அமெரிக்காவில் கௌதம் அதானி மீதான குற்றச்சாட்டு என்பது அவருக்கும் அந்நாட்டு சட்டத்திற்கும் இடையிலான விவகாரம். உலகளவில் செல்வாக்கு மிக்க கார்ப்ப ரேட் பெரும் முதலாளியான அதானி, சிறந்த அமெரிக்க வழக்கறிஞர்களை நியமித்து இந்த சவாலை எதிர் கொள்வார் என்பதில் ஐயமில்லை. சிதைந்து வரும் தற்போதைய உலக ஒழுங்கில், சக்தி வாய்ந்த பெரும் பணக்கார தொழிலதிபர்களை சட்டம் கட்டுப்படுத்து வது மிகவும் அரிது.
ஆழமான அரசியல் தொடர்புகள்
அதானி வெறும் சாதாரண இந்திய தொழிலதிபர் அல்ல என்பதை மறுக்க முடியாது. தில்லியில் ஆளும் கட்சியின் அதிகார மையத்துடன் அவருக்குள்ள நெருக்கம் குறித்து இளம் அரசியல் நிருபர்கள் முதல் மூத்த அதிகாரிகள் வரை அனைவரும் அறிவர். மோடி யின் அரசியல் திட்டங்களுக்கும் அதானியின் வணிக சாம்ராஜ்யத்திற்கும் இடையே இருதரப்பு நன்மை தரும் உறவு வலுவாக உள்ளதாக பலரும் சுட்டிக்காட்டு கின்றனர். சமீபத்தில், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசை கவிழ்க்க பாஜக நடத்திய நடவடிக்கையில் அதானி பங்கேற்றார் என அஜித் பவார் வெளிப்படை யாகவே கூறினார். எனவே, குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்தத் தொழிலதிபரை பாஜக பாதுகாப்பதில் ஆச்சரி யம் இல்லை.
அரசியல் தாக்கங்களும் எதிர்விளைவுகளும்
அதானி மீதான அமெரிக்க கைது வாரண்ட் இந்திய உள்நாட்டு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற் படுத்தும். எதிர்க்கட்சிகள் இதை நரேந்திர மோடிக்கு எதி ரான ஆயுதமாக பயன்படுத்த முயல்வர். மறுபுறம், பிரத மரைப் பாதுகாக்க ஆளும் தரப்பின் வெறிக் கூச்சலை யும் மற்றும் அரசியல் காய் நகர்த்தலையும் குறைத்து மதிப்பிட முடியாது.
சர்வதேச உறவுகளில் தாக்கம்
பன்னுன் கொலை முயற்சி வழக்கில் ஏற்கனவே இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி விவா தங்களில் கோபமும் ஆவேசமும் வெளிப்பட்டாலும், சில கூலிப்படையினரின் திறமையின்மையால் இந்தியா விலை கொடுக்க வேண்டியிருக்கும் என வெளி யுறவு வல்லுநர்கள் கவலை கொண்டுள்ளனர். அதானி விவகாரத்தில் அதே பாதிப்பு, ஒருவேளை அதைவிட ஆழமான பாதிப்பு ஏற்படலாம். அதானியை பாஜகவால் கைவிட முடியாது. ஆளும் தரப்பின் அதிகார மையமும் நன்றி மறந்தவர்களாக இருக்க முடியாது. ‘நண்பர்களுக்கு’ ஆதரவு அளிப்பதன் முக்கி யத்துவம் அவர்களுக்கு தெரியும்.
என்ன நடக்கும்?
இந்திய வெளியுறவு சேவை மற்றும் பிற வெளிநாட்டு அமைப்புகள் அதானியின் நலனையும் அவரது வணிக சாம்ராஜ்யத்தையும் பாதுகாக்க பணியாற்றும் என் பதைச் சொல்ல வேண்டியதில்லை. கடந்த பத்தாண்டு களில், நமது தூதர்கள் ஆளும் தரப்பின் அரசியல் தேவைகளையும் விருப்பங்களையும் புரிந்துகொள் ளும் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தில்லியிலிருந்து உத்தரவுகள் தேவையில்லை. அதானியின் பாதுகாப்புக் கான நியாயங்களும் வாதங்களும் உருவாக்கப்படும். வரும் வாரங்கள் மற்றும் மாதங்கள் மிகுந்த அரசியல் விழிப்புணர்வு தேவைப்படும் காலம். ஒரு தனிநபரின் சட்டப் பிரச்சனைக்கும் நாட்டின் பொது நல னுக்கும் இடையே தெளிவான எல்லையை நமது அரசியல் தலைவர்கள் வகுக்க வேண்டும். கௌதம் அதானியை பாதுகாக்கும் மோடி அரசின் நகர்வுகள், நாட்டின் இறையாண்மையை பாதிக்கா மல் இருக்க இந்திய பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். எந்த தனிநபரும், குறிப்பாக ஒரு தனியார் தொழிலதிபர், நாட்டைவிட பெரியவர் அல்ல. இது அரசாட்சியின் மிகப் பழைமையான மற்றும் அடிப்ப டையான கோட்பாடு ஆகும்.
கட்டுரையாளர் : தி டிரிப்யூன் ஏட்டின் ஆசிரியர் தமிழ்ச் சுருக்கம்: ராஜூ பாய்