இறந்த ஈக்களின் உடலில் இருந்து மக்கக்கூடிய உயிரி பிளாஸ்டிக்கை உருவாக்க லாம் என்று ஆய்வாளர்கள் கூறு கின்றனர். கறுப்பு படை ஈக்களின் (black soldier flies) இறந்த உடலில் இருந்து கிடைக்கும் பாலிமர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய ஆய்வுக்கட்டுரை சமீ பத்தில் நடந்த அமெரிக்க வேதியியல் சங்கத்தின் (ACS)இலையுதிர்கால கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
இயற்கையில் கிடைப்பவற்றை பயனுள்ளவையாக
மற்ற துறைகளில் அதிகம் பயன் படாத, கிராக்கி இல்லாத பொருட்க ளைக் கண்டறிவது கடினமாக இருக் கும் நிலையில் இந்த கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இயற்கையில் கிடைக்கும் பொருட்களில் இருந்து சூழலில் இல்லாத, கரும்பு, மரம் போன்ற வற்றில் உள்ள குளூக்கோஸில் இருந்து மக்கக்கூடிய, நீரில் கரை யக்கூடிய பாலிமர் போன்ற புதிய பொருட்களை உருவாக்கும் முயற்சி யில் கடந்த இருபது ஆண்டுகளாக தாங்கள் ஈடுபட்டுள்ளோம் என்று டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழக முதன்மை ஆய்வாளர் கரன் வூல்லி (Karen Wooley) கூறுகிறார்.
கழிவை உடைக்கும் லார்வாக்கள்
இதுபோன்ற இயற்கை மூலங்க ளில் இருந்து உணவு, எரிபொருள், கட்டுமானத்தொழில் மற்றும் போக்கு வரத்துத் துறையில் பயன்படும் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஈக்களின் புழுக்கள் அல்லது லார்வாக்கள் புரதங்கள், மற்ற சத் துள்ள கூட்டுப்பொருட்களைக் கொண்டுள்ளன. இதனால் இவை கால்நடைத் தீவ னம் தயாரிக்க பயன்படுகின்றன. கழிவுகளை எளிதாக உடைக்கும் இயல்புடையவை என்பதால் இவை வளர்க்கப்படுகின்றன. ஆனால் வயது வந்த ஈக்கள் இதற்குப் பயன்படு வதில்லை. குறைந்த ஆயுட் காலத் தைக் கொண்டுள்ள இவை இறந்த பிறகு பயனற்றவையாகக் கருதப்பட்டு கைவிடப்படுகின்றன. இறந்த ஈக்களின் உடலில் இருக் கும் சத்துப்பொருட்களைப் பயன் படுத்தி வூல்லியின் ஆய்வுக்குழு வினர் பயனுள்ள பொருட்களை தயா ரிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள் ளனர். இந்த வகை ஈக்களின் உட லில் கைட்டின் (Chitin) என்ற சர்க்க ரையை அடிப்படையாகக் கொண்ட பாலிமர் முதன்மைக் கூட்டுப்பொருள் உள்ளது. இது பூச்சிகள், ஓடுள்ள கடல் உயிரினங்கள் (Crustaceans), இரால்கள், செம்மீன்கள் மற்றும் நண்டுகளின் மேலோடு அல்லது வெளிப்புற எலும்புக்கூட்டை வலுப்படுத்துகிறது.
ஒவ்வாமையைத் தடுக்க உதவும் ஈயின் பாலிமர்
இரால் மற்றும் நண்டுகளின் மேலோட்டில் இருந்து சிட்டின் ஏற்க னவே தயாரிக்கப்பட்டுவருகிறது. ஆனால் ஈயின் உடலில் இருந்து உரு வாக்கப்படும் கைட்டின் கடல் வாழ் உயிரினங்களிடம் இருந்து தயாரிக்கப் படும் கைட்டினை விட தூய்மையாக உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறு கின்றனர். இது கடல் உணவுகள் மூலம் ஏற்படும் ஒவ்வாமையைத் தடுக்க பெருமளவில் உதவும். ஆய்வுக்குழுவினர் ஈயின் இறந்த உடல் கழிவுகளில் இருந்து அதன் எடையை விட 47 மடங்கு அதிக நீரை ஒரே ஒரு நிமிடத்தில் உறிஞ்சும் ஆற்றல் உள்ள ஹைடிரோஜெல்லை (hydrogel) கண்டுபிடித்துள்ளனர். பயிர் நிலங்களில் தேங்கி நிற்கும் வெள்ளநீரை மண்ணில் இருந்து உறிஞ்சி வறட்சிகாலங்களில் அதை மெதுவாக வெளியேற்ற இதைப் பயன்படுத்தலாம்.
சூப்பர் ஹைடிரோஜெல்
டெக்சாஸ் அடிக்கடி வெள்ளப் பெருக்கு மற்றும் வறட்சியால் பாதிக் கப்படும் பகுதி என்பதால் நீரை உறிஞ்சி தேக்கிவைத்து வெளியேற் றும் புதிய சூப்பர் உறிஞ்சுதிறனுள்ள ஹைடிரோஜெல்லை வூல்லியின் ஆய்வுக்குழுவினர் உருவாக்கிவரு கின்றனர். டெக்சாஸ் நிலங்களில் இதைப் பயன்படுத்தி பரிசோத னைகள் நடந்துவருகின்றன. உயிரி பிளாஸ்டிக் வழக்கமாக பெட்ரோலிய வேதிப் பொருட்களில் இருந்து தயாரிக்கப் படும் பாலி கார்பனேட், பாலியூ ரித்தேன் (polyurethane) போன்ற உயிரி பிளாஸ்டிக்கை தயாரிக்கப் பயன்படும் பொருட்களை ஈயின் இறந்த உடற்கழிவுகளில் இருந்து உரு வாக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த வகை உயிரி பிளாஸ்டிக்குகள் பிளாஸ்டிக் மாசை ஏற்படுத்துவதில்லை.
கழிவு நீக்கமும் புதிய பொருளின் உற்பத்தியும்
கழிவுகளை இந்த பூச்சிகள் அவற் றின் முக்கிய உணவாகக் கொண்டுள் ளன. இதே உயிரினங்களை நாம் மீண்டும் புதிய உயிரி பிளாஸ்டிக்கை உருவாக்கப் பயன்படுத்தலாம். இத னால் இவை கழிவை உண்ணும் உயிரி னமாக மட்டும் பயன்படுவதில்லை. புதிய பிளாஸ்டிக்கை தயாரிக்கும் மூலப்பொருளாகவும் பயன்படு கின்றன. வரமாக வந்து மனித குலத்திற்கு சாபமாக மாறி உலகை அச்சுறுத்தி வரும் பிளாஸ்டிக் மாசை இல்லாமல் செய்ய இந்த கண்டுபிடிப்பு உதவும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.