மக்களைப் பிளவுபடுத்தி அவர்களுக்கி டையே துவேஷத்தை மூட்டுகிற இந்துத் துவத் திட்டத்துடன் சேர்த்து பொருளாதாரத் தாராளமயத்தையும் மோடி அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்துச் செல்கிறது. இரண்டாவது மோடி அர சாங்கம் அனைத்துத் துறைகளிலும் பெருமளவில் தனி யார்மயம் ஆக்கியுள்ளது. நல்ல லாபம் தருகிற, பயனுள்ள விதத்தில் செயல்படுகிற பொதுத்துறைக் கம் பெனிகளை துச்சமான விலைக்கு விற்கிற விஷயத்தில் மோடி அரசு முந்தைய காங்கிரஸ் அரசுகளை நீண்ட தூரம் பின்தள்ளிவிட்டது.
அரசாங்கத்தின் சொத்துக்களை விற்றுத் தொலைக் கும் கொள்கைக்கு எதிராகத் தொழிலாளர்களின், இடதுசாரிக் கட்சிகளின் எதிர்ப்பு வலுப்பெற்றதற்கி டையே புதிய திட்டங்களுடன் ஒன்றிய அரசு களம் இறங்கி யுள்ளது. அதற்குப் பெயர் ‘தேசிய பணமாக்கல் திட்டம்’ என்பதாகும். இந்தப் பெயரிலிருந்து சாதாரண மக்கள் என்ன புரிந்து கொள்வார்கள்? பொதுச்சொத்துக்கள் கைமாறுவதற்குக் கண்டுபிடித்த சொற்கள்தான் இவை. இதில் தனியார்மயமோ, விற்பனையோ, பங்குகள் கைமாற்றமோ எதுவும் இல்லை. தேசத்தின் நலனுக்குப் பணம் திரட்டுவதற்காகக் கண்டறிந்த மார்க்கம் இது என்று தோன்றலாம். ஆனால், பச்சையாகச் சொல்வ தென்றால், இது உண்மையில் சொத்துக்கள் விற்பனை யாகும். இதன் மூலமாக நான்கு ஆண்டுகளில் ஆறு லட்சம் கோடி ரூபாய் திரட்டப்படும் என்று ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
சாவி என்னிடம் இருக்கிறது...
மக்களின் வரிப்பணத்தின் மூலம் அரசு கட்டமைத்த அத்தனை சொத்துக்களையும் குறைந்த விலைக்குக் கைமாற்றம் செய்யவிருக்கிறார்கள். தேசிய நெடுஞ் சாலைகள் 26,700 கிலோ மீட்டர், ரயில்வே நிலை யங்கள் 400, பாசஞ்சர் ரயில்கள் 150, மலையோர ரயில்வே 4, மின்சார லைன்கள் 42,300 சர்க்யூட் கிலோ மீட்டர், 5000 மெகாவாட் சக்திகொண்ட நீர்-அனல்-காற்றாலை மின்சார நிலையங்கள், எரிவாயு பைப் லைன் 8000 கிலோ மீட்டர், ஐஓசியின் மற்றும் எச்பிசிஎல்-லின் பைப் லைன் 4000 கிலோ மீட்டர், விமான நிலையங்கள் 21, துறைமுகங்கள் 31, நிலக்கரி, கனிமத் திட்டங்கள் 160, அருங்காட்சியகங்கள் 2...இவ்வாறு செல்கிறது பட்டியல். இது சொத்துக்கள் விற்பனையோ, தனியார்மயமோ அல்ல என்று நிர்மலா சீதாராமனும் நிதி ஆயோக்கும் வாதிக்கிறார்கள். காரணம், இந்தச் சொத்துக்களின் உரி மையெல்லாம் அரசாங்கத்திடமே இருக்குமாம். நம்பூதி ரியின் பணப்பெட்டியைத் திருடன் கொண்டு போன கதை ஒன்று உண்டு. கவலையும் அனுதாபமும் தெரி வித்த ஒருவரிடம் நம்பூதிரி சொன்னாராம், “பெட்டியை அவன் கொண்டு போகட்டும், சாவி என்னிடம் அல்லவா இருக்கு” என்று! சொத்துரிமை சம்பந்தமாக ஒன்றிய அரசு சொல்லும் கதை இதுபோல்தான் இருக்கிறது.
அடிப்படை வசதிகள் வளர்ச்சித் துறையை கார்ப்ப ரேட் பீமன்மார்களுக்கு உதவுவதற்காக விசேடமாகத் திட்டமிட்டு உருவாக்கிய திட்டம்தான் என்எம்பி (நேஷ னல் மானிட்டைஸேஷன் பைப்லைன்) என்பது. என்எம்பி-யின் சதிக்குழிகளை அல்லது அரசு மறைத்து வைக்கிற உண்மைகளைப் பார்க்க வேண்டும். அர சாங்கத்தின் கையில் சும்மா கிடக்கிற சொத்துக்களின் மதிப்பைக் கட்டவிழ்த்து விடுவதுதான் என்எம்பி என்று சொல்லிக் கொள்வது முதலாவது விஷயம். இந்தச் சொத்துக்கள் எதுவும் சும்மா கிடக்கவில்லை. தேசிய நெடுஞ்சாலைகளும், விமான நிலையங்களும், துறை முகங்களும், மின்சார விநியோகமும் எரிவாயுவும் நல்ல நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. நிச்ச யிக்கப்பட்ட காலஅளவு முடியும்போது சொத்துக்கள் அரசுக்கு மீண்டும் திரும்பி வந்துவிடும் என்ற வாதத்திற்கு அடிப்படையில்லை. சொத்துக்கள் மீண்டும் மீண்டும் ஏலத்திற்குப் போகும். உடைமையாளர் என்று சொல்லப்படுகிற அரசுக்கு சொத்துக்களை இயக்குவதில் எந்தப் பங்கும் இருக்காது.
தனியார்மய ஆபத்துகள்
இரண்டாவது விஷயம்: தனியார்துறை ஏற்றெ டுப்பதிலிருந்து அவர்கள் எதிர்பாக்கிற வருமானம் கிடைக்கவில்லையென்றால் அரசு அந்த இடை வெளியை நிரப்ப வேண்டிவரும். அரசுக்கு உள்ள வருமானமும் நஷ்டமாகும். சாலையோ, விமான நிலை யமோ, துறைமுகமோ ஏற்றெடுக்கிற கம்பெனி அவர்க ளுக்கு பெருமளவு லாபம் கிடைக்கிற விதமாக யூஸர்ஃபீ (பயனாளர் கட்டணம்) சுமத்தப்படும். இப்போது உள்ள பொதுநலன் என்பது இல்லாமற் போகும். சுருக்கமாகச் சொல்வதென்றால், என்எம்பி-யின் பெரும் ஆபத்து வரப்போகிறது. மின்சாரம், தொலைபேசி, எரிவாயு, பெட்ரோலியம் முதலிய அனைத்துத் துறைகளிலும் பயனாளர்களாகிய மக்களுக்குப் பெருத்த அடி கிடைக்கப்போகிறது. நிதி ஆயோக் அறிக்கை தயா ரித்ததும் நிதியமைச்சர் அறிவிப்பு செய்ததும் இந்த ஆபத்தை மறைப்பதற்காகத்தான்.
மற்றொரு ஆபத்து என்னவென்றால், அடிப்படை வசதித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான செலவு களைக் குறைப்பதற்குத் தனியார் கம்பெனிகள் முன் வரும் என்பதுதான். அவர்களுக்கு லாபம் அதிகரிக்க வேண்டும். முதலாவது செலவுக் குறைப்பு என்பது தொழிலாளர்களுக்கான செலவாக இருக்கும். சம்ப ளத்தைக் குறைப்பது இதன் ஒரு பகுதியாக இருக்கும். பொதுத்துறையில் நியாயமான சம்பளம் வழங்குவது தொழிற் சங்கம் உள்ள தனியார்துறையில் செல் வாக்குச் செலுத்துகிறது. இந்த நிலையை அரசாங்கம் இல்லாமல் செய்கிறது. தனியார் கம்பெனிகள் வழங்கு கிற சேவையின் தரத்தை உறுதிசெய்வதிலும் அரசாங் கத்தால் முடியவில்லை என்கிற பிரச்சனை வேறு உள்ளது. இதனால் நஷ்டம் அரசுக்கும் மக்களுக் கும்தான். லாபம் என்பது தனியார் கம்பெனிகளுக்கு- இதுதான் என்எம்பி-யின் அடையாளம். பொதுச்சொத்துக்களை ஏலம் விடுவதற்கு முன்பே-அதிலிருந்து கிடைக்கிற வருமானம் எவ்வளவு என்பதை அரசு தெளிவாக்கியுள்ளது-அது ரூ.6 லட்சம் கோடி. இந்தத் தொகை ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஏலத்திற்குப் போகும்போது என்ன நேர்ந்திடும் என்பது சாதாரண விவரம் உள்ளவர்களுக்கும் புரியும். கிடைக் கிற வருமானம் அதிகபட்சம் குறைக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளில் சுற்றுச்சூழல் வசதி வளர்ச்சித் துறை யில் 111 (நூற்றுப் பதினொன்று) லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று அரசு கூறுகிறது. நான்கு ஆண்டுகளில் சொத்துக்கள் விற்பனையிலிருந்து கிடைப்பதோ வெறும் 6 லட்சம் கோடி ரூபாய். செல வழிக்கப்படுமென்று சொன்னதில் ஐந்து சதவீதம்கூட அது வராது.
கைநனையாமல் மீன்பிடித்தல்
தனியார்துறையில் பொதுப்பயன்பாட்டுத் திட்டம் வரும்போது என்ன நிகழ்கிறது என்பதன் கசப்பான அனுபவங்கள் மக்கள்முன் உள்ளன. தில்லியில் காங்கி ரஸ் ஆட்சிக் காலத்தில் மின்சார விநியோகம் தனியார் துறைக்குக் கைமாறியதால் ஏற்பட்ட கெடுதல்களை மக்கள் அனுபவித்திருக்கிறார்கள். மின்சாரக் கட்டணம் தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்தது. ஆம்ஆத்மி அரசு வந்ததற்குப் பிறகு மானியத்தின் மூலம் கட்ட ணம் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த மானியமும் மக்க ளின் வரிப்பணம்தான். தனியார் துறையிலிருந்து மூல தனமும் செயல்திறனும் கொண்டுவந்து பொதுத்துறை முதலீட்டின் மதிப்பைப் பயன்படுத்தலாம் என்பதே நிதி ஆயோக்கின் கருத்து. பொதுத்துறையில் செயல்திறன் இல்லை என்ற முடிவின் அடிப்படையில்தான் இப்படிக் கணக்கு போடப்பட்டுள்ளது. ஆனால் உண்மை அது அல்ல. 2018-19 ஆண்டு கணக்குப்படி 28 சதவீதப் பொதுத்துறைக் கம்பெனிகள் நஷ்டத்தில் இருந்தன. ஆனால், இதே கால அளவில் 51 சதவீத பெரிய தனியார் கம்பெனிகள் நஷ்டத்தில் இருந்தன. என்எம்பி மூலம் (நேஷனல் மானிட்டைஸேஷன் பைப்லைன் மூலம்) செயல்திறன் வரும் என்பது வெறும் சந்தர்ப்பவாத மாகும். ஒன்றிய அரசின் உறவுக்காரர்களாகிய கார்ப்ப ரேட் முதலாளிகளுக்கு கை நனையாமலேயே மீன் பிடிக்கிற வசதி செய்து தருகிறார்கள்.
சமூக நீதி மறுக்கப்படும்
பொதுத்துறை இல்லாமற் போகும்போது சம்பவிக்க விருக்கிற மற்றொரு ஆபத்து சமூக நீதி மறுப்பாகும். பொதுத்துறையில் வேலைக்கு இடஒதுக்கீடு உண்டு. தனியார்துறைக்கு இது பொருந்தாது என்று அரசே சொல்லிவிட்டது. பொதுத்துறையில் வேலைக்கு எட்டு லட்சத்திற்கு மேற்பட்ட காலி இடங்கள் உள்ளன. இவற்றிலெல்லாம் ஆட்களை நியமிக்காமல் வெளியே ஒப்பந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது ஒன்றிய அரசு. பொருளாதார மந்தத்தினால் விவசாய-தொழில் துறைகளில் பெரும் நெருக்கடி நிலவுகிறது. வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டன. வேலையில்லாத் திண்டாட்டம் மிக அதிக அளவில் உள்ளது. இதற்கி டையேதான் அனைத்துத் துறைகளிலும் தனியார் மயம் நுழைந்துள்ளது. வங்கி, இன்சூரன்ஸ் முதலான நிதித்துறைகளும் தேசநலன் மறுக்கப்பட்டு தனியார்மயமாகின்றன. தேசத்திற்குத் திட்டவட்டமான பங்களிப்பு வழங்கு கிற எல்ஐசி-யின் பங்குகளையும் விற்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு எல்ஐசி-க்கு 1.84 லட்சம் கோடி ரூபாய் பிரீமியத்தின் மூலம் வருமானம் கிடைத்துள்ளது. சாதாரண மக்களின் நம்பிக்கையைப் பெற்று வளர்ந்து வளம்பெற்ற இந்த நிறுவனத்திற்கு இப்போது 33 லட்சம் கோடி ரூபாய் சொத்து உண்டு.
பொதுத்துறையை விற்காமல் வளர்ச்சிக்கு பணம் திரட்ட ஒன்றிய அரசாங்கத்தால் முடியவில்லையா என்பதுதான் முக்கியமான கேள்வி. 2019 -– 20ல் ஜிடிபி-யின் 17.4 சதவீதம் வரியாக வசூலிக்கப்பட்டதாகும். இந்த வருமானத்தை அதிகரித்தாலே வளர்ச்சிக்கும் மக்கள் நலத்திட்டத்திற்கும் தேவையான பணத்தை கண்டறியலாம். இதற்காக கார்ப்பரேட் வரியை அதி கரிப்பதற்குப் பதிலாக அதைக் குறைத்துக் கொண்டு வருகிறார்கள்.
பொதுத்துறையைப் பாதுகாக்கும் கேரள அரசு
பொதுத்துறையைப் பாதுகாக்கும் விஷயத்தில் வெற்றிகரமான மாற்று முன்மாதிரியை கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு முன்வைத்துள்ளது. ஒரு பொ துத்துறை நிறுவனத்தையும் தனியார்மயம் ஆக்குவ தில்லை என்று முதலாவது பினராயி விஜயன் அரசு அறிவித்தது. நஷ்டத்தில் இயங்குகிற பல நிறுவனங்க ளை லாபத்தில் இயங்கச் செய்தது; மற்ற நிறுவனங்க ளின் நஷ்டம் குறைக்கப்பட்டது. புதிய திட்டங்கள் அறி விக்கப்பட்டன. இதே கொள்கையைத்தான் இரண்டா வது பினராயி விஜயன் அரசு முன்னெடுத்துச் செல்கி றது. கேரளத்தில் பொதுத்துறையில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. அதுமட்டுமல்ல, ஒன்றிய அரசு விற்பதற்காக வைத்திருந்த பல கம்பெனி களையும் மாநில அரசு ஏற்றெடுத்தது. காசர்கோடு பிஎச்இஎல், இஎம்எல் கம்பெனிகளைப் பூட்டி தனியார் மயம் ஆக்குவதற்கு ஒன்றிய அரசு முயன்றபோது அவற்றை மாநில அரசு ஏற்றெடுத்து பொதுத்துறையில் நிலைநிறுத்தியது. தொழிலாளர்களுக்கு மீதி 14 கோடி ரூபாயும் வழங்கியது. பாலக்காடு இன்ஸ்ட்ரூமென் டேஷன் லிமிடெட் கம்பெனியை ஏற்றெடுக்கவும் உடன் பாடு ஆகியுள்ளது. மாநில அரசு ஏற்றெடுப்பதைக்கூடத் தடுக்கிற கொள்கையைத்தான் ஒன்றிய அரசு தொடர் கிறது. திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குரூப் வசம் ஒப்படைக்கத் தீர்மானித்தபோது அந்த விமான நிலையத்தை ஏற்றெடுப்பதற்கு மாநில அரசு தயாராக இருந்தது. ஆனால் ஒன்றிய அரசு அதை அனுமதிக்கவில்லை. தனியார்மயத்திற்கு மாற்று சாத்தி யமே என்பதைத் தெளிவாக்குகிற நடவடிக்கைகளை கேரளத்தின் இடது ஜனநாயக முன்னணி அரசு முன்னெடுத்துச் செல்கிறது.
நன்றி: தேசாபிமானி நாளிதழ் (10.9.2021),
தமிழில்: தி.வரதராசன்
கட்டுரையாளர் : சிபிஐ(எம்) கேரள மாநிலச் செயலாளர்,
இடது ஜனநாயக முன்னணி கன்வீனர்