வாழ்வின் துயரங்களை அதன் போக்கி லேயே உவகையோடு ஏற்கின்ற டேனியல்; சினத்தோடு எதிர்கின்ற ஆலிசன்; இரு வேறு வாழ்வின் பயணங்களை நுட்பமாகவும், கவித்துவ மாகவும் பேசுகின்ற படமே”A Good Person”. நியூயார்கில் வாழும் வயதான டேனியல்,வியட்நாம் போரில் பங்கேற்ற,முன்னாள் போலீஸ்காரர். மகன் நாத்தன்,திருமணமான மகள் மாலி என்று இரு பிள்ளை கள். மாலியின் பதின்ம மகள் ரியான், ஸ்டான்போர்ட் கால்பந்தாட்ட கிளப்பில் எதிர்காலத்தில் விளையாடும் கனவு கொண்டவள். மருத்துவ பிரதிநிதியாகப் பணிபுரியும் பாடகி ஆலிசன், நாத்தனின் அன்பு காதலி.ப்ரீஸ்டைல் நீச்சல் வீராங்கனை. தகப்பன் கைவிட்டு ஓடிவிட்டதால் தாயோடு வாழ்கி றாள். நாத்தன், ஆலிசன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கிறது. ஆலிசன்,மாலி மற்றும் மாலியின் கணவர் ஆகியோர் திருமண ஆடைகள் வாங்கச் செல்கின்றனர். ஆலிசன் காரோட்டிக்கொண்டே, கைபேசியில் நில வரை படம்(Map) பார்க்க,கண் இமைக்கும் நேரத்தில், திடீ ரென வந்த ஜேபிசி வாகனத்தில் மோதி,கடும் விபத்து நேரிடுகிறது. மாலி மற்றும் அவரது கணவர் சம்பவ இடத்தி லேயே இறக்கிறார்கள்.
தலையில் படு காயமடைந்த ஆலிசன், அறுவை சிகிச்சையின் உதவியால் உயிர் பிழைக்கிறாள். தொடர் சிகிச்சை காரணமாக வலி நிவாரணிகளை உட்கொள்ளும் பழக்கத்திற்கு ஆட்படுகிறாள். இருவரின் மரணத்திற்கு தனது கவனக்குறைவே காரணம் என்ற குற்ற உணர்வு துரத்த, அதிலிருந்து மீள போதைக்கு அடிமையாகிறாள். நாத்தனுடனான காதலை யும் துண்டிக்கிறாள். பெற்றோரை இழந்த ரியானை, தாத்தா டேனியல் பாதுகாப்பாக வளர்க்கிறார்.18 வயது பூர்த்தியாகாத ரியான் தனது ஆண் நண்பனோடு, உறவு கொள்ளும் போது, தாத்தா கையும் களவுமாக பிடிக்கிறார். ரியானின் கைபேசியை பறித்து அவளைத் தொடர்புகளிலிருந்து முடக்குகிறார். இது இருவருக்குள்ளும் வெறுப்பை விதைக்கிறது.இதனால் மனமுடைந்த டேனியல் தற்காலி கமாக நிறுத்தி வைத்த குடியை மீண்டும் நாடுகிறார். போதை பழக்கத்திலிருந்து விடுபட ஆலிசனும், டேனியலும் தனித்தனியே முயற்சிக்கிறார்கள். தேவா லயங்கள் நடத்தும் புனர்வாழ்வு சிகிச்சை மையத்தில் இரு வரும், தற்செயலாக சந்திக்கின்றனர்.
தனது மகள், மருமகன் மரணத்திற்கு ஆலிசனே முழுக் காரணம் என நம்புகிற டேனியல்; அவளை ஏற்று, போதை விஷ வளையத்திலிருந்து மீட்டாரா? பேத்தி ரியான் இலக்கை அடைந்தாரா?என்பதே மீதிக் கதை. டேனியல் சிறுவயதில்,அவரது குடிகாரத்தந்தையால் காரணமின்றி அடி வாங்கியவர்; அதனால் தனது குழந்தை களை அடிக்கவேக் கூடாது என முடிவெடுக்கிறார்.நாள டைவில் மதுபழக்கத்திற்கு ஆளாகி,மகன் நாத்தன் காது செவிடாகும் வரை,தான் அடித்ததை நினைவு கூறுகிறார். அதன் பிறகு மகனைப் பார்க்கும் போதெல்லாம் ஏற்படும் குற்ற உணர்வால்,மன்னிப்பு கேட்டாலும், சில விஷ யங்களுக்கு மன்னிப்பே கிடையாதென நம்புவதாக ,டேனி யல் ஆலிசனிடம் கூறுகிறார். இது,போதை எவ்வாறு மனிதத்தை வதைக்கிறது, என்பதனை உருக்கமாக கடத்துகிறது. டேனியல் தனது காதலிக்கு முதல் முத்தமிடுகை யில்,காதலியின் மூக்கு ஜில்லென இருந்ததென;தனது நீங்காத நினைவுகளை ஆலிசனிடம் பகிர்வது,காதலின் மெல்லிய பரவசத்தைத் தருகிற காட்சியாகும். போதைக்கு அடிமையான ஆலிசன் அதிலிருந்து மீள்வ தற்கு ஒரு பக்கம் முயற்சி எடுக்கிறார். விரும்பத்தகாத நிகழ்வுகளைக் கேள்விப்படும் போது,மீண்டும் போதை யை நாடுகையில்,வயிறை சொறிவது; உறக்கமின்றி சிரமப்படுவது;இடதுபக்கத் தொடை மட்டும் நடுங்கு வது;கன்னம்,உதடு துடிப்பது,போன்ற தத்தளிப்பு, பாத்திரத்தின் மீதான கழிவிரக்கம் பலமடங்கு அதி கரிக்கும் வகையில்,ப்ளோரன்ஸ் பூக் அற்புதமான நடிப்பை தந்துள்ளார். இவர்,Lady Macbeth(2016), Malevolent (2018) போன்ற படங்களில் நடித்தவர்.
நாத்தன் வேறு பெண்ணை காதலிப்பதை அறிந்த வுடன், ஆலிசனின் கவலை தோய்ந்த மனதை டேனியல் புரிந்துகொள்வார். மீண்டும் போதைக்குச் செல்ல வேண்டாம் எனக் காதருகே கெஞ்சுவதும்;”ஒரு முறை அணைத்து(Hug) கொள்ளவா?”என்ற விருப்பத்தை தெரிவிப்பதும்; அதற்கு அவள் “வேண்டாம்! உணர்வு களை கட்டுபடுத்த முடியாது,ரியான் முன் அழுது விடு வேன்”என பதிலுக்கு மன்றாடுவதும்;அதற்கு டேனியல், “கண்ணாலேயே உன்னை அணைத்துக் கொள்கிறேன்” எனக் கூறும் காட்சியில்,86 வயதான மார்கன் ப்ரீமேன், கூர்மையான நடிப்பை வெளிக்கொணர்ந்து, மாபெரும் கலைஞர் என நிரூபித்துள்ளார்.இவர், The Shawshank Redemption(1994),Deep Impact(1998),Million Dollar Baby(2004), போன்ற புகழ்பெற்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்றவர். இனிமையான இசை, உயரிய ஒளிப்பதிவு, மெச்சக்கூடிய படத்தொகுப்பு, இவை மூன்றும் திரைக் கதையை அலங்கரித்து சிறப்பாக்கியுள்ளது.இது உண்மைச் சம்பவத்தை அருகிலிருந்து தரிசிக்கின்ற உணர்வை அளிக்கிறது. “ஒவ்வொருவரும் தான் விரும்பும் மினியேச்சர் பொம்மை ஊரை, மனதிலோ அல்லது வீட்டிலோ பொழுது போக்கிற்காக வடிவமைப்பார்கள்.அங்கு அன்பான அக்கம்பக்கத்தினர்,தொகுப்பு வீடுகள், பள்ளிகள், முத்த மிடும் காதலர்கள்,விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் செல்லும் ரயில்கள், உள்ளிட்ட அனைத்தும் இருக்கும்.ஆனால் நடைமுறை வாழ்வு மேலே குறிப்பிட்டது போல் நேர்த்தியாக இருக்காது.எனவே,நாம் தேர்ந்தெடுக்காத விதியை நேசிக்கலாமே”என ஆலிக்கு டேனியல் கடி தத்தில் உணர்வு பொங்க குறிப்பிட்டிருப்பார்.கடிதத்தை படித்ததும்,பொம்மை ஊரின் விளக்கை அணைப்பாள்.இது, ஆலிசன் விதியை ஏற்கவில்லை என்பதற்கான குறியீடாகும்.
பிறர் மேல் அன்புகொண்டு வாழும் டேனியல், விதியே வலியதென துயரை ஏற்று,மசகு எண்ணெயாக மதுவை பயன்படுத்தி காலப் போக்கில் மதுஅடிமையானவர். திடீரென துயரங்களை கண்ட ஆலிசன்,திகைத்து போதை வலையில் விழுந்தவள். வாழ்வில் வெவ்வேறு நிலையில், துயரங்களை வெவ்வேறு போக்கில் சந்திக்கும் இந்த இருவரும் தற்காலி கமாக விடுதலை பெற போதையை நாடியவர்கள். இரு வருமே விஷவளையத்திலிருந்து வெளியேற முயற் சிப்பவர்கள். ஆனால் விதியை ஏற்காத எதார்த்தவாதி ஆலிசனே, தனது போராட்டக் குணத்தால், நிரந்தரமாக போதையிலி ருந்து விடுதலைப் பெறுகிறார்.எனவே ஆலிசனே “A Good Person”. “ஜாக் ஃப்ராப்”என்ற 48 வயது அமெரிக்கரே,கதை, தயாரிப்பு மற்றும் இயக்கத்தையும் செய்துள்ளார். பிரைம் அமேசானில், தமிழ் சப்டைட்டிலுடன் இப்படம் காணக்கிடைக்கிறது.