articles

img

பிற்போக்குச் சக்திகளுக்கு எதிராக மாற்று அணியைக் கட்டியெழுப்புவோம்!

பிற்போக்குச் சக்திகளுக்கு எதிராக மாற்று அணியைக் கட்டியெழுப்புவோம்!

சிபிஎம் அகில இந்திய மாநாட்டில் மாணிக் சர்க்கார் பேச்சு

ல இந்திய மாநாடு, பிற்போக்கு சக்திகளை முறி யடிப்பதற்காகவும், ஓர் இடது ஜனநாயக மாற்றைக் கட்டி எழுப்பக்கூடிய விதத்திலும் நடைபெற்று வரும் போராட்டங்களில், ஒரு மைல் கல்லாக அமைந்திடட்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாட்டின் தலைவருமான மாணிக் சர்க்கார் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் புதன்கிழமை (ஏப்.2) காலை தொடங்கியது. மாநாட்டில்  தலைமையு ரை ஆற்றிய மாணிக் சர்க்கார் மேலும் கூறியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டிற்காக மதுரையில் நாம் சங்கமித்திருக்கிறோம். மதுரை வளமான வர லாற்றைப் பெற்றுள்ள ஒரு புராதன நகரமாகவும், தமிழ்க் கலாச்சாரத் தளமாகவும் விளங்குகிறது. மேலும் மதுரை மாநகரமானது கம்யூனிஸ்ட் இயக் கத்தின் உயரிய பாரம்பரியத்தையும், உழைக்கும் வர்க்க இயக்கத்தின் மையமாகவும் விளங்கும் ஒரு மாநகரமுமாகும். எண்ணற்ற தலைவர்கள் இந்த நகரத்தில் மக்கள் பணியாற்றி கம்யூனிஸ்ட் இயக் கத்தின் மாபெரும் தலைவர்களாக உயர்ந்திருக்கி றார்கள். பி. ராமமூர்த்தி, என். சங்கரய்யா போன்ற  இரு பிரபலமான தலைவர்களும் இங்கிருந்து வந்த வர்கள் தான்.   இம்மாநாட்டின் துவக்க விழா நிகழ்வுகளில் கலந்து கொள்ள வந்திருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து. ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, புரட்சி கர சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜி. தேவராஜன் ஆகியோரையும் வரவேற்கிறேன். இவர்களின் பங்கேற்பு இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான அடையாளமாகும். 1972ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற கட்சியின் 9-ஆவது அகில இந்திய மாநாட்டில் ஒரு பிரதி நிதியாகக் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. இந்த சந்தர்ப்பத்தில், மதுரை மற்றும் தமிழ்நாட்டின் பல லட்சக்கணக்கான கட்சி உறுப்பி னர்கள், ஆதரவாளர்கள் மற்றும் இடதுசாரி அனுதாபிக ளுக்கு எனது அன்பான புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காத்திருக்கும்  கொந்தளிப்புகள் டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதி யாகப் பொறுப்பேற்ற பிறகு அமெரிக்க ஏகாதிபத்தியம் மேலும் கொடூரமான ஒன்றாக மாறி வரும் நேரத்தில், நம் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு நடைபெறுகிறது. வரும் நாட்களில் கொந்தளிப்பான நிகழ்ச்சிப் போக்குகள் ஏற்படும். எனவே, நாம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரச்சாரங்களையும், போராட்டங்களையும் முடுக்கிவிடக்கூடிய விதத்தில், தயாராக வேண்டும். சீர்குலைக்கப்பட்ட  கூட்டாட்சித் தத்துவம் மோடி அரசாங்கத்தின் தலைமையின் கீழ் பதினோரு ஆண்டுகள் கடந்து விட்டன. இந்தக் கால கட்டத்தில்  இந்துத்துவா - எதேச்சதிகார ஆட்சி ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. பெரிய கார்ப்ப ரேட்டுகளுக்கும், ஆர்எஸ்எஸ்/பாஜக-விற்கும் இடை யிலான பிணைப்பு இந்த அளவிற்கு வலுவாகவும், வெளிப்படையாகவும் இப்போது இருக்கக்கூடிய அளவிற்கு இதற்குமுன் எப்போதும் இருந்ததில்லை. இதன் விளைவாக ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சித் தத்துவம் சீர்குலைந்துள்ளன. துன்புறுத்தப்படும்  மதச் சிறுபான்மை மக்கள் நாட்டிலுள்ள சாமானிய மக்களில் பெரும்பாலா னவர்கள் வேலையின்மையாலும், நாளும் உயரும் விலைவாசியாலும், விவசாய நெருக்கடியாலும், ஊழ லாலும் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மதச் சிறுபான்மையினர் திட்டமிட்டு துன்புறுத் தப்பட்டு இரண்டாம் தரக் குடிமக்களாகக் குறைக்கப் பட்டிருக்கிறார்கள். சாம்சங் தொழிலாளர்கள் பாராட்டுக்கு உரியவர்கள் இந்துத்துவா - கார்ப்பரேட் ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன. உழைக்கும் மக்க ளின் ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் உரிமைகளைப் பாதுகாத்திடுவதற்காகப் போராட்டப் பாதையில் அணிவகுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக காஞ்சிபுரத்தில், ‘சாம்சங் இந்தியா’ தொழிற் சாலையைச் சேர்ந்த தொழிலாளர்கள் அனைத்து அடக்குமுறை வடிவங்களையும் தகர்த்தெறிந்து, 38 நாட்களுக்கும் மேலாகப் போராடி வெற்றி பெற்றுள் ளனர். அந்த தோழர்களுக்கு என் செவ்வணக்கங்க ளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநாடு விவாதிக்க  உள்ள விஷயங்கள் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு ஆர்எஸ்எஸ்/பாஜக-விற்கு எதிராகப் போராட, அதனைத் தனிமைப்படுத்திட மற்றும் அதனை முறியடிக்கக்கூடிய விதத்தில் அனைத்து மதச் சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளையும் ஒன்று படுத்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், உழைக்கும் மக்கள், விவசாயிகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகள் மற்றும் தலித்துகள், பழங்குடியினர், பெண்கள் மற்றும் சிறுபான்மையி னரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், விவாதித்து, வழிகாட்டவிருக்கிறது. சுயேச்சையான  பலத்தை உயர்த்துவோம் கட்சியின் அகில இந்திய மாநாடு, கட்சியின் அர சியல், தத்துவார்த்த மற்றும் ஸ்தாபன நடவடிக்கை களை விரிவுபடுத்துவன் மூலம் கட்சியின் சுயேச்சை யான பலத்தை எப்படி உயர்த்துவது என்பது தொடர்பாக தன்னுடைய நிகழ்ச்சி நிரலைத் தயா ரித்துள்ளது. இந்துத்துவா மற்றும் மதவெறி சக்திக ளுக்கு எதிராக பன்முகப் போராட்டத்தை முன்னெ டுத்துச் செல்வது தொடர்பான விவாதங்கள் மாநாட்டின் மையக் கருத்தாக இருந்திடும். வலுவான கட்சி  அமைப்பு தேவை கோடிக்கணக்கான மக்களையும் இளைஞர்களை யும் அணிதிரட்டும் அரசியல் பாதையை அமல் படுத்திட ஒரு வலுவான கட்சி ஸ்தாபனம் தேவையா கும். கட்சி, பணியிடங்களிலும், குடியிருப்புப் பகுதிக ளிலும் தன் ஸ்தாபனங்களைக் கொண்டிருக்க வேண்டும். மக்களுடன் இணைந்து நின்று, உழைக் கும் மக்களின் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லக்கூடிய விதத்தில் நம் ஸ்தாபனம் இருந்திட வேண்டும். கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு, பிற்போக்குச் சக்திகளை முறியடிப்பதற்காகவும், ஓர் இடது ஜனநாயக மாற்றைக் கட்டி எழுப்பக்கூடிய விதத்திலும் நடைபெற்று வரும் போராட்டங்களில், ஒரு மைல் கல்லாக அமைந்திடட்டும். இவ்வாறு மாணிக் சர்க்கார் பேசினார். (ந.நி.)