articles

img

கண்களை மூடிய பூனைகள்! - இரா.சிந்தன்

ஒரு மாபெரும் நவீன சோசலிச நாடு

சோசலிச நாடுகளைப் பற்றி பேசுவ தற்கு ஏராளம் இருந்தும், எதிர் மறைச் செய்திகளை மட்டுமே தேடித்தேடி அவதூறாக மாற்றுவது தான் முதலாளித்துவ ஊடகங்களின் பாணியாக இருக்கிறது. இந்த முறையும் சீனாவில் நடக்கும் போராட் டங்கள் அதே விதத்தில்தான் உலக ஊடகங்க ளால் அணுகப்படுகின்றன. “சீனாவில் மக்கள் போராட்டம். ஜி ஜின்பிங் பதவி விலக மக்கள் வலியுறுத்தல்’’ என்ற செய்தியை கடந்த வாரத்தில் படிக்காத வர்களே இருக்க மாட்டார்கள்.  மேற்கு நாடு களை மையமாகக் கொண்ட செய்தி முகமை கள் உலகின் அனைத்து ஊடகங்களையும் இந்த செய்தியால் நிரப்பிவிட்டார்கள்.  சீனாவில் மக்கள் போராட்டங்கள் இல்லை யென்று அங்கு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதாவது சொன்னதா? இல்லை. அங்கு போராட்டங்கள் நடப்பது உண்மை. அரசாங் கம் அதற்கு செவிமடுத்து பிரச்சனைகளைத் தீர்க்கிறது. உலகிலேயே மிக அதிக மக்கள் தொகையுள்ள நாடு; மிக அதிக இணைய பயனர்களும், அதிவேக இணைய வசதியும் உள்ள நாடு. அந்த நாட்டு சமூக ஊடகங்க ளில் பிரச்சனைகளும், மாற்றுக் கருத்துக் களும் விவாதிக்கப்படுகின்றன.

சீனாவில் நடந்த போராட்டத்தின் போது பி.பி.சி பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்ட தாக இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்தது. அவர் தாக்கப்பட்டதாக ‘தீவிர சீன எதிர்ப்பா ளரான’ இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரி வித்தார். அதற்கு சீன செய்தித் தொடர்பாளர் விளக்கம் தெரிவித்திருந்தார். ஷாங்காய் நகரத்தில் நடந்த போராட்டத்தின் நடுவே பி.பி.சி பத்திரிக்கையாளர் இருந்தார்; போராட் டத்தை கலைக்கும்போது அவரையும் போலீ சார் இழுத்துச் சென்றுள்ளனர். அவர் பத்தி ரிகையாளர் என்பதை விசாரணையில் சொன்னார். இதுதான் நடந்தது. அவரை தாக்கவோ, கைது செய்யவோ இல்லை என்று சீன அரசின் மறுப்பைத் தெரிவித்தார். சீனாவில் நடந்துள்ள போராட்டங்களின் வீடியோவை பார்க்கும்போது, அவைகளில்  கொரோனா ஊரடங்குக்கு எதிராக கோஷ மிடுகிறார்கள். கொரோனா  பரிசோதனை களை மேற்கொள்ளக் கூடாது என்ற முழக்கங்கள் கேட்கின்றன. சில நூறுபேர் கூடியிருப்பதைப் பார்க்க முடிகிறது. 

அடுக்குமாடியில்  தீ விபத்து

இந்த போராட்டங்களுக்கு பின்னணி என்ன என்று ஆராய்ந்தால், சீனாவின் ஜிங்ஜியாங் மாகாணத்தில், உருமி என்ற பகுதியில் கடந்த நவம்பர் 24 ஆம் தேதியன்று அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 10 பேர் பலியானார் கள், 9 பேர் காயமடைந்தனர். கொரோனா ஊரடங்கிற்காக விதிக்கப் பட்ட கட்டுப்பாடுகள்தான் 10 பேருடைய உயி ரிழப்புக்கு காரணம் என்று சில சமூக ஊடகப் பதிவுகள் வேகமாக பரவின. ஊர டங்கு கட்டுப்பாடுகள் காரணமாகவே தீய ணைப்பு வாகனம் உரிய நேரத்தில் வரமுடிய வில்லை என்று அந்த பதிவுகளில் தெரி விக்கப்பட்டுள்ளது. ஆனால் சீனாவின் செய்தி ஊடகமான ‘நியூ சீனா டிவி’, அதற்கு அடிப்படை இல்லை என்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. சாலைகளின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களையும், பாதையோரத்தில் இருந்த தடுப்புகளையும் நீக்குவதற்கான முயற்சி அதில் பதிவாகி யுள்ளது.  இருப்பினும் செய்தியை விடவும் வதந்தியே வேகமாக பரவும் என்ற நிய திக்கு சீன சமூகமும் விதிவிலக்கில்லை. ஊர டங்குதான் தீ விபத்து பலிகளுக்கு காரணம் என்ற பதிவுகள், ஏற்கனவே ஊரடங்கு நட வடிக்கை மீது விமர்சனம் கொண்டிருந்த  ஒரு பகுதியினரை போராட்டத்திற்கு உந்தியது. ஜிங்ஜியாங்,  ஷங்காய், பெய்ஜிங் மற்றும் ஹாங்காங் உட்பட சில இடங்களில் போராட் டங்கள் நடந்துள்ளன.

உயிரா? சந்தையா?

மக்களின் உயிரா, சந்தையின் நலனா, எது முக்கியம் என்று கேள்வி எழுந்தால் முதலாளித்துவ நாடுகள் எல்லாவற்றையும் சந்தையின் விதிகளுக்கு உட்படுத்துகி றார்கள். உயிர் முக்கியம், ஆனால் அதற்கு ஒரு விலை உண்டு என்ற போக்கில்தான் கொரோனா சிகிச்சை முதல் தடுப்பூசி வரை அனைத்தும் வணிக நோக்கில் முதலா ளித்துவ நாடுகளில் எதிர்கொள்ளப்பட்டது. இப்போதும் எதிர்கொள்ளப்படுகிறது. ஆனால் சோசலிச நாடுகளில் மக்களின் உயிரே முதன்மை; சமூகத்தின் ஒட்டுமொத்த நன்மையே அடிப்படை என்ற கொள்கை யோடு செயல்படுகிறார்கள்.  கொரோனா தடுப்பூசியை நாடு முழுமைக்கும் கொண்டு சேர்த்துள்ள போதிலும் கொரோனா ஏற் படுத்தும் நீண்டகால பாதிப்புகள் பற்றிய அறிவியல் பூர்வமான ஆய்வு முடிவுகள் எதுவும் இல்லாததால், ஊரடங்கு விதிகளை தளர்த்துவதில் சீனா எச்சரிக்கையோடு உள்ளது. பொருளாதார நலனையும், மக்க ளின் சிரமங்களையும் கணக்கில் கொண்டு சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இருப்பினும், கொரோனாவிற்கு எதிரான தீவிர போராட்டம் என்ற கொள்கையில் மாற்றம் இல்லை. ஹாங்காங்கில் அண்மை யில் திடீரென பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து மருத்துவமனைகள் திணறிய அனுபவம் பிற மாகாணங்களில் ஏற்பட்டு விடக் கூடாது என்று எச்சரிக்கையோடு இருக்கிறார்கள். மறுபக்கத்தில் மக்களுக்கு ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை நிரந்த ரமாக சரிசெய்ய தேவையான மக்கள் நல நடவடிக்கைகளை விவாதித்தும் முன்னெ டுத்தும் வருகிறார்கள்.

தொடரும் போராட்டம்

கடும் வறுமையை ஒழித்துக் காட்டி யுள்ள சீனா, அந்த சாதனையை தக்கவைப்ப தற்கான போராட்டத்தில் இருக்கிறது. கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கின் காரணமாக உற்பத்தியில் ஏற்படுகிற நெருக்கடி, மேற்குலக நாடுகளை சூழ்ந்தி ருக்கும் பொருளாதார நெருக்கடி காரண மாக ஏற்றுமதியில் ஏற்படுகிற சரிவு, ஏகாதி பத்திய சக்திகள் உயர் தொழில்நுட்பங்களை  மறுத்து, முற்றுகையிடுவதால் ஏற்படும் சவால்கள் ஆகியவற்றை எதிர்கொள்கி றார்கள். சீனாவிற்குள் இதனால் கடுமை யான கருத்துப் போராட்டங்களும் நடக் கின்றன. சோசலிசத்தின் பதாகையை உயர்த்திப் பிடித்தபடி, முன்னேற்றப் பாதையை வகுப்பது கம்யூனிஸ்டுகளின் முன் உள்ள சவாலாகும். ஆனால் இந்த சூழலை உலக முதலாளித்துவ ஊடகங்கள் தங்களுடைய விருப்பத்திலிருந்து மட்டுமே அணுகுகிறார்கள். சில நாட்கள் முன், சீனாவின் ஒரு ராணுவ கலகம் உருவாகியிருப்பதாக அவர்கள் வெளியிட்ட செய்திக்கு, சமூக ஊடகத்தில் இயங்கும் சீனப் பெயர் கொண்ட ஒரு போலிக் கணக்கே போதுமானதாக இருந்தது. ஆனால் வெகுமக்களுக்கு இதுபோன்ற பதற்ற அணுகுமுறை சரியான பார்வையை கொடுக்காது.

பேசப்படாத செய்திகள்

இதே காலகட்டத்தின் சீனாவில் இருந்து வெளியான, உலக நாடுகளால் உற்று கவ னிக்கப்பட்ட சில செய்திகளை இணைத்துப் பார்த்தால், முதலாளித்துவ ஊடகங்கள் மறைக்கும் பக்கத்தை அறிந்துகொள்ள லாம்.  1) அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுக ளின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் சீனாவிற்கு இடம் மறுக்கப்பட்டிருந்தது. தற்போது தனது சொந்த முயற்சியில் அதி நவீன விண்வெளி ஆய்வகத்தை உரு வாக்கியுள்ளது.  அந்த ஆய்வகத்தில் பல்வேறு ஆய்வு கள் நடக்கின்றன. உதாரணமாக புவி ஈர்ப்பு விசை இல்லாத பகுதியில் தானியங்க ளை விளைவிக்க முடியுமா?

வான்வெளி யில் உயிர்கள் வாழத் தகுதியான கோள்கள் வேறு உண்டா? என்பவற்றை குறிப்பி டலாம். இப்போது கட்டுமானப் பணிகள் முழு மையடைந்து, இரண்டாவது விஞ்ஞானிகள் குழு அங்கே சென்றுள்ளது. ஒரு வாரத்தில் முதல் குழு பூமிக்கு திரும்பவுள்ளது. இந்த ஆய்வகத்தில் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் விஞ்ஞானிகள் சென்று தங்கி ஆய்வு செய்ய முடியும் என்பது குறிப்பிடத் தக்கது. 2) உலகிலேயே அதிவேகமாக பய ணிக்கும் தரைவழி வாகனத்தை சீனா சாத்தி யமாக்கியுள்ளது. மேக்லவ் தொழில்நுட்பத்தி னாலானது அந்த ரயில் (சிறு வயதில் இரண்டு காந்தங்களை ஒரே புலத்தில் நெருக்கமாக கொண்டு சென்றால் ஒன்றை ஒன்று எதிர்க்குமே, அதே அறிவியல்தான்). தடத்தில் இருந்து 10 மில்லி மீட்டர் உயரத்திற்கு 60 ஆயிரம் கிலோ எடையை தூக்கியபடி, 600 கிலோ மீட்டர் வேகத்தில் நழுவிச் செல்லும் அந்த ரயில், பொதுப் போக்கு வரத்தின் புதிய உச்சமாக அமைந்துள்ளது. குறிப்பாக அத்தனை வேகமாகச் செல்லும் ரயிலுக்குள் அதிர்வே இல்லாத நுட்பமும், விரைவு ரயிலுக்கு பிரேக் போடும் நுட்பமும் கடும் முயற்சியினால் சாத்தியமாகியுள்ளன.  3) நிலாவின் பின்புறத்தில் மேற்கொள் ளப்படும் ஆய்வுகள் சூரிய ஒளி இல்லாத கார ணத்தால் பின் தங்குகின்றன. எனவே, சூரிய ஒளி இல்லாத பகுதிகளில் அணு மின்சா ரத்தை பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சி யை முடித்து விரைவில் மின் உற்பத்தி நிலை யத்தை விண்ணில் செலுத்தவிருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சியிலும் உலக நாடுகள் பங்கேற்பதற்கான அழைப்பை இந்த வாரத்தில் சீனா  விடுத்துள்ளது.

4) அணுக்களை இணைப்பதில் உருவா கும் ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம், சூழலைக் கெடுக்காத ஆற்றல் உற்பத்திக்கான மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. சீனாவில் அதற்கான ஆராய்ச்சி நடந்து வந்தது. சூரியனை விடவும் அதிக வெப்பத்தை 1000 விநாடிகள் தொடர்ந்து நீடிக்கச் செய்து பெரும் சாதனையை செய்திருந்தார்கள். அதனை ‘செயற்கை சூரியன்’ என்று உலகம் அழைக்கி றது. ஐரோப்பிய யூனியன், சீனா, அமெ ரிக்கா, கொரியா, ரஷ்யா மற்றும் இந்தியா வின் நிதி உதவியோடு இந்த திட்டத்தை சீன விஞ்ஞானிகள் முன்னெடுத்து சாதித்துள்ள னர். அதன் முக்கிய பாகம் வடிவமைப்பை தாண்டி உற்பத்திக்கு தகுதியான நிலையை எட்டியுள்ளது. 100 மில்லியன் டிகிரி வெப் பத்தையும் தாங்கும் சுவர்கள் போன்ற அந்த அமைப்பினை உலகிற்கு விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

5) ஒட்டுமொத்தமாக பார்த்தால், புதிய அறிவியல் தொழில்நுட்ப காப்புரிமைகள் பதிவதில் சீனா முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. சீனாவிற்கு அடுத்து உள்ள 10 நாடுகள் செய்திருக்கும் காப்புரிமை பதிவுக ளின் மொத்த கூட்டுத்தொகைக்கு நிகராக 16 லட்சம் விண்ணப்பங்கள் சீனாவில் இருந்து வந்துள்ளன. 10000 மக்கள் தொகைக்கு 7.5 காப்புரிமங்கள் பதிவு என்ற நிலையை எட்டியுள்ளார்கள். புதிய கண்டுபிடிப்புகளில் 6 ஜி தொழில்நுட்பம், செயற்கை நுண்ண றிவு, குவாண்டம் கணினி நுட்பங்கள் மற்றும் சூழலை கெடுக்காத ஆற்றல் உருவாக்கம் ஆகிய துறைகளில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. இவையெல்லாம் கடந்த ஒரு வாரத்தில் வெளியான, மனித குலத்தையே பாய்ச்சல் வேகத்தில் முன்னேற்றக்கூடிய மிக முக்கியமான செய்திகள் ஆகும். அனை வருக்கும் வேலை, அனைவருக்கும் மருத்து வம், கடும் வறுமையை ஒழித்து மலர்ச்சிய டைந்த கிராமங்கள் உருவாக்கம், பாது காப்பான வேலை சூழல் என்ற திசையில் பய ணித்துக்கொண்டே, இதுபோன்ற சாதனை களை அவர்கள் செய்கிறார்கள் என்பது சோசலிசத்தின் மேம்பட்ட நிலையை எடுத்துக் காட்டுகிறது. அதனால்தான் சீனா மேற்கொள் ளும் சாதனைகள் அந்த நாட்டின் சாதனை யாக மட்டும் நிற்காது என்பதையும் இணைத்துச் சொல்ல வேண்டியுள்ளது. பாட்டாளிவர்க்கத்தின் கைகளில் அதிகாரம் வருமானால், அது மனித குல வரலாற் றையே புரட்டிப் போடும் என்கிற நம்பிக்கை யை இந்தச் செய்திகள் தருகின்றன. அதனா லேயே இதுபோன்ற செய்திகளை புறந்தள்ள உலக ஊடகங்கள் முயற்சிக்கிறார்கள். கண் களைக் கட்டியபடி இருளில் வாழ விரும்பும் பூனைக் குட்டிகளை என்ன செய்ய முடியும்?


 

;