articles

img

‘பூமராங்’ ஆகும் சீனாவுக்கு எதிரான தாக்குதல் - பெலிக்ஸ் ஆப்த்

15 ஆண்டுகளுக்கு முன்பு, மேற் கத்திய பிராண்டுகளை சீன நுகர்வோர் முண்டியடித்து வாங்கி னார்கள்.  தற்போது அவர்கள் சீனப் பொ ருட்களையே விரும்புகின்றனர்.  இதன் காரணமாக, சீனாவில் தற்போது செயல் பட்டு வரும் ஸ்டார்பக்ஸ் குழுமத்தின் 7300 கடைகளின் விற்பனை மற்றும் லாபம் குறைந்து வருகிறது.  இதற்குக் காரணம் சீனர்கள் காபி குடிக்கும் வழக்கத்தைக் குறைத்துக் கொண்டதல்ல.  மாறாக, அவர்கள் சீன பிராண்டு காபியையே விரும்புகிறார்கள். குறைவான பணத் திற்கு அதிகமான அளவில் காபி கிடைக்கி றது என்பது ஒரு காரணமாகும். லக்கின் காபி எனும் சீன நிறுவனம் 2017இல் தான் நிறுவப்பட்டது.  அமெரிக்க சந்தையின் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சந்தைப் பங்கை இந்நிறுவனம் வேகமாகக் கைப்பற்றி வருகிறது.  சீனாவிற்கு வெளி யேயுள்ள சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் லக்கின் காபி கடைகள் எல்லா இடங்களி லும் நிறுவப்பட்டு, அவை ஸ்டார்பக்ஸு டுன் போட்டி போட்டு வருகின்றன.  சீனாவின் மிகப் பெரிய காபி சில்லரை வர்த்தக நிறு வனமாக தற்போது ஸ்டார்பக்ஸ் இல்லை, லக்கின் காபி நிறுவனமே உள்ளது என ப்ளூம்பர்க் தெரிவிக்கிறது

திவாலின் விளிம்பிலிருந்து...

நான்காண்டுகளுக்கு முன்பு லக்கின் காபி நிறுவனம் திவாலின் விளிம்பில் இருந்தது.  தானியங்கி கடைகள், குறை வான விலை மற்றும் உள்ளூர்வாசிகளின் ரசனைக்கேற்ற புதுமையான பானங்கள் ஆகியவை இந்நிறுவனத்தின் நிலை மையை மாற்றியுள்ளன.  ஸ்டார்பக்ஸ் அளிக்கும் அதே அளவிலான காபியை அதன் விலையில் மூன்றில் ஒரு பங்கு விலைக்கு லக்கின் காபி தருகிறது.   சீனாவில் காபி விற்பனையில் ஈடுபட்டு வரும் 4 பிரதான குழுமங்களின் காபி விலை ஒப்பீடு (ஆதாரம் – டிவிட்டர்.காம்) இவ்வாறு வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போட்டு வருவது லக்கின் காபி நிறுவனம் மட்டுமல்ல.  சீனாவில் 1000க்கும் மேற்பட்ட கடைகளைத் திறந்துள்ள மேன்னர் காபி மற்றொரு உதாரணமாகும்.  சொல்லப் போனால், லக்கின் காபி,  மேனர் காபி ஆகியன காபி விற்பனை என்கிற ஒரு துறையில் உள்ள இரண்டு உதாரணங்கள் மட்டுமேயாகும்.  இத்தகைய போக்கே சீன நாட்டில் வேறு பல துறைகளிலும் காணப்படுகிறது.  சீனாவின் மீதான வெறுப்பு மேற்கத்திய நாடுகளில் அதிகரித்து வரும் நிலையில், சீனப் பொருட்களையும், சேவைகளையும் விரும்பும் தேசபக்தர்களாக சீன நுகர் வோர் மாறி வருகின்றனர்.  2011ஆம் ஆண்டில் வெளிநாட்டு பிராண்டுகளை விட உள்ளூர் பிராண்டுகளையே விரும்பு வதாக வெறும் 15% சீனர்கள் மட்டுமே கூறினர்.  2020க்குள், 85% சீனர்கள் தாங்கள் சீனத் தயாரிப்புகளையே விரும்புவதாகக் கூறினர்.  சீனாவிற்கு எதிரான கொள்கைக ளும், சொல்லாடல்களும் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், சீனத் தயாரிப்புகளை விரும்புபவர்களின் விகிதம் இன்னும் கூடுதலாகவே இருக்கும். 

சீனாவைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட “தடைகள்” 

2016ஆம் ஆண்டு முதல் சீனாவிற்கு எதிராக ஆயிரக்கணக்கான தடைகளை யும், அபராதங்களையும் அமெரிக்கா விதித்துள்ளது.  70க்கும் மேற்பட்ட சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் வாஷிங்ட னால் குறி வைக்கப்பட்டன.  மேலும், சீனா வின் வடமேற்கு பகுதியிலுள்ள சின்சியாங் தன்னாட்சிப் பகுதி போன்றவற்றிலுமிருந்து அமெரிக்காவிற்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.  நூற்றுக்கணக்கான சீன அரசு அதிகாரிகள் அமெரிக்க நிறுவனங்களைச் சென்று பார்வையிடுவதற்கு அல்லது அவற்றை தொடர்பு கொள்வதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.  சீனாவின் மீதான இத்தகைய பொரு ளாதாரத் தாக்குதல்கள் தொடர்வதோடு மட்டுமின்றி, அமெரிக்காவின் கூட்டாளி கள் தங்களது சொந்த நலன்களுக்கு விரோதமாக வாஷிங்டன் தங்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப் பட்டு, இத்தகைய தாக்குதல்கள் இடை விடாது தீவிரப்படுத்தப்பட்டு வரு கின்றன.   சீனாவை அடக்குவதோடு மட்டு மின்றி, அது மீண்டும் எழுச்சி பெற அனுமதிப்பதற்குப் பதிலாக அதை ஏழை யாக வைத்திருக்கும் நோக்கத்துடன் ஒருதலைப்பட்சமான கட்டாய நட வடிக்கைகள் வாஷிங்டன் தலைமையால் செயல்படுத்தப்படுகின்றன. 

அபினி போர்களின் அதிர்ச்சி

இது சீனாவில் மிக மோசமான நினைவு களை மீண்டும் கொண்டு வருகிறது.  ஆங்கிலேயர்களின் தலைமையில் சீனா விற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அபினி போர்களின்போது  “அவமானத்தின் நூற்றாண்டு” துவங்கியது.   இத்தகைய அபினி போர்களுக்கு முன்பு, சீனப் பொரு ளாதாரம் வலுவானதாகவும், தன்னிறைவு பெற்றதாகவும் திகழ்ந்தது.  மேலும், ஐரோப் பிய நாடுகளுடன் வர்த்தக உபரியை கொண்டிருந்தது.   தங்கள் மீது மற்றொரு அவமானத்தின் நூற்றாண்டு மேற்கத்திய சக்திகளால் திணிக்கப்படுவதை என்ன விலை கொடுத்தேனும் தடுத்திட சீனர்கள் விரும்புகின்றனர். 

வலுப்பெற்று வரும் ஹுவாவே நிறுவனம்

மேற்கத்திய நாடுகள் அழிக்கப்பட வேண்டிய நிறுவனங்களாக கருதிய நிறுவனங்களில் ஹுவாவே நிறுவனமும் ஒன்றாகும்.  உலகின் மிகப் பெரிய 50  தொலைத்தொடர்பு நிறுவனங்களில் 80% நிறுவனங்களைத் தனது வாடிக்கையா ளர்களாகப் பெற்று, தொலைத்தொடர்பு கருவிகளை உற்பத்தி செய்யும் உலகின் முன்னணி நிறுவனமாக இது திகழ்ந்தது.  170க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்நிறு வனம் தனது தயாரிப்புகளை விற்பனை செய்தது.  அமெரிக்க நிறுவனங்களுக்கு கடுமை யான போட்டியை அளித்து வந்த இந்நிறு வனத்தை சந்தையிலிருந்து அகற்றிட, இந்நிறுவனத்திற்கு வெளிநாட்டு மைக்ரோ சிப்புகள் கிடைப்பதும், மேற்கத்திய மற்றும் இதர சந்தைகளில் இது நுழைவதும் தடுக்கப்படுவதை அமெரிக்க அரசு உறுதி செய்தது.  இதன் விளைவாக, கணினி மற்றும் ஸ்மார்ட்போன் துறையில் முன் னணி நிறுவனமாகத் திகழ்ந்த தனது துணை நிறுவனமான ‘ஹானர்’ நிறுவ னத்தை 2020ஆம் ஆண்டில் அது விற்க வேண்டியிருந்தது.     ஸ்மார்ட்போன் உற்பத்திக்கு அவசிய மான மைக்ரோசிப்ஸ் போன்ற முக்கிய மான உதிரிபாகங்கள் கிடைப்பது மறுக்கப் பட்ட நிலையில், செல்போன் வணிகத்தி லிருந்து வெளியேறி, இதுபோன்ற கட்டுப் பாடுகளை எதிர்கொள்ளாத, பிரபல மற்ற சீன நிறுவனத்திற்கு தனது துணைநிறு வனத்தை விற்பனை செய்திட ஹுவாவே  நிறுவனம் முடிவெடுத்தது.   இவ்வாறு செய்வதன் மூலம் தனது வெற்றிகரமான தயாரிப்புகள் தொடர்ந்து சந்தையில் இருப்பதை உறுதி செய்ய இயலும் என அது கருதியது.  ஹானர் நிறுவனத்தின் சப்ளையர்கள், பங்குதாரர்கள் மற்றும் ஊழி யர்கள் ஆகியோரைப் பாதுகாப்பதுடன், இந்த ‘பிராண்ட்’ சந்தையில் தனது இருப்பை தக்கவைத்துக் கொள்வதோடு, தொடர்ந்து புதியவற்றை கண்டுபிடிப்பதை உறுதி செய்யவும் இத்தகைய நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டது.  2020ஆம் ஆண்டில் ஹானர் நிறுவனத்துடனான தனது உறவை ஹுவாவே முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்டது.  ஹுவாவே நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் வியக்கத்தக்க அளவிற்கு சரிவடைந்தது.  ஹுவாவே நிறுவனத்தை கிட்டத்தட்ட திவால் நிலைக்கு தள்ள வாஷிங்டனால் முடிந்தது.  எனினும், அமெரிக்கா அழித்தொழிக்க விரும்பிய இதர சீன நிறுவனங்களைப் போன்றே ஹுவாவே நிறுவனம் தன்னை மீண்டும் உருவாக்கிக் கொண்டு, சீனாவின் அதிக உற்பத்தித் திறன் கொண்ட உயர் தொழில்நுட்ப நிறுவனமாகத் தன்னை உயிர்ப்பித்துக் கொண்டது.  தானியங்கி துறைமுகம், மின்சார வாகனங்கள் போன்ற புதிய துறைகளில் இந்நிறுவனம் விரிவடைந்து வருகிறது.      சீன உதிரிபாகங்களை மட்டுமே பயன் படுத்தி மடிக்கணினிகள் மற்றும் செல் போன்களை மீண்டும் தயாரித்து வரும் ஹுவாவே நிறுவனம், தற்போது சீனாவில் அதிக லாபம் ஈட்டி வந்த ஆப்பிள் நிறுவ னத்திடமிருந்து குறிப்பிடத்தக்க சந்தைப்  பங்கை கைப்பற்றி வருகிறது.   ஆப்பிள் நிறு வனம் அதன் மிகப் பெரிய வெளிநாட்டுச் சந்தையில் ஹுவாவே நிறுவனத்தால் தோற்கடிக்கப்பட்டது என்பதை பிரதான  மேற்கத்திய ஊடகங்கள் தெரிவிக்காத போது, இந்திய வர்த்தக மற்றும் நிதி செய்தி சேவையான இடி நவ் “ET NOW” செய்தியாக வெளியிட்டது.  இன்று ஹுவாவே நிறுவனத்தின் வருவாயில் 70% சீனாவிலிருந்து ஈட்டப்படுகிறது. சிறந்த பொருட்களையும் சேவைகளை யும் தயாரிப்பதோடு மட்டுமின்றி, சீனா வின் தேசிய சாம்பியனாகவும் ஹுவாவே தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.  ஹுவாவே மற்றும் எண்ணற்ற பிற சீன நிறுவனங்களின் மீது வெளிநாட்டு சக்தி கள் தொடுக்கும் தாக்குதலை மிகுந்த கவலையோடு கவனித்து வரும் சீன நுகர்வோர், சமீபகாலத்தில் வெளிநாட்டு சக்திகளால் பல நூற்றாண்டுகளுக்கு சீனா  அனுபவித்த அவமானங்களை நினைவு கூர்ந்து இத்தகைய நிறுவனங்களின் பக்கம் நின்றனர்.  

அந்நிய முதலீட்டின் வீழ்ச்சியும், வெளியேற்றமும்

சீனாவிலிருந்து முதலீட்டாளர்கள் வெளியேறுவது குறித்து உலகம் முழு வதும் தலைப்புச் செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளன.  தாங்கள் வாஷிங்டனால் தண்டிக்கப்படுவோம் என்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அச்சம் கொண்டுள்ளது இதற்கு ஒரு காரணமாகும்.   சீனாவில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் டெஸ்லா கார்க ளுக்கு கூட தற்போது அமெரிக்காவில் இறக் குமதி வரி அதிகளவில் விதிக்கப்படுகிறது.  வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சீனாவில் உற்பத்தி செய்யும் இதர பொருட்களும் கூட குறிவைக்கப்படுகின்றன.   அந்நிய முதலீடு திரும்பப் பெறப்படுவ தால் சீனாவை அழித்தொழித்திட இயலாது. அந்நிய முதலீடும், வர்த்தகமும் அமெரிக் காவால் சீனாவைத் தாக்குவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதி ரானதொரு நடவடிக்கையே இதுவாகும்.  சீனாவில் ஆண்டுதோறும் பல லட்சக்க ணக்கான கார்களை விற்பனை செய்து,  கோடிக்கணக்கான டாலர்களை லாபமாக  ஈட்டிய அமெரிக்க கார் உற்பத்தியாளர்கள், தற்போது சீன சந்தையில் போட்டி போட இயலாது, தங்களது முதலீட்டை திரும்பப் பெற்று வருகின்றனர்.  

வெளிநாடுகளில்  சீன முதலீடு அதிகரிப்பு

சீனாவிலிருந்து வெளியேறும் அந்நிய முதலீடுகள் இரண்டு விஷயங்களை பிரதிபலிக்கின்றன.   சீன விரோத அமெ ரிக்கக் கொள்கைகள் அந்நிய முதலீட்டிற்கு விடுக்கும் அச்சுறுத்தலும், சீனச் சந்தை யில் அந்நிய முதலீட்டாளர்கள் போட்டி போட முடியாது திணறுவதும் அவ்விரண்டு விஷயங்களாகும்.  சீன நாட்டு சந்தை யில் தங்களது சந்தைப் பங்கை தக்க வைத்துக் கொள்ளத் திணறும் அதே போட்டி யாளர்களிடமிருந்து அவர்களது வெளி நாட்டுச் சந்தையையும் சீன நிறுவனங்கள் பெருமளவில் கைப்பற்றி வருகின்றன.  இது வெளிநாடுகளில் சீன முதலீடு அதி கரித்து வருவதை பிரதிபலிக்கிறது.  கணிசமான சேமிப்புகளைக் கொண் டுள்ள நடுத்தர வர்க்கத்தினர் உலகிலேயே மிக அதிக அளவில் சீனாவில் உள்ள னர்.  இவர்களது எண்ணிக்கை அங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  அதே  நேரத்தில், மேற்கத்திய நாடுகளில் நடுத்தர வர்க்கம் சுருங்கிக் கொண்டிருப்பதோடு, பெருமளவில் கடனாளியாக மாறி வருகி றது.  சீன நடுத்தர வர்க்கத்தினரின் தேவை களைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்கள் தங்களை விரிவாக்கம் செய்து கொள்வ தற்கான வாய்ப்புகள் இன்னமும் அங்கு நிறைய உள்ளன.    இருந்தபோதும், ஸ்டார் பக்ஸ் நிறுவனம் வெகுவிரைவில் சீனாவி லிருந்து வெளியேற நேர்ந்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.   உலகின் மிகப் பெரிதான சீன நாட்டு  சந்தையை எஞ்சியிருக்கும் நிறுவனங்கள் இழந்தாலும் கூட அதனால் அமெரிக்கா விற்கு பெரிய அளவு பாதிப்பு இருக்காது. ஏனெனில், அமெரிக்கா ஏற்கனவே சீனாவுடன் பெரிய வர்த்தகப் பற்றாக்குறை யைக் கொண்டுள்ளது.  மேலும், ஜப்பான், தென்கொரியா மற்றும்  ஐரோப்பிய ஒன்றியத்தைப் போன்று அமெரிக்கா சீனாவின் வலுவான ஏற்றுமதியாளராக இல்லை.   ஆனால், சீனாவிற்கு எதிரான வாஷிங்ட னின் கடுமையான நடவடிக்கைகளை அமெரிக்காவின் நட்பு நாடுகள் ஆதரிக்கு மேயானால், அது அவர்களுக்கு பெருமள விலான பொருளாதாரப் பின்னடைவை ஏற் படுத்தும்.  அதற்கு மேலும் சீன வாடிக்கையா ளர்கள் அவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள மாட்டார்கள்.  இது அந்த நட்புநாடுகளின் மக்களது வளர்ச்சியை பாதிக்கும்.  சீனாவின் ஒட்டுமொத்த பொரு ளாதாரத்தின் கணிசமான பங்காக அதி கரித்து வரும் அதன் உள்நாட்டுப் பொரு ளாதாரம் இருக்கிறது என்ற சாதகமான சூழல் சீனாவிற்கு இருக்கிறது.   இது தொடர்கிறபோது, ஒபியப் போர்க ளுக்கு முன்பு இருந்ததைப் போன்று சீனப்  பொருளாதாரம் தன்னிறைவு பெற்றதாக வும், வலுவானதாகவும் ஆகிடும். 

நன்றி :  கவர்ட்ஆக்சன் இதழ் (29/10/2024),
தமிழில் : எம்.கிரிஜா