articles

img

மோடி அரசின் பயிர்க் காப்பீடு திட்டத்தில் எத்தனை மோசடிகள்! - கே.பி.பெருமாள்

உலகின் மிகப்பெரிய பயிர்க்காப்பீட்டுத் திட்டமாக, பிரதம மந்திரி பயிர் காப்பீடு (பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா, PMFBY) இந்தியாவில் உள்ள விவசாயி களின் எண்ணிக்கையைப் பொறுத்த வரையில் உள்ளது. இந்த பயிர்க் காப்பீட்டு திட்டம் ஐந்து பொதுத் துறை மற்றும் 15 தனியார் காப்பீட்டு நிறுவனங்களால் செயல்படுத்தப்படுகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் 56.8 கோடி விவசாயிகள் பயிர்காப்பீடு செய்துள்ளனர். இதில் 23.2 கோடி விவசாயிகள் இழப்பீடு பெற்றுள்ள னர். இந்நிலையில் இந்தியாவில் சுமார் 70 சதவீத பயிர்கள் காப்பீடு செய்யப்படாமலும் உள்ளது. அந்த பயிர்கள் பாதிக்கப்பட்டால் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்காது. இது போன்று பாதுகாப்பற்ற நிலை யிலும் விவசாயிகள் பயிர் செய்து வருகிறார்கள்.

ஹரியானா மோசடிகள்...

குறிப்பிட்ட பருவத்தில் நஷ்டம் ஏற்படுவதை காப்பீடு நிறுவனங்கள் முன்பே உணர்ந்தால் இழப்பீடு வழங்குவதைத் தவிர்ப்பதற்காக விவசாயிகளின் பிரீமி யத்தைத் திருப்பித் தருகின்றன. இது ஹரியானா மாநிலத்தில் பலமுறை நடந்துள்ளது. அதே போல் பயிர் இழப்பை சந்திக்காத ஆனால் அதிகாரிகளுடன் நெருக்கம் கொண்ட விவசாயிகளுக்கு காப்பீடு மூலம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற மூன்று மோசடி வழக்குகள் அரசின் விசாரணைக்கு பின் வெளியே தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் உள்ளது. சூறாவளி, வறட்சி, வெள்ளம், சுனாமி, ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, பனிப்பொழிவு, மேகவெடிப்பு, பூச்சித்தாக்குதல், உறைபனி மற்றும் குளிர் அலை உள்ளிட்ட 12 பேரிடர்களை நிவாரணம் வழங்குவ தற்காக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பயிர் இழப்பு 33 சதவீதம் அல்லது அதற்கு மேல் இருக்கும் விவ சாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது என்கிறார்  புது தில்லியின் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவ னத்தின் கொள்கை மற்றும் உத்திகள் பேராசிரியர் அனில் குப்தா. 

நீதிமன்றத்தில் முறையீடு

ஆனால் பருவநிலையில் ஏற்படும் பருவநிலை மாற்றம் மற்றும் வெப்ப அலைகள், பயிர்ச் சேதத்தை  ஏற்படுத்துவது போன்ற பேரிடர்கள் மையத்தின் தேசிய பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் பேரிடராக அறிவிக்கப்படவில்லை. பேரிடர் ஏற்பட்டால் மாநில பேரிடர் மேலாண்மை நிதி மூலம் நிவாரணம் வழங்குவ தற்கு மாநிலங்கள் முதன்மைப் பொறுப்பு. பாசனப் பகுதி, மானாவாரிப் பகுதி, சிறு மற்றும் குறு விவசா யிகள் மற்றும் பிற அளவுகளின் அடிப்படையில் நிவாரணத் தொகையும் மாறுபடும்.  உதாரணமாக ராஜஸ்தான் மானாவரி பகுதிக்கு ஹெக்டேருக்கு ரூ.8500 மற்றும் பயிர் இழப்பு 33 சதவீதத்திற்கு மேல் இருக்கும் உறுதி செய்யப்பட்ட பாசனப் பகுதியில் ஹெக்டேருக்கு ரூ.17,000 நிவார ணம் வழங்கப்படுகிறது. பயிர்ச் சேதத்திற்கு விவசாயி களுக்கு ஹெக்டேருக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வறட்சியின் போது 35,162 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக கர்நாடக அரசு மதிப்பிட்டுள்ளது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு  முறையிட்டதை அடுத்து ஒன்றிய அரசு 3454 கோடி நிவாரணம் வழங்கியது. யானைப் பசிக்கு சோளப்பொரி அதே போல் தமிழ்நாட்டில் 2023 இறுதியில் ஏற்பட்ட வெள்ளச் சேதத்திற்கு 37 ஆயிரம் கோடி ஒன்றிய அரசிடம் மாநில அரசு கோரியது. ஆனால் நிவாரணம் ஒன்றிய அரசு வழங்காததால் தமிழக அரசு உச்ச நீதிமன்றம் அணுகிய பின்பு ரூ.276 கோடியை மட்டும் பேரிடர் நிதியாக வழங்கியுள்ளது. “யானைப் பசிக்கு சோளப்பொரி வழங்கியது போல்” நரேந்திர மோடி அரசு செயல்பட்டு வருகிறது. 

60 சதவீத விவசாயிகளுக்கு இழப்பீடில்லை

2023-24இல் மகாராஷ்டிரா மாநிலத்தில் 2.42 கோடி விவசாயிகள் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ளனர். மொத்த பிரீமியம் தொகை ரூ.10,141 கோடி. விவசாயிகள் பங்களிப்பு ரூ.2.41 கோடி,மாநில அரசு ரூ.6048 கோடி. ஆனால் 71.19 லட்சம் விவசாயிகளுக்கு மட்டும் ரூ.3551 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 165 தாலுக்காக்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்னும் 60 சதவீத விவசாயிகளுக்கு இழப்பீடு வழங் கப்படவில்லை. இழப்பீடு வழங்கக் கோரி லத்தூர், சோலாப்பூர் பகுதிகளில் விவசாயிகள் போராட் டங்களில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த அதிகனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் தூத்துக்குடி, திரு நெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் பயிர்கள் சேதமடைந்து விளை நிலங்கள், குளங்கள், கால்வாய் கள், குடியிருப்புகள் சேதமடைந்தன. மாநில அரசு விவ சாயிகளுக்கு நிவாரணம் வழங்கியது. பேரிடர் பாதித்த பகுதியாக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசு வலியுறுத்தியது. ஆனால் ஒன்றிய பாஜக அரசு எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. விவசாயிகள் இழப்பீடு கேட்டு தமிழகத்தில் நாகப்பட்டி னம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், திரு நெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபும் உள்ளிட்ட பல மாவட்டங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  கடந்த 12.08.2024 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதன்பின் நடந்த பேச்சுவார்த்தையில் முதல் கட்டமாக 1,34,980 ஏக்கரில் உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் 34,228 பேருக்கு ரூ.61.20 கோடியும், 29,802 ஏக்கரில் பாசிப் பயறு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ரூ.17.36 கோடியும் ஆக மொத்தம் ரூ.78.56 கோடியை வழங்குவ தாக அறிவித்தனர். மக்காச்சோளப் பயிருக்கு ரூ.92 கோடி 15 தினங்களில் வழங்கப்படும் என்று தெரி வித்தனர். ஆயினும்  விவசாயிகளுக்கு முழுமையாக பணம் வழங்கப்படவில்லை.

மக்காச்சோளப் பயிர்  14 ஏக்கருக்கு ரூ.80...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம், எப்போதும் வென்றான், உள்ளிட்ட 5 வருவாய் கிராமங்க ளில் உள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1000 மட்டும் வழங்கியுள்ளனர். இதர பகுதி விவசாயிக ளுக்கு ஏக்கருக்கு 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வழங்கியுள்ளனர். அதே போல் காமநாயக்கன்பட்டி பிர்காவில் உள்ள விவசாயிக்கு மக்காச்சோளப் பயிர் 14 ஏக்கருக்கு ரூ.80 மட்டும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. சில விவசாயிகளுக்கு ஏக்கருக்கு  ரூ.50 வரவு வைக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து 18.09.2024 அன்று மீண்டும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது.  மாவட்டம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்துவதால் 27.09.2024 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேளாண்துறை, வரு வாய்த்துறை, புள்ளியல் துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், இப்கோ டோக்கியோ இன்சூரன்ஸ் கம்பெனி அலுவலர்கள் மற்றும் விவசாய சங்க தலை வர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடத்தி, விவசாயி களுக்கு முழுமையான பயிர்க்காப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தீர்மானம் நிறை வேற்றி மாநில அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். சமீபத்தில் நாளிதழில் ஒன்றிய அரசு பிரதம மந்திரி பயிர்க்காப்பீடு குறித்து விளம்பரம் செய்தி ருந்தனர். அதில் “பயிர்ப் பாதுகாப்பிற்கான வரம், பாலிசி விவசாயிகள் கையில் கிடைக்கும்” “பயிர்க்காப்பீடு செய்து, பாதுகாப்பு கவசம் பெறுவீர்” என்று அந்த விளம்பரத்தில் கூறப்பட்டிருந்தது.

கிராம அளவில் பாதிப்பு  அளவீடு தேவை

ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் பயிர்க் காப்பீடு தொகை வருவதற்கு தாமதம் ஆனால் 12 சதவீதம் வட்டியுடன் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த இரண்டு செய்தியையும் பார்க்கும்போது பிரதமரும், வேளாண்துறை அமைச்சரும் எந்த லோகத்தில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில், பயிர்க்காப்பீடு கிடைத்திட, நாடு முழுவதும் விவசாயிகள் எவ்வளவு போராட்டங்கள் நடத்துகிறார்கள். எத்தனை இடர்பாடுகளை சந்திக்கிறார்கள். இழப்பீடு கணக்கிடும்போது பஞ்சா யத்து அளவில் கணக்கீடு என்பதற்கு பதிலாக கிராம அளவில் பயிர் பாதிப்புகளை கணக்கிட வேண்டு மென்றும் போராடி வருகிறார்கள். இழப்பீடுத் தொகைகளை இன்சூரன்ஸ் கம்பெனிகள் எவ்வளவு கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எல்லாம் பார்க்க முடிகிறது. அதில் தலையிட துப்பில்லை. 

இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு விவசாயிகள் பணம் வழங்கல்

மாறாக விவசாயிகளின் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை எடுத்து இன்சூரன்ஸ் கம்பெனியின் முதலாளி பாக்கெட்டில் வைக்கும் வேலையை பிரதம ரும், வேளாண்துறை அமைச்சரும் செய்து கொண்டி ருக்கிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு வர வேண்டிய பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பெரும் முதலாளிகளுக்கு சென்று கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையை மாற்றிட முழுமையான பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டை இன்சூரன்ஸ் கம்பெனிகள் வழங்கிட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க விவசாயி கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

கட்டுரையாளர் : மாநிலப் பொருளாளர்,  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்