மக்களவையில் புதன் அன்று மகளிர்க்கு இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதன்மீது ஏ.எம்.ஆரிப் பேசியதாவது: பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கு வகை செய்யும் விதத்தில் கொண்டுவரப்பட்டுள்ள 2023 அரச மைப்பு (128ஆவது திருத்தச்) சட்டமுன்வடிவை மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முழுமையாக வரவேற்று என் கருத்துக்களை கூற விரும்புகிறேன். நாட்டின் சட்டங்களை உருவாக்குவதிலும், கொள்கை முடிவுகளை மேற்கொள்வதிலும் பெண்க ளுக்கும் முக்கியமான பங்கு உண்டு என்பது எவரும் மறுக்க முடியாத ஓர் உண்மையாகும். இது தொடர்பான விவாதம் நம் நாட்டில் வெகு காலத்திற்கு முன்பே துவங்கிவிட்டது. ஆயினும், இப்போதுதான், இவ்வாறு இதற்கு முன் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையெல்லாம் மூடி மறைத்துவிட்டு, இந்த அரசாங்கம் - பாஜக அரசாங்கத்தால்தான் இதனை நிறைவேற்ற முடியும் என்பதுபோல் இந்தச் சட்ட முன்வடிவை இப்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது.
உண்மையில் இந்தச் சட்டமுன்வடிவை கொண்டு வந்ததற்கான பெருமை, தோழர்கள் பிருந்தா காரத், ஆனிராஜா, ஸ்ரீமதி டீச்சர் உட்பட நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் மாதர் சங்கங்கள் அனைத்திற்கும் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல் படுத்த வேண்டும் என்றும், அரசமைப்புச்சட்டம் உத்தர வாதப்படுத்தியுள்ளது போல் அனைவருக்கும் சம நீதி, சம அந்தஸ்து கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தை அணுகிய வர்களுக்கும் போய்ச் சேரவேண்டும். இத்தனை ஆண்டு காலமாக இதற்கான முயற்சிக ளில் ஈடுபட்ட தலைவர்கள் அனைவருக்கும் என் செவ்வ ணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மக்களவைக்கூட்டத்தொடர் முடியும் தருவாயில் அறி முகப்படுத்தப்பட்டிருக்கும் இந்தச் சட்டமுன்வடிவு, அதுவும் உடனடியாக இதன் ஷரத்துக்களை அமல் படுத்தாமல் காலங்கடத்தும் விதத்தில் கொண்டுவரப் பட்டிருக்கிற இந்தச் சட்டமுன்வடிவு, நாட்டில் உள்ள பெண்கள் குறித்து ஆட்சியாளர்களுக்கு இருக்கக் கூடிய போலித்தனமான இரக்க உணர்ச்சியைத் தோலுரித்துக் காட்டி இருக்கிறது.
நடத்தை விதிமீறல்... ஜனநாயகத்துக்கு அவமரியாதை
இந்த அரசாங்கம், மக்களவையில் நாள்தோறும் மேற்கொள்ளப்பட விருக்கும் நிகழ்ச்சிநிரல் குறித்து, கடைசிநிமிடம் வரைக்கும் எதுவும் கூறாமல் நாடாளு மன்ற நடத்தை விதிகள் அனைத்தையும் இதுநாள்வரை யிலும் அப்பட்டமாக மீறிச் செயல்பட்டு, நம்மை எல்லாம் இருட்டிலே வைத்திருக்கிறது. இந்தச் சட்ட முன்வடிவை அறிமுகப்படுத்தும் வரையிலும் இந்தச் சட்டமுன்வடிவு குறித்து நமக்கு எதுவுமே தெரியாது. ஆனால் அதே சமயத்தில் பாஜக-வைச் சேர்ந்த அனை வருக்கும் இது குறித்து முன்பே நன்கு தெரிந்திருக்கி றது. (தலைவரின் கட்டளைக்கிணங்க சில பகுதிகள் நீக்கம்.) நாம் அனைவரும் இதனைப் பார்த்தோம். நாடாளு மன்ற உறுப்பினர்களைக் காட்டிலும் அவர்கள்தான் இந்த அரசாங்கத்திற்கு நம்பகமானவர்கள். இது ஜன நாயகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள மற்றுமொரு அவ மரியாதையாகும். ஏன் இந்த அரசாங்கம் இப்படியெல் லாம் நடந்து கொண்டு வருகிறது? இது இந்த அவை யையும், ஜனநாயக மாண்புகளையும் கேலிக் கூத்தாக்குவதைத் தவிர வேறல்ல. பாஜக, 2014இல் தேர்தல் அறிக்கை வெளியிட்ட காலத்திலேயே, நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்க ளிலும் மகளிர்க்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அறி முகப்படுத்துவோம் என்று உறுதி அளித்திருந்தது. உண்மையில் அவர்கள் அளித்திட்ட தேர்தல் வாக்குறுதி களை அவர்களே மதித்து நடந்திருந்தால் இப்போது இந்த அவையில் கூடுதலாக இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம், மூன்றில் ஒரு பங்கு மகளிர் உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பார்கள். 2019இலும்கூட, இரண்டாவது தடவையாக அது ஆட்சிப்பொறுப்பேற்ற சமயத்திலும், இதுபோன்ற தொரு திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு, அது ஒரு வாய்ப்பினைப் பெற்றபின்னர், இதனை அமல்படுத்த வேண்டும் என்பது குறித்து உண்மையில் அதற்கு அக்கறை இருந்திருக்குமானால் இதனை அமல் படுத்தி இருக்க முடியும்.
பெண்களால் சபிக்கப்படுவீர்கள்
இந்த அரசாங்கம் அவையில் எவ்விதமான விவாத முமின்றி அல்லது நிலைக்குழுவிற்கு எதையும் அனுப்பி டாது, எண்ணற்ற சட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது. அவ்வாறான சமயங்கள் அனைத்தின்போதும், பாஜக-வும் இந்த அரசாங்கமும் மகளிர் இட ஒதுக்கீடு குறித்து வாயே திறக்கவில்லை. இரண்டாவது தடவை ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டு காலம் கழித்த பின்பு, இந்தச் சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்தி யிருக்கிறது. இப்போதும் கூட 2024இல் நடைபெறும் தேர்தலில் மகளிர்க்கு இட ஒதுக்கீடு கிடையாது. மாறாக இதனை 2029இல்தான் கொண்டுவரப் போவதாகக்கூறியிருக்கி றீர்கள். எனவே விநாயகர் சதுர்த்தி அன்று நாடாளு மன்றத்தின் புதிய கட்டடத்திற்குள் நுழைந்துள்ள நீங்கள் பெண்களால் சபிக்கப்படுவீர்கள் என்பது கூறா மலேயே நடக்கப்போகிறது. அதேபோன்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பதற்கான காலநிர்ணயமும், தொகுதி மறுவரையறைக்கான கால நிர்ணயமும் குறிப்பிடப்படவில்லை. இதனால் இன்னும் பல ஆண்டுகள் பெண்கள் காத்திருக்க வேண்டும்.
உச்சநீதிமன்றத்தின் கேள்விகள்...
உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றிற்குப் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் இருப்பதால், அதற்குப் பதில் அளிக்கும் விதத்தில் இந்தச் சட்டமுன்வடிவு தற்போது அறிமுகம் செய்யப் பட்டிருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாகும். சுமார் ஒரு மாதத்திற்கு முன், ஆகஸ்ட் 11 அன்று, மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான பொது நல மனு மீது உச்சநீதி மன்றம், அரசாங்கத்தைக் கேட்ட கேள்வியை நான் மேற்கோள்காட்ட விரும்புகிறேன். “இதன்மீது நீங்கள் (அரசாங்கம்) இன்னமும் பதில் அளிக்கவில்லை. இதற்குப் பதில் அளிக்க ஏன் கூச்சப்படுகிறீர்கள்? ஏன் பதில் அளிக்காமல் இருக் கிறீர்கள்? அமல்படுத்துவீர்களா, மாட்டீர்களா? உங்கள் விருப்பம் என்ன என்று சொல்லிவிடுங்கள். ஏனென் றால் கிடப்பில்போட முடியாத அளவிற்கு மிக முக்கிய மான பிரச்சனையாகும். இது மிகவும்முக்கியம். இது நம் அனைவரும் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும்.” இதுதான் உச்சநீதிமன்றம் அரசாங்கத்தைப் பார்த்துக் கேட்ட கேள்வியாகும். அந்தக் கேள்விக ளுக்கெல்லாம் பதில் அளிக்கும் கடைசி வாய்ப்பாக இந்தச் சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதேபோன்று நாகாலாந்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களின்போது மகளிர் இட ஒதுக்கீட்டைக் கையாளும் பிரச்சனை தொடர்பாக தன்னுடைய அதிருப்தியையும் உச்சநீதிமன்றம் அர சாங்கத்திற்கு சமீபத்தில் வெளிப்படுத்தி இருந்தது. அப்போது “நீங்கள், உங்களுக்கு ஒத்துவராத அரசாங் கங்களுக்கு எதிராக அதீதமான நிலைப்பாடுகளை (extreme stands) எடுக்கிறீர்கள். ஆனால், உங்கள் சொந்த அரசாங்கமே அமலில் உள்ள அரசமைப் புச்சட்ட ஷரத்துக்களை மீறிச் செயல்பட்டுக்கொண்டி ருக்கிறது. அதுகுறித்து எதுவும் கூற நீங்கள் விரும்ப வில்லை” என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. அரசாங்கம் இதற்கும் பதில் அளிக்கவில்லை.
உண்மை வரலாற்றை கூற வேண்டும்
அடுத்து, இந்தச் சட்டமுன்வடிவின் சாராம்சத்தை ஆராய்கையில், இந்த அவையில் தாக்கல் செய்யப் பட்ட சட்டமுன்வடிவுகளிலேயே மிகவும் வேடிக் கையான ஒன்றாக இது இருக்கிறது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்திலிருந்தே பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. மாநிலங்களவை யிலும்கூட 2010இல் இதற்கான சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது. இவ்வரலாறு அனைத்தும் இதனைக் கொண்டு வருவதற்கான நோக்கங்கள் மற்றும் காரணங்களில் கூறப்பட்டிருக்க வேண்டும். மாறாக, இது தொடர்பாக நம் சட்ட அமைச்சர் என்ன கூறியிருக்கிறார்? பிரதமர் அடிக்கடி கூறும், அமிர்தகாலம், விக்சித் பாரத் (பாரதத்தை வல்ல மைப்படுத்துவோம்), நாரி சக்தி (மகளிர் வல்லமை) போன்றவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார். கேரள மாநிலத்தின் மக்கள் பிரதிநிதியாக இங்கே உங்கள் முன் நின்றுகொண்டிருக்கிறேன். கேரளம், 1990களிலேயே – சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பே - உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியிருக்கி றது. அந்தக் காலத்திலேயே சுமார் 30 விழுக்காடு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. 2008இல் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடுகளை, அரசமைப்புச்சட்டம் கூறியிருக்கும் 33 விழுக்காட்டு வரம்பையும் தாண்டி, 50 விழுக் காடாக உயர்த்தி இருக்கிறோம்.
நாட்டில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு பெண்களுக்கு அதிக அளவில் இட ஒதுக்கீட்டை அளித்த முதல் மாநிலம் என்று கூறிக்கொள்வதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். எனவே, இந்த அர சாங்கம் இந்தச் சட்டமுன்வடிவைக் கொண்டுவருவ தன் மூலம் வரலாறு படைத்திடும் முடிவை எடுத்திருப்ப தாகக் கூறுவது, நாட்டிலுள்ள பெண்களை முட்டாளா கக்கருதும் அரசியல் நகைச்சுவையே தவிர வேறல்ல என்று தெரிவித்துக்கொள்கிறேன். எனவே, மக்கள் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை போன்றவற்றிற்காகக் காத்திருக்காமல் மகளிர்க்கு இட ஒதுக்கீட்டை அளித்திடும் இந்தச் சட்டமுன்வடிவை வரவிருக்கும் தேர்தலுக்கே அமல் படுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இந்த அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஏ.எம்.ஆரிப் பேசினார். (ந.நி.)