மணிப்பூரில் இரு பிரிவின ருக்கிடையே இனக்கல வரம்தோன்றி பதினாறு மாதங்களாகிவிட்டன. நடை பெற்றுள்ள வன்முறைச் சம்பவங்க ளின் விளைவாக 250க்கும் மேற் பட்டோர் கொல்லப்பட்டிருக்கி றார்கள், பலர் காயம் அடைந்திருக் கிறார்கள். 60 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் புலம்பெயர்ந்து சென்று அகதிகளாக வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள்.
ஒன்றிய அரசாங்கமும், பாஜக மாநில அரசாங்கமும் இவ்வாறு இரு இனப்பிரிவினருக்கு இடையே மோதலுக்கு வழிவகுத்த அடிப்ப டைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாமல் பரிதாபமான முறையில் படுதோல்வி அடைந் துள்ளன. இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண வழிவகுக்காதது மட்டு மல்ல, அது மேலும் தீவிரம் அடை யக்கூடிய விதத்தில் நிலைமை கள் உருவாகவும் அனுமதித்திருக் கின்றன. குக்கி இனத்தவர் ஆதிக் கம் செலுத்தும் மலைப் பகுதிக ளுக்கும், மெய்டெய் இனத்தினர் ஆதிக் கம் செலுத்தும் பள்ளத்தாக்கிற் கும் இடையே ஓர் இடையக மண்ட லத்தை உருவாக்குவதற்காக 60 ஆயிரம் ஒன்றிய ரிசர்வ் போலீஸ் படைகள் நிறுத்தி வைக்கப்பட்டி ருக்கின்றன.
ஒருவர் பகுதிக்குள் மற்றொருவர் நுழைய முடியாத அளவு மோசமான நிலை
கடந்த பதினைந்து நாட்களில் அங்கே நிலைமைகள் மிகவும் சீர்கேடு அடைந்திருக்கின்றன. மெய்டெய் இனத்தினர் ஆதிக்கம் செலுத்தும் இம்பால் மேற்கு மாவட்டத்தில் கௌட்ரக் (Koutruk) என்னுமிடத்தில் செப்டம்பர் 1 அன்று ட்ரோன் (drone) மூலம் நடைபெற்ற தாக்குதலில் இருவர் கொல்லப் பட்டார்கள், ஒன்பது பேர் காயம் அடைந்தார்கள். இந்தத் தாக்கு தலுக்குப்பின்னே சில குக்கி போரா ளிகள் இருக்கக்கூடும் என நம்பப் படுகிறது. மற்றோர் இடத்தில் ஒரு ராக்கெட் தாக்குதலும் நடந்தி ருக்கிறது. செப்டம்பர் 6 அன்று ஜிரிபாம் மாவட்டத்தில் மூன்று ஆயு தந்தாங்கிய போராளிகள் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டார்கள். இரண்டு நாட்களுக்குப் பின்னர், குக்கி இனத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர், இம்பால் மேற்குப் பகுதியில் மெய்டெய் பகுதிக்கு செல்வதற்காக இடையக மண்டலத்தைக் கடந்த போது, அடித்தே கொல்லப்பட்டி ருக்கிறார். ஓர் இனத்தைச் சேர்ந்த வர்கள் மற்றோர் இனத்தைச் சேர்ந்த வர்கள் பகுதிக்குள் நுழைய முடி யாது என்பதே இப்போதுள்ள எதார்த்த நிலையாகும்.
சமீபத்தில் ஏற்பட்ட பல வன்மு றைச் சம்பவங்கள் காரணமாக இம்பால் மற்றும் பிற மாவட்டங்க ளில் மாணவர்கள் பெரிய அளவில் போராட்டங்களில் ஈடுபட்டனர். பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப் பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். குக்கி போராளி களுடனான ‘சஸ்பென்ஷன் ஆஃப் ஆபரேஷன்’ (SoO) ஒப்பந்தத்தை ரத்து செய்து, ஒருங்கிணைந்த கட்டளைக் கட்டுப்பாட்டை மாநில அரசுக்கு மாற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். காவல்துறையுடனான மோதல்கள் இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு மாவட்டங்களில் ஊர டங்கு உத்தரவு மற்றும் இணையம் மற்றும் மொபைல் தரவு சேவை களுக்கு தடை விதிக்க வழி வகுத்தது.
பாதுகாப்புப் படையைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை
இரு பிரிவினருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் மூலம் அரசி யல் பிரச்சனைகளைப் பேசித் தீர்க்கத் தவறியதன் காரணமாக, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவ தற்கும், இரு தரப்பினருக்கும் இடையே பிளவுபட்டுள்ள அமை தியைப் பேணுவதற்கும் அதீத மான முறையில் பாதுகாப்புப் படை யினரைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
இது மத்திய போலீஸ் படை களை, குறிப்பாக அசாம் ரைபிள்ஸ் படையை மிகவும் இக்கட்டான நிலையில் வைத்துள்ளது. அசாம் ரைபிள்ஸ் மற்றும் பிற மத்தியப் படைகளை திரும்பப் பெறுமாறு கோரும் மெய்டெய் அர சியல்வாதிகள் மற்றும் குழுக்கள் கோரி வரும் அதே சமயத்தில், குக்கி போராளிகள் ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளைப் பயன் படுத்துவது என்பது இந்த மோதலில் வெளி சக்திகள் ஈடுபட்டிருக்கக் கூடும் என்கிற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குக்கி போராளிக் குழுக்களுடனான இடைநிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை, முதல்வர் என்.பைரேன் சிங்கே கோரியிருக்கிறார். இவை அமல் படுத்தப்பட்டால் மலைப்பகுதிக ளில் மீண்டும் கிளர்ச்சிகளுக்கு வழி திறக்கப்படும், ராணுவம் அங்கே நிலைநிறுத்தப்படுவதற்கும் இடம் கொடுத்திடும்.
முதல்வரின் ஆதரவால் தீவிரமடைந்த பிரச்சனை
மெய்டெய் இனத்தினருக்கு பழங் குடியினர் அந்தஸ்து அளித்திட வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடங்கிய இயக்கம் மற்றும் குக்கி-ஜோ இனத்தினருக்குப் பின்னடைவு ஏற்பட்ட சமயத்தில், முதலமைச்சர் பைரேன் சிங் சில தீவிரவாத மெய்டெய் அமைப்புக ளுக்கு ஆதரவாக செயல்பட்டதன் காரணமாக பிரச்சனைகள் தீவிர மடைந்தன.
சமீபத்தில், கலவரம் குறித்து விசாரிக்கும் நீதித்துறை ஆணை யத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆடியோ கோப்பு, முதல்வர் தனது அதிகாரப் பூர்வ இல்லத்தில் பாகுபாடான கருத்துக்களைத் தெரிவித்ததை யும், மாநிலக் காவல்துறை ஆயுதக் களஞ்சியத்திலிருந்து ஆயிரக்க ணக்கான ஆயுதங்களைக் கொள் ளையடித்தவர்களை அவர் எப்படிக் காப்பாற்றினார் என்பதையும், அம்பலப்படுத்தியது. இரு இனத்த வருக்கும் இடையே பாரபட்ச மற்ற அணுகுமுறையைக் கடைப் பிடிக்க முதல்வர் பைரேன் சிங் மறுப்பதே பிரச்சனைக்கு அடிப்ப டைக் காரணமாகும்.
பிரித்தாளும் முதல்வரும் ஆதரிக்கும் ஒன்றிய அரசும்
முதல்வர் பைரேன் சிங் இரு இனத்தவரையும் பிரித்தாளும் சூழ்ச்சி மேற்கொண்டு வருவதை நன்கு தெரிந்திருந்தும், மோடி அர சாங்கமும், ஒன்றிய பாஜக தலை மையும், அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையே ஆதரித்து நிற்கின்றன. அரசியல் மட்டத்திலும் கூட, ஆர்எஸ்எஸ்-உம், பாஜக- வும் மெய்டெய் தீவிரவாதத்தின் தீப்பிழம்புகள் கொழுந்துவிட்டெ ரியும் விதத்தில், பிரச்சனைகளைத் தூண்டிவிடவே விரும்புகின்றன. இது தீவிரவாத அமைப்பின் நிறுவ னரான அரம்பை தெங்கோல் எல். சனஜோபா என்பவரை மாநிலங்க ளவை உறுப்பினராக்கி யிருப்பதி லிருந்தே தெரிய வருகிறது. இவ் வாறு இரு இனத்தவருக்கும் இடையே பிரச்சனைகள் தீர்க்கப் படாமல் இழுத்தடிக்கப்படுவது இரு இனத்திலும் உள்ள தீவிரவாத சக்திகளையே வலுப்படுத்தி இருக்கிறது.
கண்டு கொள்ளாத மோடி
மணிப்பூரில் எது நடந்தாலும் அதனை ஒன்றிய அரசு கண்டு கொள்ளாமல் இருந்துவருகிறது. மணிப்பூரில் பிரச்சனைகள் கொ ழுந்துவிட்டெரியத் தொடங்கி பதி னாறு மாதங்கள் ஆகியுள்ளபோ தும் இதுவரை ஒருதடவைகூட அங்கே சென்று வர வேண்டியது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி நினைத்துக்கூடப் பார்க்க வில்லை.
இப்போது என்ன தேவை? மணிப்பூரில் இயங்கிக் கொண்டி ருக்கும் முக்கிய இனக்குழுக்களு டன் அரசியல் பேச்சுவார்த்தை களை ஒன்றிய அரசாங்கம் நேரடியா கத் தொடங்கிட வேண்டும்,அனை த்துக் குடிமக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படக்கூடிய அமைதி மற்றும் இயல்பு நிலைக்கான சூழ் நிலையை உருவாக்கிட வேண்டும். இதுவே இப்போது அவசியத் தேவைகளாகும். இப்போது மணிப்பூரில் ஏற்பட்டுள்ள சீழ் வடிந்துகொண்டிருக்கும் புண் சரி செய்யப்படாவிட்டால், அது வட கிழக்கு மாநிலங்களுக்கும் பரவி கடும் விளைவுகளை ஏற்படுத்திடும்.
செப்டம்பர் 11, 2024,
தமிழில் : ச.வீரமணி