சாம்பியன்ஸ் டிராபி 2025 இந்திய அணி அறிவிப்பு
9ஆவது சீசன் சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தான் மண்ணில் தொடங்கு கிறது. பாதுகாப்பு பிரச்சனை காரணமாக இந்திய அணியின் ஆட்டங்கள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் விபரம் இறுதி செய்யப்பட்டுள்ளது. காயம் காரணமாக நட்சத்திர வீரர்கள் பும்ரா, ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணியின் வீரர்கள் விபரம்:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி.
ஆஸ்திரேலிய அணிக்குள் என்ன தான் நடக்கிறது? மிட்செல் ஸ்டார்க்கும் விலகல்
சாம்பியன்ஸ் டிராபி தொட ருக்கான ஆஸ்திரேலிய அணி கடந்த மாதமே அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை அணிக்குள் இடம்பிடித்த வீரர்கள் ஒவ்வொருவராக விலகி வரு கின்றனர். ஏற்கெனவே பேட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ், கேமரூன் கிரீன், ஸ்டோய்னிஸ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து விலகினர். தற்போது முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கும் தனிப்பட்ட காரணங்களுக்காக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். ஸ்டார்க்கை சேர்த்து மொத்தம் 5 முன்னணி வீரர்கள் விலகி இருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படு கிறது.
சமாளிக்க முடியுமா?
முன்னணி வீரர்கள் விலகல் ஆஸ்தி ரேலிய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றாலும், வீரர்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. காரணம் உள்நாட்டு போட்டி களில் விளையாடி வரும் 100க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் தேசிய அணியில் இடம்பிடிக்க வரிசையில் காத்திருக்கின்ற னர். அதனால் சாம்பியன்ஸ் டிராபியில் வீரர்கள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. அனுபவம் இல்லா இளம் வீரர்களை வைத்து ஆஸ்திரேலிய அணி சாம்பியன்ஸ் டிராபியை சமாளிக்கும்.
கத்தார் ஓபன் டென்னிஸ் : படோசா அதிர்ச்சி தோல்வி
ஏடிபி பிரிவின் முக்கிய சர்வதேச தொடர்களில் ஒன்றான கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோகாவில் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்று ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 9ஆவது இடத்தில் உள்ள ஸ்பெயினின் படோசா, தரவரிசையில் இல்லாத அமெரிக்காவின் அனிஸ்மோவாவை எதிர்கொண்டார். படோசா அதிரடிக்கு பெயர் பெற்றவர் என்பதால் இந்த ஆட்டத்தில் அவர் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தொடக்கம் முதலே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனிஸ்மோவா 6-4, 6-3 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று படோசாவிற்கு அதிர்ச்சி அளித்தார். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற அனிஸ்மோவா காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.