articles

img

பகத்சிங்கின் “துணைவியார்!”

கணேஷ்

லாகூரே கலகலத்துப் போயிருந்தது. சாண்டர்சைக் கொலை செய்து விட்டார்கள் என்ற செய்தி ஆங்கிலேயஅரசை உலுக்கி யிருந்தது. ஊர் முழுக்க காவல்துறை யினரின் தலைகள்தான். கண் ணில் பட்ட அனைவரையும் விசாரிக்கிறார்கள். கைக்குழந்தையுடன் நிற்கும் ஒரு பெண்மணியிடம் அருகில் நிற்பது யார் என்கிறார்கள். “எனது கணவர்...” என்று சொல்லிவிட்டு, அவர் கள் கேட்பதற்கு முன்பாகவே “அது எங்கள் குடும்ப வேலைக்காரர்” என்று மற்றொரு ஆணைப் பார்த்து கை நீட்டுகிறார். இவர்க ளின் பெட்டி, படுக்கையோடு அவர் நின்றி ருந்தார். நகன்றனர் காவலர்கள். கணவர் சென்று கல்கத்தா செல்வதற்கு முதல்தரப் பயணச் சீட்டை வாங்கிக் கொண்டு வருகிறார். ரயிலிலும் ஏராள மான கெடுபிடிகள் - சோதனைகள். குடும்பத் தோடு செல்வதால் இவர்களுக்கு தனி அறை கொடுத்திருந்தார்கள். வேலைக் காரர் இரண்டாம் வகுப்பு பெட்டியில் ஏறிக் கொண்டார். கான்பூரில் இருந்து வேறு ரயிலுக்கு மாற வேண்டும். வேலைக்காரர் அங்கே இறங்கிக் கொண்டார். கைக்குழந்தை யுடன் கணவனும், துணைவியாரும் கல்கத்தா சென்றனர்.  கல்கத்தா ரயில் நிலையத்திலேயே, கணவருக்கு விடை கொடுத்து விட்டு, தில்லி ரயிலைப் பிடித்தார் துணைவியார். தனக்கு அளிக்கப்பட்ட வேலையைக் கச்சிதமாகச் செய்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் தனது “இமாலயன் டாய் லட்ஸ்” என்ற நிறுவனத்திற்குத் திரும்பி னார். இது தில்லியில் இருந்தது. சோப்பு தயாரிக்கும் நிறுவனமாக வெளியுலகுக்கு தெரிந்தது. ஆனால், உள்ளே வெடிமருந்து  களைக் கையாண்டு கொண்டிருந்தார்கள்.  இவர்தான் துர்காவதி தேவி. கல்கத்தா ரயில் நிலையத்தில் அவர் பத்திரமாகக் கொண்டு சேர்த்துவிட்டது வேறு யாரை யுமல்ல, பகத்சிங்கைத்தான். பகத்சிங்கின் இந்துஸ்தான் சோசலிச புரட்சிகர அமைப் பில் துர்காவும் தீவிர உறுப்பின ராக இருந்தார். அவரோடு அவ ரின் இணையர் பகவதி சரணும் இயக்கத்தில் தீவிரமாக பணி யாற்றினார். டிசம்பர் 17, 1927ஆம் தேதியன்று பகத்சிங்கும் அவ ரது தோழர்களும் சாண்டர் சைச் சுட்டுக் கொன்றனர். அவர் களது குறி லாலா லஜபதிராயின் மரணத் திற்குக் காரணமான அதிகாரி ஸ்காட் என்பது தனிக்கதை. லாகூரை சல்லடை போட்டுச் சலித்துக் கொண்டிருந்தபோதுதான், பகத்சிங்கைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பொறுப்பை துர்கா ஏற்றுக் கொண்டார். மற்சொரு புரட்சியாளர் ராஜகுருவைத் தான் வேலைக்காரர் என்று அவர் சொன் னார். அவரது குழந்தையை எடுத்துக் கொண்டு பகத்சிங்கின் “துணைவியா ராக” கல்கத்தா வரை சென்றார். தனது தலைமுடியை வெட்டிக் கொண்டும், தாடியை மழித்தும் ஒரு ஆங்கிலோ இந்தி யர் மாதிரி பகத்சிங் இருந்ததால் காவலர் களுக்கு அவரை அடையாளம் தெரிய வில்லை. காவலர்கள் தேடிக் கொண்டிருந்தது ஒரு சீக்கியரை அதோடு, அவர் ஒரு பிரம்மச் சாரி என்பதும் கூடுதல் தகவலாகும்.  இணையர் பகவதி சரண் 1930 ஆம் ஆண்டில் ஒரு நாள் ராவி நதிக்கரையில் வெடிகுண்டை பரிசோதித்துக் கொண்டி ருந்தபோது அது வெடித்ததால் இறந்து போனார். இருப்பினும் தனது போராட்டத் தை துர்காவதி தேவி தொடர்ந்தார். இந்துஸ்தான் சோசலிச புரட்சிகர அமைப்பைக் கலைத்தபிறகு 1939 ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்து மாண்டி சோரி பயிற்சியைப் பெற்ற துர்காதேவி ஏழைக்குழந்தைகளுக்காக பள்ளியைத் தொடங்கி கற்பிக்கும் பணியைச் செய்தார். 1999 ஆம் ஆண்டு துர்கா தேவி மறைந்தார்.

 படம்: அமர் சித்ரகதா (மார்ச் 23 பகத்சிங்கின் நினைவு நாள்)