார் உள்ளிட்ட சமூகங்களின் நலன் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். பெண்கள், மாற்றுத் திறனாளிகளின் நலன் களும் உரிய வகையில் பாதுகாக்கப்பட வேண்டும்.  

10) துணைத் திட்ட அமலாக்கத்தின் முழு விவரங்கள், பயனாளிகளின் தகவல்கள் முழுமையாக இணைய தளத்தில் வெளியிடப்பட வேண்டும்.  

11) முறையான அமலாக்கம் பாராட்டுப் பெறுவதும், மீறல்கள் தண்டனைக்கு உள்ளாவதும் சட்டத்தின் பகுதியாக இருக்க வேண்டும். புகார்கள் காலக் கெடு வுக்குள் தீர்வு காணப்படுவதும், தண்டனை குறித்த விசாரணைகள் உரிய காலத்தில் முடிவதும் சட்டத்தின் பிரிவுகளில் இடம் பெற வேண்டும்.  

12) ஆண்டு செயலாக்க அறிக்கை வெளியிடப்பட்டு சட்டமன்றத்தில் சிறப்பு விவாதத்திற்கு ஆளாக்கப்பட வேண்டும்.  

13) சமூக தணிக்கை அரையாண்டு இடைவெளியில் செய்யப்பட வேண்டும்.

களமே வடிவம் தரும்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி 2008 இல் துவங்கி சென்னை யில் கருத்தரங்கம்,  ஆய்வரங்கம், கோரிக்கை சாசனம் வெளியீடு, சிறப்பு மாநாடு, அமைச்சர்கள் சந்திப்பு, தேர்தல் அறிக்கைகளில் இணைக்க அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தல், பட்டியலின மக்களுக்கான தேர்தல் கோரிக்கை சாசனம் என 14 ஆண்டுகளாக துணைத் திட்ட அமலாக்கம் குறித்து தொடர் கவனம் செலுத்தி வந்துள்ளது. இப்பின்புலத்தில் சிறப்பு சட்டம் குறித்த தமிழ்நாடு அரசின் அறிவிப்பை மனமார வரவேற்று அதன் உள்ளடக்கம் குறித்த கருத்துக்களையும் முன் வைக்க விழைந்துள்ளது. இப் பிரச்சனையின் பால் அக்கறை கொண்டு தொடர்ந்து செயல்பட்டு வரும் அரசியல் இயக்கங்கள், சமூக செயற்பாட்டாளர்கள், தலித் அமைப்புகள், இது போன்ற அரசின் முன் முயற்சிகளுக்கு பெரும் பங்களிப்பு செய்த மறைந்த பி.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரின் பங்கு பதிவு செய்யப்பட வேண்டியவை ஆகும். 

சட்டம் நிபுணர்களால் தயாரிக்கப் படலாம். ஆனால் அது களத்தின் யதார்த் தங்கள், தேவையை உள் வாங்கும் போது தான் செழுமை பெறும். ஆகவேதான் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மண்டல அளவிலான கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தத் துவங்கியுள்ளது. மதுரையில் மே 28 இல் துவங்கும் இம் முயற்சி தமிழ்நாட்டின் பிற மையங்களுக் கும் விரிவடையவுள்ளது. இக் கருத்துக் கள் தொகுக்கப்பட்டு சட்ட ரீதியான ஆலோ சனைகளுடன் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட வுள்ளது. சமூக செயற்பாட்டாளர்களும், பொது மக்களும் கருத்துக்களை இமெயில், இணையதளம் வாயிலாக தெரிவிக்கலாம்.  அரை நூற்றாண்டு கனவை இனியாவது ஈடேறச் செய்ய வலுவான சட்டம் உருவாக்க “பட்டியலின மக்களின் பங்கைக் கொடு” என்ற முழக்கம் ஓங்கி ஒலிக்கட்டும்.
 

 



 

;