பஹல்காம் பாதுகாப்பில் கோட்டை விட்ட மோடி அரசு ஆர்எஸ்எஸ்-பாஜகவின் மதவெறி பொய்ப்பிரச்சாரத்தை முறியடிப்போம்!
சிறுபான்மை மக்கள் நலக்குழு வேண்டுகோள்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் மரணமடைந்த அப்பாவி மக்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு இரங்கலும், தாக்குதல் நடத்திய பயங்கரவாதி களுக்குக் கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் எஸ். நூர்முகமது, பொதுச்செயலாளர் எம். ராம கிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாபது: காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டம் பஹல்காமில் சுற்றுலா வந்த மக்கள் மீது நடை பெற்ற பயங்கரவாத தாக்குதலை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு வன்மையாக கண்டிக்கிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறது. கோடைக் காலத்தில் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற இடத்தில் பயங்கரவாதிகள் கோழைத்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி 28 பேரை படுகொலை செய்துள்ளனர். இந்த கொடுமையான துப்பாக்கிச் சூட்டின் போது, சையது உசேன் ஷா எனும் இஸ்லாமிய குதிரை ஓட்டி அப்பாவி சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்க, பயங்கர வாதிகளைத் தடுத்து, அவர்களிடம் இருந்து துப்பாக்கியை பறிப்பதற்கு போராடிய தால் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். மேலும், அவ்வூர் இஸ்லாமிய காஷ்மீரிகள் தப்பிப் பிழைத்தோருக்கு ஆதர வாக பள்ளிவாசலில் அடைக்கலம் கொடுத்து, பாதுகாத்து பத்திரமாக அனுப்பி வைத்துள்ள னர். இருந்தும் இந்த தாக்குதலைப் பயன்படுத்தி இஸ்லாமியர் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து வரும் சங்- பரிவாரத்தினர் மற்றும் அவர்களது ஆதரவு ஊடகத்தினர் செயல் கண்டனத்துக்குரியது. உளவுத்துறை தகவல் இருந்தும் பல்லா யிரம் சுற்றுலாப் பயணிகள் குவியும் அப்பகு தியில் சம்பவத்தின் போது உரிய பாதுகாப்பு போடப்படாததும், ஒரு ராணுவ வீரரோ, பாது காப்பு படையினரோ தென்படாததும் ஒன்றிய மோடி - ஷா அரசின் கையாலாகத்தனத்தையும் தோல்வியையும் காட்டுகிறது. அங்கிருந்த காஷ்மீரத்தைச் சார்ந்த குதிரை ஓட்டிகள் மற்றும் பணியாளர்கள் சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பதற்கும், பயங்கரவாதிகளை எதிர்கொள்வதற்கும் தீரமுடன் செயல்பட்டு பலரை காப்பாற்றி உள்ளனர். பயங்கரவாதிகளின் கொடும் செயல்களுக்கு எதிராக களத்தில் நின்று போராடி உயிர் நீத்த செய்யது அதில் உசேன் ஷா-வுக்கும், கோழைத்தனமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட சுற்றுலா பயணி களுக்கும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆழ்ந்த அஞ்சலி செலுத்துகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது. இத்தாக்குதலில் இறந்த அனைவர் குடும்பத்திற்கும் உரிய இழப்பீடு வழங்குவ தோடு, பாரபட்சமற்ற, நேர்மையான விசார ணை நடத்தி உண்மையான குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடும் தண்டனை வழங்கப்படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். இந்த கொடுஞ்செயலுக்கு எதிராக காஷ்மீரில் உள்ள முஸ்லிம் மக்களும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத நம்பிக்கை கொண்ட மக்களும் தங்களது கண்ட னங்களை, எதிர்ப்புகளை, அனுதாபங்களை தெரிவித்து வருவது ஒன்றுபட்ட இந்தியாவின் உயர்ந்த நோக்கத்தை நிலை நிறுத்துகிறது. காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு உரிமையான சட்டப்பிரிவு 370ஐ அவசர அவசரமாக நீக்கியதோடு மட்டுமல்லாமல் மாநில அந்தஸ்தோடு இருந்த காஷ்மீரை இரண்டாக பிரித்து ஒன்றிய ஆட்சி பகுதியாக்கி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது மோடி - அமித்ஷா கூட்டம். இன்று நடைபெற்ற இந்த தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டிய ஒன்றிய பாஜக அரசு மற்றும் உள்துறை பெரும் குற்றத்தை இழைத்துள்ளது. அரசின் அத்தனை அதி காரங்களும் கையில் வைத்துள்ள ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல் அப்பாவி இந்தியர்களை படுகொலை செய்வதற்கு காரணமாக இருந்துள்ளது. இந்த கொடுஞ்செயலுக்கு ஒன்றிய பாஜக அரசு பொறுப்பேற்கவேண்டும். காஷ்மீர் மக்கள் ஒட்டுமொத்தமாக ஒன்றிணைந்து அந்த பகுதியில் படுகொலை களை தடுத்து நிறுத்துவதற்கும், பலரை காப்பாற்றுவதற்கும், அதன் தொடர்ச்சியாக பலருக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கு வதற்கும், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கும் தனது உயிரை துச்சம் என மதித்து செயல்பட்டவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது. ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கை சார்ந்த வர்களை எதிரிகளாக சித்தரித்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பலை இந்திய மக்கள் புறந்தள்ள வேண்டும் என்றும், அவர்களின் பொய்ப் பிரச்சாரங்களை முறியடிக்க வேண்டும் என்றும் மக்களை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. ஒன்றுபட்ட இந்தியாவை, வேற்றுமையில் ஒற்றுமையை நிலைநாட்டும் இந்திய பண்பாட்டை நிலைநிறுத்த அனைவரும் ஒன்றுபடுவோம் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வேண்டுகோள் விடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.