articles

img

சம்பல்: நீதித்துறையின் அத்துமீறும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்

பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆஜ்மீரில் 12ஆம் நூற்றாண்டில் கட்  டப்பட்டது காஜா மொய்னுதீன் சிஷ்தி தர்கா. இந்த ஆஜ்மீர் தர்கா வுக்கு நாடு முழுவதிலும் இருந்து  முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து  மதத்தினரும் அதிக எண்ணிக்கை யில் வந்து செல்கின்றனர். இதனால்  ஆஜ்மீர் தர்கா நாட்டின் முக்கிய தர்  காக்களில் ஒன்றாகவும், புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகவும் உள்ளது. 

இந்நிலையில், தர்கா இருந்த இடத்தில் “சங்கட் மோர்ச்சன் மஹா தேவ்” எனும் சிவன் கோவில் இருந்த தாக ஆஜ்மீர் சிவில் செஷன்ஸ் நீதி மன்றத்தில் விஷ்ணு குப்தா என்பவர்  வழக்கு தொடர்ந்தார். 3 நாட்கள் தொடர் விசாரணைக்குப் பிறகு இந்த  வழக்குத் தொடர்பாக தர்கா நிர்வா கக்குழு, ராஜஸ்தான் மாநில சிறு பான்மைத் துறை மற்றும் இந்திய  தொல்பொருள் ஆய்வுத் துறையினர் பதில் அளிக்க ஆஜ்மீர் நீதிமன்ற நீதி பதி மன்மோகன் சண்டேல் நோட்டீஸ்  பிறப்பித்துள்ளார். இதனால் உத்த ரப்பிரதேச மாநிலம் சம்பலில் நிகழ்ந்  தது போல ஆஜ்மீரிலும் வன்முறை பதற்றம் நீடித்து வருகிறது.

யார் இந்த விஷ்ணு குப்தா?

ஆஜ்மீரில் வன்முறை பதற் றத்தை நீடிப்பதற்கு விஷ்ணு குப்தா  என்பவரின் வழக்கே காரணம் ஆகும்.  தில்லியைச் சேர்ந்தவரான விஷ்ணு குப்தா (பிறப்பு உத்தரப்பிரதேசம்) இந்துத்துவா அமைப்பான இந்து  சேனாவின் தலைவராக உள்ளார். இவர் ஆஜ்மீர் தர்கா தொடர்பான வழக்கை மட்டும் தொடர்ந்தவர் அல்ல. வெறுப்புப் பேச்சு மற்றும் மசூதி, தர்கா உள்ளிட்ட நீதிமன்ற வழக்குகள் மூலம் ஆர்எஸ்எஸ்-பாஜகவின் இந்துத்துவா அரசியல் நிகழ்ச்சி நிரலை தொடங்கி வைப்ப வர் இந்த விஷ்ணு குப்தா தான். அதா வது மதக்கலவரங்களை தூண்ட   ஆர்எஸ்எஸ்-பாஜகவின் பொறுப்பா ளராக விஷ்ணு குப்தா செயல்பட்டு வருகிறார்.

விஷ்ணு குப்தா இந்து சேனா  அமைப்பின் தலைவராக இருந்தா லும் ஆர்எஸ்எஸ், பாஜக, பஜ்ரங் தளம் ஆகியவற்றுடன் மிக நெருங் கிய தொடர்பு உடையவர். இவர் மீது  வன்முறையை தூண்டுதல், எதிர்க் கட்சி அலுவலகங்களின் மீது  தாக்கு தல் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய  விஷ்ணு குப்தா

கடந்த 2017இல் தில்லியில் உள்ள  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.ஜி பவனில் புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கில் விஷ்ணு குப்தா கைது செய்யப்பட்டார். இதே போல மேலும் பல்வேறு வழக்குகளிலும், பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்கு என பல்வேறு சர்ச்சைக்குரிய சம்ப வங்களில் ஈடுபட்டுள்ளார்.

விஷ்ணு குப்தாவும்... சர்ச்சையும்...

1.    கடந்த ஜூன் 2017இல் தில்லியில் உள்ள கேரள மாநில இல் லத்தில் மாட்டிறைச்சி வழங்கப் படுவதாக கூறி, தில்லியை வன் முறைக் களமாக மாற்றினார். இந்த சம்பவத்தின் மூலம் பாஜக
மாட்டிறைச்சி அரசியல் மேற் கொண்டது.

2.     உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனை தாக்கிய வழக்கிலும் விஷ்ணு குப்தா சந்தேக நபராக கைது செய்யப் பட்டார். இதே போன்று தில்லி, உத்தரப்பிரதேச மாநிலங்களில் அடிதடி உள்ளிட்ட நிறைய வன் முறைச் சம்பவங்களில் விஷ்ணு குப்தா ஈடுபட்டுள்ளார்.

3.     குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த கோத்ரா கலவரத்தில் பிரதமர் மோடிக்கு நேரடி தொடர்பு இருப்பதாக விமர்சிக்கும் பிபிசி ஆவணப்படத்தை தடை செய் யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது விஷ்ணு குப்தா தான். 

4.     ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை தில்லி முதல்வர் பதவியில் இருந்து நீக்க அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும் விஷ்ணு குப்தா தான் என்பது குறிப்பிடத்தக்கது.