articles

img

ராணுவ சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடிய கால்பந்து வீரர்

2011 டிசம்பர் 4-இல் மறைந்த சாக்ரடீஸ் பிரேசி லியரோ (1954-2011) ஒரு சிறந்த கால்பந்து வீரர் மட்டுமல்ல, மருத்துவரும் கூட. அவர் தனது புகழை ஜனநாய கம், தொழிலாளர் உரிமைகள் மற்றும் சமூக நீதிக்காகப் பயன்படுத்தினார்.அமெரிக்க ஆதரவு பெற்ற ராணுவ சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடினார்.

“விளையாட்டு வெற்றிக ளை விட அரசியல் வெற்றிகள் முக்கியம். ஒரு போட்டி 90 நிமி டங்களில் முடிவடையும். ஆனால் வாழ்க்கை தொடர்கிறது” என்பது அவரது புகழ்பெற்ற கூற்று.

தொழிலாளர்வர்க்கத்தின் குரலாக விளங்கிய காரின் தியன்ஸ் அணிக்காக விளையாடிய அவர், காரின்தியன்ஸ் ஜனநாயக இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவர். இத்தாலியில் பியோரென்டினா அணிக்காக விளையாடச் சென்றபோது, “கிராம்ஷியின் நூல்களை அவரது தாய்மொழியில் படிக்கவும், தொழிலாளர் இயக்க வரலாற்றைக் கற்கவும் வந்துள்ளேன்” என்று குறிப்பிட்டார்.

சாகெல் கூட்டணி - கியூபா உறவு மேம்பாடு

மாலி, புர்கினா பாசோ, நைஜர் ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாடுகள் அடங்கிய சாகெல் கூட்டணியின் 12 பிரதிநிதிகள் நவம்பர் 8-15 வரை கியூபாவிற்கு விஜயம் செய்தனர். பிரெஞ்சு-அமெரிக்க காலனி ஆதிக்கத்தை எதிர்க்கும் இந்த கூட்டணி, கியூபாவின் சோசலிச மாதிரி யைக் கற்றுக்கொள்ளவும், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் இந்த பயணத்தை மேற்கொண்டது.

இஸ்ரேலின் ரசாயன ஆயுத பயன்பாடு குறித்த கவலைகள்

ரசாயன ஆயுதங்கள் கோட்பாட்டில் (Chemical Weapons Convention) கையெழுத்திட்டு ஒப்புதல் அளிக்காத ஒரே நாடு இஸ்ரேல். காசா மற்றும் லெபனானில் தடைசெய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் உள்ளிட்ட ரசாயன ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. ஹேக் நகரில் நடைபெற்ற 29-ஆவது ரசாயன ஆயுதங்கள் மாநாட்டில் இது குறித்த கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.

பிரேசில்-சீனா குடும்ப விவசாய மையம் துவக்கம்

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் பிரேசில் பயணத்தின்போது, பிரேசிலியா பல்கலைக்கழகத்தில் குடும்ப விவசாய ஆராய்ச்சி மையம் துவக்கப் பட்டது. 70 வகையான சீன விவசாய இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கிடையே கல்வி பரிமாற்றத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

சீனா-பெரு துறைமுக திட்டம்

பெருவின் ஷான்காய் நகரில் சீனாவின் 60% பங்களிப்புடன் புதிய ஆழ்கடல் துறைமுகம் திறக்கப்பட்டுள்ளது. 360 கோடி டாலர் முதலீட்டில் உருவான இத்துறைமுகம், தென் அமெரிக்கா-சீனா வர்த்தகத்தை நேரடியாக இணைக்கும். பிரேசிலின் சுதந்திர வர்த்தக மண்டலம் வரை ரயில் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

அமேசான் தொழிலாளர்களின்  ஊதிய உயர்வு போராட்டம்

“கருப்பு வெள்ளி” மற்றும் “சைபர் திங்கள்” நாட்களில் உலகம் முழுவதும் உள்ள அமேசான் தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தினர். 2024-இல் மூன்று மடங்கு லாபம் ஈட்டிய நிறுவனம், தொழிலாளர்க ளின் உடல்நலம் மற்றும் மனநலத்தை பாதிக்கும் வகையில் செயல்படுவதாக குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளது.  அமெரிக்காவில் 13 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட டிரக் ஓட்டுநர்கள் சங்கம் முறைசாரா தொழிலாளர்களை அமைப்பாக்கப் போராடி வருகிறது.

ஐரோப்பிய சுகாதார ஊழியர்களின்  ஊதிய ஏற்றத்தாழ்வுகள்

ஐரோப்பிய பொதுச்சேவை சங்கங்களின் சம்மேளனத்தின் அறிக்கை யின்படி, 15 ஐரோப்பிய நாடுகளில் சுகாதார ஊழியர்களின் ஊதியங்க ளில் பெரும் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. ஜெர்மனியில் மணிக்கு 20 யூரோ  ஊதியம் பெறும் பணியாளர்கள், ருமேனியாவில் வெறும் 5 யூரோ மட்டுமே பெறுகின்றனர். தனியார் துறையில் பொதுத்துறையை விட 30% குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது. இதற்கு எதிராக போராட்ட அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.